Wednesday 11 November 2009

தேடல்


வாழ்கையில் தேடல் எப்பொழுது தொடங்குகிறது. யோசித்துப் பார்த்தால், ஒரு உயிர் ஜனிக்கும் பொழுதே தொடங்குகிறது.

பிறந்த சிசு பாலுக்கு மடி தேடல்,
வளரும் பொழுது அன்பு தேடல்
அரவணைப்புத் தேடல்,
பிறகு அறிவுத் தேடல்
சிறுவயதில் நட்புத் தேடல்,
தொடர்ந்து அறிவுத் தேடல்
பிழைக்க வேலைத் தேடல்
தொடரும் பொருள் தேடல்
தேடிய பொருளை பாதுகாக்க இடம் தேடல்
உற்ற துணைத் தேடல்
துணையிடம் அன்புத் தேடல்
ஓயாது நிம்மதித் தேடல்
இன்ன பிறத் தேடல்கள்.

பிறக்கு குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் தேடல்
தொடர்ந்து படிக்க பொருள் தேடல்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு வேலைத் தேடல்
அவசியமிருந்தால் அவர்களுக்கு துணைத் தேடல்
தேடல் முடியும் வேளையில் தனியாக விடப்பட்டு
தொடரும் அன்புத் தேடல்கள்

எத்தனைத் தேடலடா
என்றும் முடிவதில்லையடா.
நரைக் கூடிக் கிழப் பருவம்
வந்து நாளை என்னும் பொழுதும்
தொடரும் துணைத் தேடல்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

பித்தன் said...

அருமை.... தேடல்கள் பலவிதம், பதிவுக்கு கரு தேடல் கூட அதில் சேரும்....

கார்த்திகைப் பாண்டியன் said...

தேடல்கள் எல்லாமுமே நிதர்சனம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

நடுவுல நடுவுல எங்கப்பா ஆள் காணாம போயிடுறீங்க?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.