Sunday 20 December 2009

மண்ணாங்கட்டியின் சந்தேகம்-தெலுங்கானா.


ஏனுங்கோ நான் மண்ணாங்கட்டி, மறுபடியும் வரேனுங்கோ. நம்ம பக்கத்து மாநிலத்துலே இன்னாங்கோ ஒரே கலீஜா, கலட்டவா கீது.ஏனுங்கோ இந்த தெலுங்கானாப் பத்தி நொம்ப நாளா பேசிக்கிறானுங்கோ, எனிக்கித் தெரிஞ்ச எங்க அப்பாரு காலத்திலேயே இந்தப் பிரச்சினை இருந்துகீதுங்கோ.

அத்தே விடுங்கோ இந்த சந்திர சேகர ராவ் ஏதோ உண்ணாவிரதம் இருந்தாரு சரிங்கோ, அத்தே நிறுத்த குண்டுகட்டா பிடிச்சு உள்ளே போட்டிருந்தா அல்லாம் சரியா பூடுமே, அத்தே வுட்டுட்டு தெலுங்கானா பிரிச்சிடலாம், ஹைதராபாட தலை நகராகிடலாம், நம்ம செட்டியாரு பேச சொல்ல இப்போ ஆந்திர எரியிதுங்கோ.

நடுவால ஒருக் கும்பலு நம்ம சென்னைக்கு வர தண்ணிய நிப்பாட்ட கண்டலேருக்கிட்டே ஆபிஸ அடிச்சிக்ரானுங்கோ. நம்ம ஊருலே ஒரு சொலவடை உண்டுங்கோ, "தென்ன மரத்துலே தேள் கொட்டினா, பனே மரத்துலே நரி கட்டிக்குமாம்". அது போலதான் கீது இவனுக ஊருலே ஏதோ ஒரு கேனயன் பிரச்சினைய ஆரம்பிப்பான், நம்மா ஊரு ஏதாவது சொல்லுவானுங்கோ, அவ்ளவுதான் நமக்கு வர தண்ணிய புடுங்கிடுவானுங்கோ. ஏற்கனவே கர்நாடகாகாரன் எங்களுக்கு அப்போப்போ டார்ச்சர் குடுத்துகின்னு கிரான். நாங்களே இந்த வருஷம் எத்தனை போகம் போடலாம், இன்னா போடலாமுன்னு யோசிக்க நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க வேண்டியதாயிடுச்சு.

முன்னே எல்லாம் அப்படி கிடையாதுங்கோ, காலைலே எழுந்தோமா, கஞ்சி குடிச்சிட்டு, தொ கிறானே இந்த மருதுப் பையனையும், இன்னும் சில சித்தாளையும் இட்டாந்தோமா, பொழுது சாயர வரைக்கும் வயலிலே வேலைதான்.

இப்போயெல்லாம் அப்படி இல்லைங்க, நாத்து நடனுமா, பயறு போடனும்மான்னு முடிவு பண்ண நாட்டு நடப்ப தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

எனக்கு ஒரு யோசனை தோனுதுங்கோ, ஆனா நாம சோனா யாரும் கேட்கமாட்டானுங்கோ.

பேசாம அல்லா மாநிலத்தையும், எத்தனை பார்ட்டி இருக்கோ அத்தனை பாகமா பிரிச்சிட்டா, எல்லா பார்ட்டிக்கும் பவர் இருக்கும், சம்பாதிக்கலாம். இப்போ மகாராஷ்டிரா மாநிலத்திலே மூணு பார்ட்டி இருக்குதுன் வச்சிக்கிங்கோ, காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி மகாராஷ்டிராவ மூனா பிரிச்சு ஆளுக்கு குடுத்திடலாமே. தமிழ் நாட்டே பிரிச்சு, அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், பா.ம. க, தி. தி மு. க ஒரு பத்து கட்சி இருந்தா ஆளுக்கு ரெண்டு ரெண்டு மாவட்டமுன்னு கொடுத்திடலாம்.

இப்படி சொன்னா, நம்ம மருது நக்கலடிக்கிறான், இன்ன நீ கேனத்தனமா பேசுறே, கட்சியிலே கோஷ்டியிருந்தா என்னாப் பன்றதான் அப்படிங்கிறான் அதிகப் பிரசங்கி.

லே மருது போய் வேலையைப் பாருலே.
நான் சொன்னது நடக்கத்தான் போகுதுலே,

நம்மைச் சென்னையே, சைதாபேட்டை, கிரோம்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை, தேனாம்பேட்டை, வண்ணாரபேட்டை, கொருக்குபேட்டையுன்னு தனி தனி கட்சி ஆளபோகுதா இல்லையாப் பாருலே.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நம்மைச் சென்னையே, சைதாபேட்டை, கிரோம்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை, தேனாம்பேட்டை, வண்ணாரபேட்டை, கொருக்குபேட்டையுன்னு தனி தனி கட்சி ஆளபோகுதா இல்லையாப் பாருலே. //

ந‌ட‌க்க‌லாம் இன்பாவும் ஆதித்யாவும் அர‌சிய‌லுக்கு வ‌ரும் போது

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.