Tuesday 30 March 2010

பென்னாகரம் தேர்தலடா......


பென்னாகரம் தேர்தலடா
பெரிசா வந்து போனதடா
கண்ட கண்ட கட்சியடா
காசை அள்ளிக் கொட்டுதடா

கருப்புக் கட்சி “கம்மல்”டா
மஞ்சக் கட்சி “மூக்குத்தி”டா
நீலக் கட்சி “கட்டிங்” டா
பச்சைக் கட்சி “கத்தை”யடா

வண்ண வண்ண சேலையடா
வரிஞ்சுக் கட்ட வேட்டியடா
பட்டா பட்டி இல்லையடா
பக்குன்னு ஆகுதடா


கட்டிங் வுட்ட கணவன் எல்லாம்
கண்மணிகளின் கையை முறுக்கி
முதுகினிலே மொத்துதடா
காலடியில் தங்கமடா

பிச்சை எடுக்கும் பெருமாளடா
லெக்பீசு பிரியானியடா
சரக்கடிச்ச “ஜனா”டா
சரசாவோட “ஜல்சா”டா

மப்பு இறங்கிப் போகுதடா
மண்டை மெர்சல் ஆகுதடா
மறுபடியும் தேர்தல் வர
மனசு ரொம்ப ஏங்குதடா

இப்படியே தேர்தல் வந்தால்
ஆணி புடுங்க வேண்டாமடா
பில்கேட்ஸ் பிர்லா எல்லாம்
பின்னாடி வருவானடா

அடிக்கடியே தேர்தல் வர
அடிமனசு ஏங்குதடா
உடுக்கடிச்சு கூழ் ஊத்தி
கருப்புசாமிக்கு கிடா வெட்டி
படையல் வைக்கப் போறோம்டா

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் கவிதை சார்....

அடுத்த தேர்தலுலில் சந்திப்போம் மக்களே..

-இவன் அரசியல்வாதி

கும்மாச்சி said...

பட்டா பட்டி ஸார் பென்னாகரம் வெச்சு நீங்களும் ஒரு பதிவ போட்டுட்டிங்க, அடுத்த இடைதேர்தலில் சிந்திப்போம்.

இராகவன் நைஜிரியா said...

// அடிக்கடியே தேர்தல் வர
அடிமனசு ஏங்குதடா
உடுக்கடிச்சு கூழ் ஊத்தி
கருப்புசாமிக்கு கிடா வெட்டி
படையல் வைக்கப் போறோம்டா //

ஆஹா... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..

கும்மாச்சி said...

ராகவன் வருகைக்கு நன்றி

தமிழ்நாட்டு நிலைமை இப்போ இப்படித்தான். .

Subu said...

பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

ரவி said...

கலக்கிட்டீங்க.......

அஹோரி said...

அருமை. கருணாநிதிக்கு ரெண்டு காப்பி அனுப்ப்ங்க.

கும்மாச்சி said...

செந்தழல் ரவி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

அஹோரி வருகைக்கு நன்றி, காபி அனுப்பிச்சா திருந்திடுவாங்களா? நடக்காது ஸார். .

Chitra said...

கட்டிங் வுட்ட கணவன் எல்லாம்
கண்மணிகளின் கையை முறுக்கி
முதுகினிலே மொத்துதடா
காலடியில் தங்கமடா


...... இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்கப்படாது. ஹா,ஹா,ஹா.....

கும்மாச்சி said...

சித்ரா மப்புல உண்மை தானா வருது. ஹி.ஹி.

பனித்துளி சங்கர் said...

////இப்படியே தேர்தல் வந்தால்
ஆணி புடுங்க வேண்டாமடா
பில்கேட்ஸ் பிர்லா எல்லாம்
பின்னாடி வருவானடா////



அடாடா!!! எத்தன டா !!!
கலக்குங்க !!

Ramesh said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...இத போயி பாட்டா பாடிக்கிட்டு...மேல இருக்கிற பாப்பா ஜெயிச்சுதா இல்லையா? கோவிச்சுக்காதீங்க நம்ம அரசியல் அறிவு அவ்வளவுதான், அதான் சந்தோஷமா இருக்கிறேன்.

கும்மாச்சி said...

பாப்பாதான் அடுத்த “இடை” தேர்தலில் நம்ம கட்சி வேட்பாளர்

அண்ணாமலை..!! said...

நல்ல.. அருமையான‌ கவிதை!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.