Tuesday 4 May 2010

உழைப்பவன் "கூமட்டை"- இன்றைய தமிழகம்


கோவாலு வந்துகிறான், அஞ்சு வருஷம் முன்னாடி ஆந்திராகாரிய இஸ்துகின்னு ஓடினவந்தான் இப்போ வந்துகிறான், புள்ள குட்டியோட,

நம்மளாண்ட கேக்குறான். இன்னா பண்ணிகினுகிறேன்னு.
“சொம்மாகிறேன்”னா, நம்மளாண்ட ஊதார் காமிக்கிறான்.

இவன் ஆந்திராவிலே நெலத்தை வைச்சு உழுதுகின்னுகிறான்.

நாங்க இன்னா “கூமட்டையா?” வேலை செஞ்சு பொழைக்க.

சாப்பாட்டுக்கு இன்னா பண்றேன்னு கேக்குறான்.

அதான் ரேசன்ல ஒரு ரூவாய்க்கு அரிசி கொடுக்கிறாங்க.
அதை உலையிலே போட அடுப்பு கேசும் இலவசம்.

கறி சோத்துக்கு இன்னா செய்வேன்னு நம்மளே மடக்குறான்.
அடப்போடா கேனப்பயலே, நாங்க இன்னா உன்னிய மாதிரி பொண்டாட்டிய உக்கார வெச்சு சோறு போடுவோமா, பொண்டாட்டிய கட்டிட வேலைக்கு அனுப்பிச்சு கறிக்கும் சரக்குக்கும் ஏற்பாடு பண்ணுவோம்.

பொண்டாட்டி பிரசவத்துக்கு அரசாங்கம் "ஐயாயிரம்" ரூவா கொடுக்கிறாங்க, எப்படியும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா வாங்கிடுவோம்.

ஏண்டா உழைக்காம பொழுத எப்படி போக்குறேன்னு கேக்குறான்.

அதான் அரசாங்கம் இலவசமா டிவி பொட்டி கொடுக்கிறாங்க, அதப்போட மின்சாரம் இலவசம்.

சும்மா நாள் முயுக்க, மானாட மயிலாட, படம், பாட்டு, எல்லாம் பாத்துக்கின்னு இருப்போம்.

சும்மா குந்திக்கின்னு சீக்கு வந்தா இன்னா பண்ணுவேன்னு கேக்குறான், வெவரம் புரியாம.

அடப் போடா டோமரு, எங்களுக்கு குடும்பத்தோட மருத்துவ செலவு இலவசம், அரசாங்கமே பாத்துகிது.

விடாம திரும்ப நம்மளையே மடக்குறான்.

புள்ளைங்கள எப்படி படிக்க வைக்கிறதாம் அப்படிங்கிறான்.

போடா லூசு, எங்கத் தமிழ் நாட்டில, புள்ளைங்க படிப்பு, சத்துணவு, முட்டை அல்லாம் இலவசம், ஒரு முட்டை இல்லை ரெண்டு முட்டை.

அதுங்க பள்ளியோடம் போக பஸ் பாஸ் இலவசம், வேணுன்னா சைக்கிளும் இலவசம்.

பொண்ணு வச்சிக்கிரேயே கண்ணாலத்துக்கு இன்னா பண்ணுவேன்னு கொக்கி போடுறான்,

போலே போக்கத்தவனே பொண்ணு வயசுக்கு வந்தா எங்க நாட்டுல கண்ணாலத்துக்கு இருபத்தைந்தாயிரம் அரசாங்கம் கொடுக்குது, அப்புறம் இன்னா கவலை, தாலிக்கு தங்கம் கொடுக்கிறாங்க, அது பிரசவ செலவுக்கும் காசு ஐயாயிரம் நியாபகம் வச்சுக்க.

எங்கத் தமியினாட்டுலே உன்னிய மாதிரி உழைக்கிற கேனயனுக்கு இன்னா தெரியுமா பேரு "கூமட்டை".

மவனே அப்பால நம்மகிட்டிய வரவேயில்லியே, ஆந்திராக்காரிய இட்டுக்கின்னு நெல்லூரான்டப் போயிட்டான்.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

கத்தார் சீனு said...

சிரிப்பதா ??? அழுவதா ??? என்று தெரிய வில்லை !!!
தமிழன் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது !!!
எப்போது வரும் மாற்றம் ???

settaikkaran said...

இன்னாமா கலாய்ச்சிகீறே வாத்யாரே! மெய்யாலுமே டக்கரா கீதுபா!

கும்மாச்சி said...

சீனு, மாற்றம் நம் கையில்தான் உள்ளது. காலம் வரும்.

கும்மாச்சி said...

சேட்டை, நன்றி.

Chitra said...

எங்கத் தமியினாட்டுலே உன்னிய மாதிரி உழைக்கிற கேனயனுக்கு இன்னா தெரியுமா பேரு "கூமட்டை".


....... வோட்டு வாங்குவதற்காக, அவர்களை இப்படியே கூமட்டைகள் ஆக வைத்து இருக்கிறார்கள்..... சொரணை கெட்டு போச்சு. புளப்பு சிரிப்பா சிரிக்குது.

கும்மாச்சி said...

சித்ரா வருகைக்கு நன்றி.

இன்னும் நிறைய இலவசங்கள் தேர்தல் சமயத்தில் வரும், ஒன்றும் பண்ணமுடியாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கூமுட்டை ஆஜர் சார்...ஹா..ஹா..
நக்கல்+நையாண்டி சூப்பர்...

மாற்றம் வரும் சார்...

Unknown said...

Hi! you really beleive these schemes make people lazy!Please suggest some schemes to raise the peoples standard of living. You can not suggest a scheme without touching above schemes which u mentioned as reasons for laziness!

Maathiyoshi

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

maathi said...

Hi! you really beleive these schemes make people lazy!Please suggest some schemes to raise the peoples standard of living. You can not suggest a scheme without touching above schemes which u mentioned as reasons for laziness!

Maathiyoshi
//

வாங்க மாற்றியோசி..
சரிங்க..இப்ப நீங்க சொல்லுங்க..
இப்படி இலவச திட்டத்தால..மக்கள் எப்படி முன்னேறியிருக்காங்கனு?.

கும்மாச்சி said...

இலவசமா எல்லாம் கிடைத்தால் எவனும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.