Wednesday 1 September 2010

நான் எப்படி பதிவரானேன்?

ஓடி ஓடி ஆணி பிடுங்கிய என்னை குத்த வச்சு ஆணி பிடுங்க வச்சுட்டான் டேமேஜர். போதாகுறைக்கு ஒரு சப்ப மூஞ்சி செக்கரேடரி வேற இல்லாத ஆணியப் பிடுங்க. ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியலை. மூன்றாம் நாள் டேமஜரிடம் போய் சார் இங்கே ஆணியே இல்லை ஸார், என்னை பழைய இடத்திலேயே போஸ்ட் பண்ணிடுங்க ஓடி ஓடி ஆணி பிடுங்கறேன் ஸார்னு கெஞ்சினா, போயா போய் ஒரே ஆணியே அடிச்சு அடிச்சு பிடுங்குன்னு கடுப்பேத்தி அனுப்பிச்சுட்டான்.


ரிசெஷன் டைம் இதுக்கு மேலே கேட்டா இந்த ஆணிக்கே ஆப்பாயிடும் என்று ஒரே ஆணிய அடிச்சு அடிச்சுப் பிடுங்கிட்டு இருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் ஒரே ஆணி அடிச்சு அடிச்சு பிடுங்கினதுல தலை மொண்ணை ஆயிடுச்சுன்னு, பக்கத்து ஆபீஸ் நண்பனை பார்க்கப் போனேன். அவன் ஐ.டி டிபார்ட்மென்டில் இல்லாத ஆணியப் பிடுங்குறபய.

என்னை பார்த்தவுடன் நீ எங்கேடா இங்க ஆபீஸ் பக்கம், நீ சைட்ல ஆணி பிடுங்கறவனாச்சே? என்று எதோ பைவ் ஸ்டார் ஹோட்டலில் நுழைந்த பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறான். சரி அவனோட டீ குடிக்கும் பொழுது ஆபீசில் கணினியில் எல்லா தமிழ் பத்திரிகைகள், ப்ளாக் எல்லாம் படிச்சிட்டிருக்கான். ஏண்டா உனக்கு வேலை கிடையாதா என்றால், சும்மா நொன்ன பேச்சு பேசாத, வந்தோம டீ குடிச்சமா அப்படியே போய்க்கினே இரு அப்படின்றான். அப்புறம் அவன்தான் எனக்கு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லிக்கொடுத்தான். இதில என்னடா எழுதறதுன்னு கேட்டா எதவேனுன்னா எழுது சும்மா ரப்ச்சர் பண்ணாதே போய்க்கினே இருன்னுட்டான்.

சரின்னு வீட்டுக்கு வந்து இன்னா எழதுறது அப்படின்னு யோசிச்சு எவனோ ஒரு திருமவன் பழத்தின் பெருமையெல்லாம் எழுதினதை கோப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவுப் போட்டேன். ரெண்டு நாள் பார்த்தேன் எவனும் சீண்டினதா தெரியலே. அடுத்து கொஞ்சம் சுமரா ரூம் போட்டு யோசிச்சு ஒன்னு எழுதி அடுத்தப் பதிவப் போட்டேன். அது தமில்ஷ்ள ஒரு நாலு ஒட்டு வாங்கி அங்கேயே நின்னுது.

அதே பதிவிலேயே நான் புத்தம் புது கன்னிப் பதிவர் அதால ஓட்ட நல்லா குத்துங்கப்புன்னு ஓரு வேண்டுகோளையும் போட்டேன். அதுக்கு ஒரு மவராசன் இந்த மாதிரி அழுவர வேலை எல்லாம் வச்சிக்காத, நிறையப் படி, நல்லா எழுது, அப்புறம் முதலில் உன்னோட அவதார்ல ஒரு அட்ட பிகர போட்டிருக்கியே அத மாத்து அப்படின்னு அறிவுரை பின்னூட்டம் கொடுத்துட்டான். போதாகுறைக்கு அவனோட முதல் பதிவு ஐம்பது ஒட்டு வந்கிச்சின்னு டிஸ்கி வேறு.அந்த இரண்டாவாது பதிவு முக்கி முக்கி எட்டு ஒட்டு வாங்கி பிரபலமாக அப்படியே நின்னுச்சு.

இதெல்லாம் வேலைகாவதுன்னு இந்த முறை குத்த வச்சி யோசிச்சு பழைய அனுபவமா “துணை நடிகையும் வாழைக்காயும்” அப்படின்னு போட்டேன். அது மவனே நிறைய ஓட்ட வாங்கி பிரபலமாச்சு.

அடடா மவனே தலைப்புல கீதுடா சூட்சுமம் அப்படின்னு யோசிச்சு, “அத்தையுடன் நாங்கள் கண்ட பிட்டு படம்” “மொட்டை பாப்பாத்தி குட்டைல விழுந்தா” “என் கடப்பாரையும், சரோஜாவின் தேக்சாவும்”, அப்படி இப்படின்னு தலைப்பு குடுத்து இப்போ சுமார போவுது.

இப்போ மறுபடியும் அந்த வெறும்பய ஐ.டில ஆணி பிடுங்கறவன் பார்த்துட்டு எப்போ பிரபல பதிவர ஆகப்போறேன்னு கேட்கிறான். அடபோடா அதுக்கு எல்லாப் பதிவரையும் வம்புக்கு இழுக்கணும், எதிர் பதிவு போடணும், மோட்டுவளைய பார்த்துக்கிட்டு குந்தனும், ஓடி ஓடி ஆணி புடுங்கி நானே அம்பேல் ஆயிட்டேன். அவனாண்ட “ஏண்டா பிரபல பதிவர்ன இன்னாடா” ன்னு கேட்டேன்.

மவனே இப்போ என்னப் பார்த்தா காலிடுக்கில வால வுட்டுகின்னு ஓடற பொட்டை நாய் போல ஓடுறான்.

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்போ மறுபடியும் அந்த வெறும்பய ஐ.டில ஆணி பிடுங்கறவன் பார்த்துட்டு எப்போ பிரபல பதிவர ஆகப்போறேன்னு கேட்கிறான்

//


இந்த வெறும் பய நானில்லையே

பித்தன் said...

நானும்தான் உங்களைப் பார்த்து...

Chitra said...

அதானே? பிரபல பதிவர் என்றால் யாருங்க? :-)

எஸ்.கே said...

ரொம்ப ஜாலியா எழுதறீங்க! வாழ்த்துக்கள்!

Jey said...

//அவனாண்ட “ஏண்டா பிரபல பதிவர்ன இன்னாடா” ன்னு கேட்டேன்.

மவனே இப்போ என்னப் பார்த்தா காலிடுக்கில வால வுட்டுகின்னு ஓடற பொட்டை நாய் போல ஓடுறான்.//

ஹஹஹா, சூப்பர்.

நாமெல்லாம்... எப்ப எழுத நினைச்சோமோ... அப்பவே பிரபலம் ஆய் போய்ட்டோம்ணே....:)

goget99 said...

கும்மாச்சி எழுத்து நடை ரொம்ப Super.
Title-ஐ மாத்திரம் அப்படி இப்படி கொடுத்தா இன்னும் கொஞ்சம் Attractive-ஆக இருக்கும்!

Anonymous said...

//அடடா மவனே தலைப்புல கீதுடா சூட்சுமம் அப்படின்னு யோசிச்சு //
ரைட்டு!
சரி இந்த பதிவுக்கு எதுக்குண்ணே பொண்ணு படம்?
அத பாத்துத்தான் உள்ள வந்தேன்னு தப்பா நினைக்காதிங்க!

ப.கந்தசாமி said...

"தலைப்புல கீதுடா சூட்சுமம்"

சூட்சமத்தைப் புடிச்சிட்டீங்க இல்லே, இனி உங்க பதிவு டாப் கீர்தான்.

geethappriyan said...

கும்மாச்சி நண்பரே
உங்க வெற்றியே பாசாங்கு இல்லாமல் எழுதுவது தான்.
அருமையா எழுதுனீங்க,நீங்களும் பிரபலம்தான்.ஒத்துக்கறேன்.:))ஆமாம் உங்களுக்கு ப்ரொஃபைல்ல 58 வயசுன்னு போட்டிருக்கேன்,அது உண்மையா?

கும்மாச்சி said...

கீதப்ரியன் சத்தியமா 58 இல்லீங்க அதுக்கு இன்னும் பல வருஷம் இருக்கு.

கும்மாச்சி said...

கந்தசாமி ஸார் உங்கள் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஜே உங்கள் கூற்று உண்மை, அதிலும் மிகவும் குறுகிய காலத்தில் பிரபலமாகிய உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கும்.

கும்மாச்சி said...

சித்ரா பிரபலப் பதிவர் யாருன்னு ரொம்ப அடக்கத்தோட கேக்குறீங்க, ஒரு பதிவுக்கு குறைந்தபட்சம் அறுபது பின்னூட்டம் வாங்கும் உங்களைப் போன்ற பதிவர்கள்தான்.

Tech Shankar said...

Vow.

//இப்போ மறுபடியும் அந்த வெறும்பய ஐ.டில ஆணி பிடுங்கறவன் பார்த்துட்டு எப்போ பிரபல பதிவர ஆகப்போறேன்னு கேட்கிறான். அடபோடா அதுக்கு எல்லாப் பதிவரையும் வம்புக்கு இழுக்கணும், எதிர் பதிவு போடணும், மோட்டுவளைய பார்த்துக்கிட்டு குந்தனும், ஓடி ஓடி ஆணி புடுங்கி நானே அம்பேல் ஆயிட்டேன். அவனாண்ட “ஏண்டா பிரபல பதிவர்ன இன்னாடா” ன்னு கேட்டேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.