Wednesday 15 September 2010

வீடு

செங்கலும், மரமும் வைத்துக் கட்டி


தங்க இடமும், பாதுகாப்பும் தந்ததால்

எங்கள் மதிப்பினில் வீடாகியதா? இல்லை

அன்பைக்கொட்டி பல கதைகள் சொல்லித்தந்த

பண்பை வளர்த்த தாத்தா அறையினாலா?

மென்மையாக எங்கள் தலையை கோதி

அன்பை விதைக்கும் பாட்டியினாலா?

அடுப்படியில் உழன்று எல்லோரின்

அடிப்படை தேவைகளை அல்லும் பகலும்

அயராது தரும் என் அன்னையின் இடமா?

நாளெல்லாம் உழைத்து இந்த வீட்டின்

மாளாத தேவைகளை பூர்த்தி செய்து

ஓய்வெடுத்து உறங்கும் அப்பாவின் அறையா?

மழை நீரில் காகிதக் கப்பல் விட

ஏதுவாகும் எங்கள் முற்றமா?

மாவும் தென்னையும் நெடிது நின்று

பூக்கள் பூத்துசொரியும் தோட்டமா?

உற்றமும் சுற்றமும் அல்லும்பகலும்

வந்து செல்லும் வாசலா?

வீடு என்பது எது?

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Chitra said...

Where we love is home - home that our feet may leave, but not our hearts.
~Oliver Wendell Holmes, Sr.


It takes hands to build a house, but only hearts can build a home. ~Author Unknown

கும்மாச்சி said...

மிக சரியான கருத்து சித்ரா, வருகைக்கு நன்றி.

vasu balaji said...

மனசு:)

கார்த்திகைப் பாண்டியன் said...

வீடுகள் இன்னைக்கும் உயிர்ப்போடதான் இருக்கா?

velji said...

kavithai arumai!

house is a building!

home is a living place!

jothi said...

அழகான வீடும், ஆழ்பொருட் கவிதையும்,.கலக்கல் கும்மாச்சி

நிலாமதி said...

வீடு என்பது பிரியம் சமைக்கின்ற கூடு....எல்லோருடைய அன்பாலும்
தான் கட்டப்படவேண்டும். .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அன்பே சிவம்......

சசிகுமார் said...

நம் கவலைகளை மறக்கும் இடம்.

நிலாமகள் said...

சரியாச் சொன்னீங்க ... செங்கல்லும், மரமும் மட்டுமல்ல... உறவும் அது தரும் இதமும் தான் வீடு! சித்ராவும் ரொம்ப அழகாச் சொன்னாங்க.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.