Tuesday 7 September 2010

கந்தன் வளைகுடாதிரும்பி (Gulf return)

கடன உடன வாங்கி


கைய கால புடிச்சி

காசு மேல காச வச்சி

கல்லிவெள்ளி விசா வாங்கி

கள்ளத்தோணி ஏறி

கடல் கடந்து

கடும் வெய்யிலில்

கட்டிடங்கள் கட்டும்

கடினத் தொழிலில்

காசு பணம் சேர்த்து

கனவுலகில் வாழ்க்கை.





காலம் பல கடந்து

ஊருக்குத் திரும்புகையில்

உற்ற சுற்றம் கூடி

பெட்டி பிரித்து

பொருட்கள் சூறையாடல்

பரிவுடனே தாயிடம்

உனக்கு என்ன வேணும்

என்று வினவ

“கந்தன் நல் வாழ்வு”.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Chitra said...

touched by mother's love. :-)

ravikumar said...

Nice to read

கும்மாச்சி said...

சித்ரா, ரவிகுமார் வருகைக்கு நன்றி

ராம்ஜி_யாஹூ said...

அருமை.

என்னதான் நாம் அமெரிக்க, துபாய் பொய் choclate, நகை, துணிகள் வாங்கி வந்தாலும் நம் நாட்டிற்க்கு வந்ததும் , நம்மை பார்த்ததும் அம்மா பேசும் முதல் வார்த்தையே, சாப்பிட்டியா, என்னப்பா இளைச்சு போய்டே என்பது

vasu balaji said...

நல்லாருக்கு:)

எஸ்.கே said...

மற்றவர் எதை வேண்டினாலும் தாய் எதிர்பார்ப்பது பிள்ளையின் நல்வாழ்வு மட்டுமே!
அருமையான கவிதை

அலைகள் பாலா said...

நல்லா இருக்கு.

ஹேமா said...

உறவுகளின் பாசத்திற்கும் தாயின் பாசத்திற்கும் நிறம் வேறுதான் கும்மாச்சி.

Anonymous said...

Nice :)

பித்தன் said...

amma ennaikkume ammaathaan maththathellam summaa... arumaiyaana kavithai.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.