Tuesday 1 February 2011

கலக்கல் காக்டெயில்-19

மனைவிக்கு துணை முதலமைச்சர் மச்சானுக்கு?


செய்தி: தே.தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பேரத்தில் கேப்டனின் மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவியும் குறைந்த பட்சம் அறுபது சீட்டுக்களும் கேட்கப்பட்டதாக ஒரு வார இதழில் வெளி வந்துள்ளது.

அப்படிப் போடு அறிவாள. காப்டனா கொக்கா? ஏனுங்க இதற்கு ஏதாவது அடகு வைப்பதைப் பற்றி பேச்சு வந்ததா? சேலத்தில் கூட்டணியை உங்கள் கையில் விடும்படி தொண்டர்களிடம் கூறியதன் உள் குத்து இதுதானா?

மொத்தத்தில் தொண்டருக்கும் திருவாளர் பொது மக்களுக்கும் அல்வாவா?

இது தாண்டா அரசியல். கொஞ்சம் பணம் யாரோ போட்ட பிச்சையில் புகழ், இதை வைத்துக் கொண்டு க்வாட்டரும், பிரியாணியை வைத்துக் கொண்டு கூட்டம் சேர்க்க வேண்டியது, பின்னர் குடும்பத்திற்கு பேரம் பேசவேண்டியது. நல்லா இருக்குப்பா இந்த பொழைப்பு.

நாடு விளங்கும்......................



ரசித்த கவிதை


என் மாடுகள் செத்திருக்கலாம்

அவிழ்த்துக் கொடுக்கும்போது

இரவலுக்கென்றோ

குளிப்பாட்டவென்றோ

எண்ணிக்கொண்டு

போயிருக்கும்



அந்த நடை

அந்தக் கொம்புகள்

அந்தச் செல்லப் பாய்ச்சல்

குனிந்து தவிடு கிளர்கையில்

பாறை நாக்கால் கன்னத்தில்

நக்கி வைக்கும் குறும்பு

இனி எனக்கில்லை.



ஒரேயொரு சென்னைப்

பயணத்துக்காக

ஒட்டிக்கொண்டு

போய்விட்டான்

நான் துரோகம் செய்து விட்டேன்.



திருமணநாள்

தங்கமனியின் பிறந்த நாளை மறந்து வாழ்த்து சொல்லாமல் பின்பு வாங்கிக்கொட்டிக் கொள்ளும் பொழுது “ங்கே” என்று விழித்த பிரஜைகள் ஏராளம் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு சொல்லுகிறது.

ஆனால் கல்யாண நாளை யாரும் மறப்பதில்லை. அதற்கு உண்டான காரணங்கள் சொல்லத் தேவையில்லை.

அதுவும் இந்த ஜனவரி 30,31 பிப்ரவரி 1,2 நாட்களில் கல்யாண நாள் கொண்டாடுபவர்கள் ஏராளம், அதற்கு காரணம் “தை பிறந்து பொழுது பிறந்த வழி” யாக இருக்கலாம். அந்த வழியில் என் திருமண நாளை மறக்க முடியாது.

பெறும்பாலும் இது போன்ற முக்கிய நாட்களில் வேலை நிமித்தமாக இருப்பது, வீட்டிற்கு நேரத்திற்கு செல்ல முடியாதது என்பது போன்ற பிரச்சினைகள் உள்ள சராசரி பிரஜை நான்.

இரண்டு வருடம் முன்பு தங்கமணி நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது இந்த வருடம் நீங்க லீவ் போட்டுவிடுங்கள் என்றாள். சரி என்று ஒரு வாரம் விடுமுறை போட்டுவிட்டு ஊருக்குப் போகலாம் என்று இருந்தேன். சென்னை வேண்டாம் வேறு எங்காவது போகலாம் என்றாள்.

சரி ஒன்று செய் நீ நேராக கொழும்பு வந்த விடு, நான் இங்கிருந்து நேராக வருகிறேன் என்று ஏற்பாடு செய்துவிட்டேன்.

ஒரு இரண்டு நாட்கள் முன்பாகவே கொழும்பு சென்று விட்டோம்.

கல்யாண நாளை நாம் தனியாக கொண்டாடலாம் என்றேன். தங்கமணி “என்னங்க நாம அவ்வளவு தூரம் வந்து விட்டோம், என் தங்கச்சி இங்கு இங்கிருக்கிறாள், நாங்கள் பிரிந்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது, ஆதலால் நாம் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே ரெஸ்டாரண்டில் ஒரு டேபிள் புக் செய்துவிடுங்கள் அவர்களையும் அழைக்கலாம்” என்றாள்.

மச்சினிக்கு போன் செய்து விஷயத்தை சொன்ன பொழுது “என்ன மாமா இவ்வளவு தூரம் அக்காவும் நீங்களும் வந்திருக்கிறீர்கள் நாங்கள் உங்களுக்கு பார்ட்டி கொடுக்கிறோம், ஆதலால் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் ஏன் கணவர் ஆபிசில் இருந்து வந்தவுடன் நாம் எல்லோரும் வேறு ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்க்கு அழைத்து செல்கிறோம் என்றாள். மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள்” என்றாள்.

அவள் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். அவளுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவள் புருஷன் வர வேண்டிய சமயமாகியும் வரவில்லை. மணி ஒன்பது ஆகியது, மச்சினி இதோ வந்து விடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு தூக்கம் வர ஆரம்பித்து படுத்திக் கொண்டிருந்தனர்.

மச்சினி போன் செய்து அவரை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சிக் கொண்டிருந்தாள். பின்பு ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து உண்டு விட்டு எங்கள் ஓட்டல் வந்து சேர்ந்தோம்.

போன வருடமும் வேலை பளுவில் ஊருக்குப் போகமுடியவில்லை.

“இந்த வருடம் எங்கு போகலாம், நீங்கள் ஊருக்கு வருவீர்கள்தானே” என்று கேட்டாள்.

எனக்கு அந்த நேரத்தில் ஒரு முக்கியமான செமினாருக்கு யு.கே. போக வேண்டும்.

அவளிடம் சொனால் நமக்கு ஆப்பு என்று “முன்பு போல நாம் கொழும்பு போய் விடுவோம், நீ சென்னையிலிருந்து வந்து விடு நான் ஒரு நான்கு நாட்கள் லீவ் போட்டு அங்கு வந்து விடுகிறேன்” என்றேன்.

“வேண்டாம்பா நீங்க உங்க வேலையைப் பாருங்கள்” என்றாள்.

வழக்கம் போல இன்று காலையில் அவளை தொலைபேசியில் அழைத்து “திருமணநாள் வாழ்த்துகள் என்றும்” பின்பு SMS ல் “நல்ல மனையாளும் ஆரோக்கியமுமே சிறந்த செல்வம், அந்த வகையில் நான் செல்வந்தன்” என்று எழுதி அனுப்பித்தேன்.

அவள் பதிலுக்கு “ ஒ ரொம்ப ஹெல்தியா இருக்கீங்களோ (நான் இல்லாம)” என்று பதிலினாள்.

“Any way happy wedding day dear,”.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Chitra said...

தனியாக டூயட் பாட கிளம்பிட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா... என்சாய்.....!
திருமண நாளுக்கு எண்ண சொல்லி வாழ்த்துறது? நீங்க ஒரு பக்கம்...அவங்க ஒரு பக்கம்..... ம்ம்ம்ம்......

கும்மாச்சி said...

வாழ்த்திற்கு நன்றி சித்ரா.

மதுரை சரவணன் said...

விரைவில் சேர்ந்து கொண்டாட வாழ்த்தும் உங்கள் நண்பன். கேப்டனுக்கு நல்ல ஆப்பு கொடுத்தீங்க

கும்மாச்சி said...

நன்றி சரவணன்

Philosophy Prabhakaran said...

மணநாள் வாழ்த்துக்கள்...

// பதிலினாள் //
எங்கிருந்து பிடிக்கிறீங்க இந்தமாதிரி வார்த்தையெல்லாம் நானும் யூஸ் பண்ணிக்கிறேன்...

கேப்டன் பற்றிய வார்த்தைகளை ரசிக்கவில்லை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விரைவில் சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ன்று “முன்பு போல நாம் கொழும்பு போய் விடுவோம், நீ சென்னையிலிருந்து வந்து விடு நான் ஒரு நான்கு நாட்கள் லீவ் போட்டு அங்கு வந்து விடுகிறேன்” என்றேன்.
//

அய்.. நல்ல ஐடியாவா இருக்கே..!!!!

:-)

திருமண நாள் வாழ்த்துக்கள்

sarathy said...

திருமண நாள் நல் வாழ்த்துகள்.
அடுத்தமுறையாவது கொழும்பு செல்ல சரியாக திட்டம் போடவும். (மச்சினி குடும்பம் இல்லாத சமயம் கொண்டாடிவிடவும்!)
இந்த நன்னாளிலுமா நம் கேப்டன் நினைவு? நல்ல மரத்தமிழர் தான்!!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.