Thursday 3 February 2011

டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா...............................

சென்னை: “மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அம்மா, கைது செஞ்சாலும் குரல் விடுறீங்க, கைது செய்யவில்லை என்றாலும் குரல் விடுறீங்க. முன்ன வந்தா முட்டுறீங்க, பின்ன வந்தா உதைக்கிறீங்க. கொடனாட்டுல குப்புற படுத்துகிட்டு குமுறி குமுறி யோசிச்சிங்களோ.சென்னை: “செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது” என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

யுவர் ஹானர் இவர் சம்மன் இல்லாமல் அப்பப்போ ஆஜராகிறார். சூரமணி ஸார் ராசாவை கோவலன் என்று கூறிவிட்டு, கண்ணகியும் மாதவியும் யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. தேவையில்லாம ஆப்புல தேடிப் போயி உக்காரறீங்க. பார்த்து உறவு முறையை மாத்தி உண்டகட்டிக்கு ஊசி வைக்காதீங்க. “ரெண்டேழுத்து ரெண்டும் ஒரே எழுத்து” என்று உணர்ச்சில உட்டுராதீங்க. போடி உனக்கு இருக்குடி எதிர் பக்கம் போனா எறி வைப்பாங்க ஆப்பு.


ஐயா உங்க தலைவர் பெரியார், “தனி மனித கோபத்தில் இடது முலையை பிய்த்து எறிந்து மதுரையை எரித்த கதையெல்லாம் டுபாகூர், இதையெல்லாம் பின் தொடராதீங்க” என்றார். உங்களுக்கு தெரியாதா?
ஆனந்தவிகடனில் “இளையதொளபதி”


''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?”

ஏனுங்ணா குருவி, சுறா, வேட்டைக்காரன் வரும் பொழுதெல்லாம் குரோம்பேட்டையில் தேனும் பாலும் ஓடி, தண்ணி கரண்ட்டு தட்டுப்பாடு இல்லாம மக்கள் “சந்தோஷமா” இருந்தாகளாங்காட்டியும். ரொம்பதான் அலப்புறே.

காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்!


“சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.


எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?''காந்தி, எம். ஜி. ஆர். எல்லாம் உங்க முன்னாடி ஜூஜூபிங்க. அவிய்ங்க என்ன மாமியாருக்கு முதுகு தேய்ச்சாங்களா? இல்லை குருமா தலையோட நடிச்சாங்களா?


ஆறு படம் அடிவாங்கி ஏழாவது படம் முக்கும் பொழுது இந்த அலப்பறை தேவை தானுங்களாங்னா?


மேடமிடம் பேரம் பேசியப்ப உங்கப்பா பேரிக்கா தலயனுக்கு மேயர் பதவி கேட்டிங்களாங்னா?


பாத்துங்கனா இதெல்லாம் ரொம்ப டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்.


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

goget99 said...

இந்த போக்கத்தவனுங்களுக்கு காந்திஜி தென்னாப்பிரிக்காவில் பட்ட கஷ்டம் மேற்கோள் காட்ட வசதியாகிவிட்டது

மதுரை சரவணன் said...

அசத்தல்... வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

டுவிட்டரில் படித்தது:

அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி # அடுத்து கனிமொழிய கண்ணகின்னு சொல்லுவார் பாரு! அதான் ஃபைனல் டச்!

Chitra said...

ஐந்து மச்!

Anonymous said...

@ Chithra- I am the ainthu much...
Since i am commenting the 5th one...

Vijay again proving that he is a comedy piece.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. கலக்கல்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.