Wednesday 16 February 2011

ரஜினி................ “Entertainer of The Decade”

ரஜினிக்கு என்.டி.டிவியின் சாதனையாளர் விருது


நேற்று என்.டி.டிவியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ““Entertainer of The Decade” விருது வழங்க தொகுப்பாளர் பிரணாய் ராய், ரஜினியை மேடைக்கு அழைத்தார். பின்பு ப. சிதம்பரம் அவர்களால் அந்த விருது வழங்கப்பட்டது. பின்பு நடந்த உரையாடலின் தொகுப்பு எல்லா பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விருது வழங்கும் போது பிரணாய் ராய் ரஜினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ரஜினி அளித்த பதில்களும்:

பிரணாய்: எந்திரன் / ரோபோ மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாலிவுட்டின் டாப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்தால்கூட உங்கள் படத்தின் வெற்றியைத் தொட முடியாத நிலை. இதுவரை வந்த படங்களில் எந்திரனை பெஸ்ட் என்று சொல்வீர்களா?


ரஜினி: இதுவரை நடித்த படங்களில் என்று பார்த்தால், எந்திரன் சிறந்த படம்தான்.

பிரணாய்: இந்த விஸ்வரூப வெற்றியை எதிர்ப்பார்த்தீர்களா?


ரஜினி: உண்மையிலேயே இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்த்தேன். அதே நேரம் இத்தனை பிரமாண்ட வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பிரணாய்: இந்த வெற்றி உங்களுக்கான அங்கீகாரத்தை விஸ்தரித்துள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன சிதம்பரம் அவர்களே...

சிதம்பரம்: நிச்சயமாக. ரஜினி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். இந்தப் படம் (எந்திரன்) பிற மொழிகளிலும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம். அதுவும் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினி படம்.


இந்த பதிலை சிதம்பரம் சற்று தடுமாற்றத்துடன் சொன்னார்.

உடனை மைக்கை வாங்கிய பிரணாய், சிதம்பரம் இப்படி தடுமாற காரணம், நீங்கள் (ரஜினி) எப்போதுவேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்பதால் இருக்கலாம்... என்று சிரித்தபடி கூற, உடனே ரஜினியும் சிரித்தார்.

அடுத்த நொடியில் மீண்டும் மைக்கை வாங்கிய சிதம்பரம், "1996-ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும்.." என்றார்.

உடனே பிரணாய், "அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் (சென்சிடிவ்) என்பதால் வரவில்லையோ?" என்றார் ரஜினியின் தோளில் கை வைத்தபடி.

"நாங்கள் சென்சிபிளாக இல்லை என்பதால் அரசியலுக்கு வந்ததாகவோ, அவர் சென்சிடிவ் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் (clean sweep)" என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

மேலும் உரையாடலின் பொழுது ரஜினி இந்த வெற்றிகளுக்கு காரணம் தன்னயுடன் பணிபுரிந்த சக கலைஞர்களும் ஆண்டவனும்  இதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை என்றார்.

இதில் முத்தாய்ப்பாக பிரணாய் ராய் அரங்கத்தில் இருந்த வித்யா பாலன், கத்ரிணாகைஃப், த்ரிஷா மூவரையும் மேடைக்கு அழைத்தார். மூவருமே அவரின் தன்னடக்கத்தை புகழ்ந்தனர். அவர்கள் அம்மாவிற்கும் ரஜினியைப் பிடிக்கும் என்றனர்.

குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை இவருக்கு உள்ள ரசிகர்களின் ஆதரவு ஒன்றும் அதிசயம் அல்ல.

இன்று ஐம்பது படங்கள் நடித்து ஒரு ஐந்து படங்கள் கூட வெற்றி அடைய செய்ய முடியாத அரைவேக்காடு, அலப்பறை ஹீரோக்கள் ரஜினியிடம் கற்க வேண்டியவை நிறையவே உள்ளன.

இந்தக் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள்.

http://www.envazhi.com/?p=23606

---------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Unknown said...

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தவிர்த்து சொல்லனும்னா நிஜமான மனுஷன் அவர்.

Unknown said...

என் கடப்பக்கமா வந்துடாதீங்க ஹி ஹி!!

கும்மாச்சி said...

கடைக்கு வந்தாஞ்சு, எதற்கும் கல்லாவ பார்த்துக்குங்க.

settaikkaran said...

சூப்பர் ஸ்டாரா கொக்கா? :-)

கும்மாச்சி said...

சேட்டை, நன்றி தலைவா

RayJaguar said...

super starukku nigar avarae!!! he is very humble

கும்மாச்சி said...

உண்மைதான் ரே.

Chitra said...

இன்று ஐம்பது படங்கள் நடித்து ஒரு ஐந்து படங்கள் கூட வெற்றி அடைய செய்ய முடியாத அரைவேக்காடு, அலப்பறை ஹீரோக்கள் ரஜினியிடம் கற்க வேண்டியவை நிறையவே உள்ளன....well-said!!!!

Unknown said...

இன்று ஐம்பது படங்கள் நடித்து ஒரு ஐந்து படங்கள் கூட வெற்றி அடைய செய்ய முடியாத அரைவேக்காடு, அலப்பறை ஹீரோக்கள்.......... ithu nalla irruku..

Philosophy Prabhakaran said...

பகிர்வுக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

// என் கடப்பக்கமா வந்துடாதீங்க ஹி ஹி!! //

புது டெக்னிக்கா...

sarathy said...

அடக்கம், ஆன்மீகம், (நல்ல)இதயம் = ரஜினி

sarathy said...

அடக்கம்+ஆன்மீகம்+(நல்ல)இதயம்=ரஜினி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.