Friday 11 February 2011

கலக்கல் காக்டெயில்-20

அலுவலகத்தில் இந்த வார சூடான விஷயம், எங்களுடன் பணி புரிபவர் ஒருவரை நாய் (நாய்கள்) கடித்து விட்டது. ஒன்றல்ல இரண்டு நாய்கள் தொடையிலும், கையிலும் கடித்து ஒரு ரெண்டு கிலோ கறியை கொதறிவிட்டன. அன்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அந்த வகை நாய்கள் ரோட்பில்லேர், ரோக்பிள்லர் என்று ஏதோ ஒரு வகை நாய் என்று பேசிக்கொண்டனர். எனக்கு தெரிந்த நாய் வகைகள் மூன்றுதான். தெரு நாய், வெறி நாய் சொறி நாய். கூகிள் ஆண்டவரைக் கேட்டால் நூற்றி அறுபது நாய் வகைகள் உள்ளனவாம். அதில் இந்த ராத்வேய்ளர் (Rottweiler) ஜெர்மானிய வகை நாய்கள் ஐந்து வருடம் வரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்குமாம், பிறகு வடைகறி தொடைகறி எல்லாம் கேட்குமாம். இந்த வகை பிறந்த குழந்தையை சாப்பிட்ட கதைகள் ஏராளம். தி ஓமன் (The omen) படத்தில் காட்டப் பட்ட நாய் இந்த வகையை சார்ந்தது. அந்தப் படத்தை நடு இரவுக்காட்சி பார்த்து விட்டு நடந்து வரும் பொழுது நாய் துரத்திய பிரமை நீங்க எனக்கு ஒரு வாரம் ஆகியது.


நாய் கடி பட்டவர் தையல் போடும் முன் தொடை புகைப் படத்தைக் காட்டினார், ஒரு வாரம் சோறு இறங்காது.
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் பொதிகை தொலைக் காட்சியில் “விளையாட்டு வினாடி வினா” (Sports Quiz) நிகழ்ச்சியைப் பற்றி எழுத சொல்லியிருந்தார். அரபு நாடுகளில் டாட்டா ஸ்கை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சேனலும் வருவதில்லை. எப்பொழுதாவது இரவு நேரங்களில் சன் டிவியும் விஜய் டிவியும் தெரிந்தால் அன்று நாம் நரி மூஞ்சியில் முழித்தோம் என்று அர்த்தம். ஆனால் இந்த நிகழ்ச்சியை முன்பு பார்த்திருக்கிறேன், என் அக்கா மகன் இதை விடாமல் பார்ப்பான். அதை நடத்துபவரின் அவசரம் ஏனோ என்னை அந்த நிகழ்ச்சியில் அவ்வளவாக ஈடு பட வைக்கவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
இந்த வார சட்ட சபை நிகழ்ச்சியில் பேராசிரியர் “ஓய்வு எடுப்பவர் எப்படி முதலமைச்சர் ஆக முடியும்” என்று கொளுத்திப் போட்டதன் விளைவு எதிர் கட்சிகள் நிதி நிலை அறிக்கையை கிழித்து விட்டு அவையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சட்ட சபை நல்ல தமாஷ்தான். வயசானாலும் லொள்ளு போவதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

ரசித்த கவிதை

அன்புருவமாய்

அமைதிப் பூங்காவாய்

கருணைக் கடலாய்

பண்புப் பெட்டகமாய்

தியாகச் சுடராய்

அழகுச் சிலையாய்

போகப் பொருளாய்

வரையறுக்கப்பட்ட

அடையாளங்களில்

தொலைந்தே போனது

எம் ஆதி அடையாளம்

---கிருட்டினம்மாள்

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Chitra said...

கலக்கல்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜெர்மானிய வகை நாய்கள் ஐந்து வருடம் வரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்குமாம்,
//

ஹி..ஹி உண்மைதான் அண்ணே....

டக்கால்டி said...

சார் யாரு சார் அந்த பிகர்...

Unknown said...

நல்லா தான் கலந்துருக்கீங்க கலக்கலா

sarathy said...

ஃபிகரிலே 2கிலோக்கும் மேலே கிட்டும். நாயாருக்கு காட்டினா அதற்கும் பலசுவை கிட்டும் அண்ணே. பலசுவை(யான)லலக்கல்தான் சாமி, பலே, பலே.

RayJaguar said...

rhomba nandri!!

ம.தி.சுதா said...

நல்லாயிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.