Wednesday 1 June 2011

சென்னை போடா வெண்ணை

இந்த முறை சென்னை விஜயம் வழக்கம்போல் இல்லாமல் விமானம் சற்றே தாமதமாக தரை இறங்கியது. இமிக்ரேஷன் வரிசையில் ஒராயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். இரண்டு ஆபீசர் உட்காரும் இடங்களில் எல்லாம் ஒரு ஆபீசர் தான் இருந்தனர். சரிதான் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.


வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் நிற்கும் பொழுது குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு, கையில் கைப்பையும் சுமந்து கொண்டு தாய், தந்தையர்களை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கும். ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி அண்டார்டிகாவில் இருந்து வந்தாலும் சரி வரிசையை முந்த சலுகைகள் எதிர் பார்ப்பதில்லை. அதே சமயத்தில் ஒற்றையாய் வரும் “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நுங்கு மார்பு நங்கைகள்” வரிசையில் முந்திக் கொண்டு நைச்சியமாக பேசி ஒரு ஜொள்ளு பேர்வழியின் முன் முந்திக் கொண்டு சென்று விடுவார்கள்.

நிற்க நான் சொல்ல வந்தது இவர்களைப் பற்றி அல்ல. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த என்னுடைய முறை வந்த பொழுது வேறொரு விமானம் தரை இறங்கி ஒரு கூட்டம் இப்பொழுது வரிசையில் சேர்ந்து கொண்டனர்.

ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாக சொல்லி எங்கள் எல்லோரிடமும் கெஞ்சி என் முன்னால் வந்து நின்று கொண்டார். பின்னர் அதிகாரி அவர் கடவுச்சீட்டை வாங்கி கணினியில் விவரங்களை பதிவு செய்யும் முன் அவருடைய விண்ணப்பத்தை நிரப்ப சொன்னார்.

அதற்கு அந்த அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாகவும் தான் அவசரமாக போக வேண்டும என்று குரலை உயர்த்தினார். அதற்கு அந்த அதிகாரி சரியம்மா நீங்கள் வேறு யாரையாவது நிரப்ப சொல்லி கையொப்பம் இடுங்கள், என்று சொல்லி அடுத்தவரை அழைத்தார்.

அந்த அம்மையார் தன் நிலை இழந்து “யோவ் நீயெல்லாம் மனிதரா, என் அம்மா இறந்து விட்டதாக சொல்லுகிறேன் என்னை நிற்க வைக்கிறாயே, உனக்கெல்லாம் உன் அம்மா இறந்தால் தான் தெரியும்” என்று சொல்லி மற்றும் வரிசையில் உள்ளவர்களையும் பார்த்து இதே வார்த்தைகளை பிரயோகித்து சாபம் விட்டார். .

எனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Butter_cutter said...

எனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.புரியவில்லை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.