Tuesday 2 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2


இந்தவார சுப்பர் ஸ்டார் பதிவர் அமெரிக்காவில் வாழும் பாளையங்கோட்டை பெண் சிங்கம் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா.


ப்ளாக் எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடம் தான் ஆகிறது அதற்குள் இவரின் வாசகர் பட்டாளாம் ரஜினி ரசிகர் கூட்டத்தை எட்டும் அளவுக்கு போயிருக்கிறது. இவர் பதிவு போட்டவுடன் எப்படித்தான் குறைந்தபட்சம் ஐம்பது பின்னூட்டங்கள் வந்து விடுகிறது என்று தெரியவில்லை. நாங்களெல்லாம் பத்து ஓட்டுக்கும் இருபது ஓட்டுக்கும் மன்றாடும் பொழுது இவர் பாட்டுக்கு எல்லா  திரட்டிகளிலும் ஓட்டை அள்ளுகிறார்(வோட்டிங் மிசினில் சூட்சுமம் (சூடு) வைத்திருப்பாரோ). இதில் எனக்கு ஒரு தனிப்பட்ட ஆச்சர்யம் கலந்த பொறாமை உண்டு. அது அந்த அம்மையாரின் எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எழுத்தில் இயல்பான நகைச்சுவை இவரது பலம். அமெரிக்காவின் சில கேள்விப்படாத ஊர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்களின் அனுபவங்கள் என்று எல்லாம் எழுதுகிறார். இவர் எழுதிய “நூவே (அல்லது நேநேவா) சந்திரமுகி நான் ரசித்த இடுகைகளின் ஒன்று. சந்திரமுகி முதல் காட்சி அமெரிக்காவில் பார்த்த அனுபவத்தை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருந்தார்.

மற்றுமொரு முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளுக்கும் பறந்து பறந்து பின்னூட்டம் இடுவார்.

இப்பொழுது இந்த சிங்கம் திருநெல்வேலியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அங்கு போயும் நக்கல் போகவில்லை. அவருடைய சமீபத்திய இடுகையான நெல்லை பதிவர் சந்திப்புக்கு போட்டிருக்கிற கேலி சித்திரத்தைப் பாருங்கள்.

அப்டிக்கா போக இருப்பதால் இப்படிக்கா என்னை மறந்துவிடாதீர்கள் என்று லீவ் லெட்டர் கொடுத்துவிட்டு ஆகஸ்டில் பதிவுகள் தொடர்வதாக சொல்லியிருக்கிறார்கள்.

காணாமல் போன பதிவர்

கலகலப்ரியா 

பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கும் பதிவர், நான் பதிவு ஆரம்பித்த காலத்தில் எனக்கு வழக்கமாக பின்னூட்டம் இடுவார். கவிதைகள் இவருக்கும் ரொம்பப் பிடிக்கும். இவரும் கவிதைகள் எழுதுவார். சமீப காலமாக இவரது பதிவுகளை காணவில்லை.

................சூப்பர் ஸ்டார் பதிவர்கள் தொடரும்

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

uDanz said...

உங்கள் பதிவுகளை எங்கள் திரட்டியில் சேர்த்து பயனடையுங்கள். http://udanz.com

Chitra said...

அச்சோ....அச்சோ.....எதுவும் சொல்ல தன்னடக்கம் தடுக்குதே..... ஹா,ஹா,ஹா,ஹா...

Chitra said...

மிக்க மிக்க மிக்க நன்றிங்க. :-)

settaikkaran said...

சித்ரா அமெரிக்கா திரும்பி ஜெட்-லாகை முறியடித்து ஜெட் வேகத்தில் இடுகை போட்டு, பட்டையைக் கிளப்பிட்டிருக்காங்க! :-))

கலகலப்ரியா-வை மீண்டும் வலையுலகில் காண நானும் ஆவலாயிருக்கிறேன்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றிய்யா!

நிரூபன் said...

சித்ரா அக்கா பற்றிய அறிமுகம் கலக்கல்.
காணாமற்போன பதிவர், நமக்கெல்லாம் புதுப் பதிவராக இருக்காரே.

ஆனந்தி.. said...

Lady blog Super star Chitra..:-))

சி.பி.செந்தில்குமார் said...

>>மற்றுமொரு முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளுக்கும் பறந்து பறந்து பின்னூட்டம் இடுவார்.

ஹா ஹா நிஜம் தான்

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் ஸ்டாரினிகள்!!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லியில் 99.4% போஸ்ட் ஹிட் ஆனது உங்களுக்கு மட்டும் தான் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் 221 ஃபார் 223 ( இதுல இந்த போஸ்ட் ஹிட் ஆனதும் 222 ஹிட்ஸ் ஆகிடும்..

கும்மாச்சி said...

செந்தில் நன்றி

ம.தி.சுதா said...

சித்திராக்கா ஒரு பதிவர் என்பதற்கப்பால் எல்லாருடைய இன்ப துன்பங்களிலும் பங்கெடுக்கும் ஒரு தனித்துவமானவர்... அவருக்கு என்றும் இறைவன் ஆசி இருக்கும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

கும்மாச்சி said...

ம.தி.சுதா வருகைக்கு நன்றி.

Yazhini said...

வணக்கம் கும்மாச்சி, நல்ல பதிவு. இதனால் மற்ற பதிவர்களை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.

தொடரட்டும் உங்கள பணி ! நன்றி ....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.