Monday, 22 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் தொடரில் இந்த வாரம் எனக்குப் பிடித்த பதிவர் சும்மா (தேனம்மை லக்ஷ்மன்)


சும்மா என்று வலை பூவிற்கு பெயர் கொடுத்து சும்மா சூப்பர் கவிதைகளையும், கட்டுரைகளையும் அள்ளி விட்டுக்கிட்டே இருப்பாங்க.

கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது , என்று தன்னை பற்றிய சுய அறிமுகத்தில் வித்தியாசம் காண்பிப்பவர்.
கிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது பதிவுகள், முன்னூற்றி என்பது வாசகர் பட்டாளம் வைத்துக்கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இவரது இயல்பான, யதார்த்தமான கவிதைகளின் விசிறி நான்.
“உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா நீங்கள் நலம்” என்ற தந்தையர் தின கவிதையை படியுங்கள்.

“நீ எனக்காக உன் தூதனைக் காற்றிலும்
கடல் கடந்தும் அனுப்பும் வரை..
உன் நினைவு நெருப்பு பற்றியெரிய...
சோக மரத்தின் கீழ்
உன் கணையாழியுடன் நான்”

ராமனின் மனைவி என்ற கவிதையின் இறுதியில் மேற்படி சொற் பிரயோகம் இவரது பலம்.

இப்பொழுது இவர் பல பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரிடம் பத்திரிகைகளில் தமது இடுகைகள் வர யோசனை கேட்பவர்களுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்குகிறார்.

அவர்களின் எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துகள்.


காணாமல் போன பதிவர்கள்

சாய்ர பாலா, அருமையான எழுத்து நடை, கொண்ட பதிவர். இவர் என்னைப் போன்ற கடல் வாசி. மலேசியாவில் கடலில் (மிதக்கும் கப்பலின் உண்மையான கேப்டன்) வாழ்ந்துகொண்டு கவிதைகளையும், கதைகளையும் புனைபவர்.
இவரைப் பற்றிய விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

சேட்டைக்காரன் said...

தேனம்மை லட்சுமணனை நான் வலைச்சரத்தில் ஒருவாரம் எழுத வாய்ப்பு கிடைத்தபோதுதான் அறிந்தேன். அவருக்கு வாழ்த்துகள் உரித்தாகுக!

சாய்ர பாலா - கேள்விப்பட்டதில்லை. நிறைய பிரபலங்கள் குறித்து அறியாமலிருக்கிறேன் என்பதை உங்கள் இடுகை மூலம் அறிய முடிகிறது! இன்னும் வாசிக்க வேண்டும் என்பது புரிகிறது. மிக்க நன்றி!

ரெவெரி said...

அறிமுகத்திற்கு நன்றி..

Chitra said...

தேனம்மை அக்காவை , சென்னையில் வைத்து நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்பே உருவானவர். அவரது பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். கவிதைகள் எழுதுவதை போலவே, சமையலிலும் அக்கா வெற்றி கொடி பிடிப்பவர். . அவர்கள் கொண்டு வந்த பாதாம் அல்வாவே சாட்சி. தேனம்மை அக்காவின் அம்மாவுm சிறந்த கவிதைகள் எழுதுபவர்.
பத்திரிகை துறையில், பல வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு வருவதால், அக்கா ஏகப்பட்ட பிஸி. அதனால் தான் முன் போல பின்னூட்டங்களோ அதிக பதிவுகளோ தர இயலுவதில்லை.

இராஜராஜேஸ்வரி said...

"பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-/
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

கணினி மஞ்சம் said...

கும்மாச்சி நம்ம மஞ்சத்திலும் வந்து கொஞ்சம் காலாறுங்கள்.

malgudi said...

தரமான அறிமுகங்களுக்கு நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக்க நன்றி கும்மாச்சி. கூகுளில் யதேச்சையாக பார்த்து தெரிந்து கொண்டேன். ரொம்ப இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள். நன்றி நண்பரே..:)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.