Monday 15 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4


பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் தொடரில் இந்த வாரம் எனக்குப் பிடித்த பதிவர் அட்ராசக்க சி.பி.செந்தில்குமார்.


செந்தில் ஈரோட்டுக்காரர், தன்னை பற்றிய சுய அறிமுகத்தில் மனிதர் மிக அவையடக்கத்தை காண்பித்திருக்கிறார்.

ஆனால் இவரது பதிவுகள் இவரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. அப்பப்பா அருநூற்றி என்பது பதிவுகள் ஒன்றரை வருடத்திலா. இப்பவே கண்ணைக் கட்டுதே. அதற்கு சமமான தொடர்பவர்களின் எண்ணிக்கை, உண்மையை சொல்லப் போனால் தொடர்பவர்களின் எண்ணிக்கை எழுநூறு. தமிழ்மணத்தில் முன்னணி வரிசையில் (ஒன்னாம் நம்பர்பா) இருக்கும் பிரபல பதிவர். மனிதர் சரியான நக்கல் பார்ட்டி.

எல்லா விதமான தலைப்புகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதும் பதிவர். இருந்தாலும் இவரின் சினிமா விமர்சனத்துக்கு நான் ரசிகன்.

சமீபத்திய இடுகை ஆடிப் பதினெட்டில் ஆற்றில் இறங்கி குளிக்காத ஹைக்லாஸ் பிகர்களை தனக்கே உரிய பாணியில் இது நியாயமா? என்று சாடுகிறார். எல்லா பிகர்களுக்கும் மார்க் கொடுக்காமல் விடமாட்டார்.

சமீபத்தில் வந்த கில்மா படத்திற்கு “சாந்தி அப்புறம் நித்யா கில்மாவா ஜொள்மாவா”  என்ற விமர்சனம் படியுங்கள்.

“மன்மதன் அம்பு புரோட்யுசருக்கு சொம்பு” பயங்கர நக்கலான விமர்சனம். இவரின் கருத்துக்கு நான் ஒத்துப் போகிறேன். இந்தப் படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு இன்றும் என்னால் பார்க்க முடியவில்லை.

இன்று “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” படத்திற்கான விமர்சனம் இவருடைய பாணியில் எழுதியிருக்கிறார்.    

நெல்லை பதிவர் சந்திப்பை ஆறு பதிவுகள் லொள்ளை ஓரங்கட்டிவிட்டு எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வந்து சித்ரா கூட சந்திப்பில் பங்கு கொண்டிருக்கிறார், அவரது வேண்டுகோளின்படி நக்கலை அந்தப் பதிவில் தவிர்த்திருக்கிறார்.

செந்தில் உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.

காணாமல் போன பதிவர்கள்.

ம.தி. சுதா தலைவர் ரொம்ப நாட்களாக காணவில்லை. சமீபத்தில்தான் எனக்கு பின்னூட்டம் போட்டார். ஆஹா வருகைக்கு நன்றி, வணக்கம். நம்ம சூப்பர் ஸ்டார் பதிவர் செந்தில் உங்களைப் பற்றி 2010ல் மிகச்சிறந்த பத்து பதிவர்களில் உங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்காக திரும்ப வலைப்பூவில் நிறைய எழுதுங்கள் சுதா. உங்களது ஈழத் தமிழிற்கு நாங்கள் ஏங்குகிறோம்.


Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

Unknown said...

super maapla!

கும்மாச்சி said...

நன்றி விக்கி

settaikkaran said...

சி.பி.எஸ் என்றால் கடுமையான உழைப்பு! வம்பு, தும்புக்குப் போகாமல் அனைவரிடமும் அனுசரித்துப் போவது! விடாமுயற்சி! தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், நேற்று பதிவு ஆரம்பித்தவர்களையும் உற்சாகப்படுத்துவது, பாராட்டுவதில் தாராளம்; அனேகமாய் விமர்சிக்கிற வழக்கமே இல்லாதவர்!

He is destined for greater things in the days to come!

அவரது எதிர்காலம் ஒளிமயமாயிருக்கும் என்பது எனது கணிப்பு மட்டுமல்ல; ஆணித்தரமான நம்பிக்கையும் கூட!

’தல’யைப் பத்தி எழுதினதுக்கு மிக்க நன்றி!

ம.தி.சுதா மீண்டும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். வலையுலகத்தில் வெற்றிடமே கூடாது என்று நம்புகிறேன்.

இருவருக்கும் வாழ்த்துகள்! உங்களுக்குப் பாராட்டுக்கள்! :-)

கும்மாச்சி said...

"அவரது எதிர்காலம் ஒளிமயமாயிருக்கும் என்பது எனது கணிப்பு மட்டுமல்ல; ஆணித்தரமான நம்பிக்கையும் கூட!"

வாழ்த்துக்கு நன்றி சேட்டை.

settaikkaran said...

ஒரு திருத்தம்: அவர் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட மாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். மற்றபடி, திரைப்பட விமர்சனம் எழுதுவதில்.....kinggggg! :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தலான விமரிசனம் .

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தலான விமரிசனம் .

டக்கால்டி said...

Annan c.p pugazchi pidikkathavar...he he..

Anonymous said...

சி பி ஸ்பெஷல்...நல்ல பதிவு...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

நண்டு சார் வருகைக்கு நன்றி

கும்மாச்சி said...

டக்கால்டி உண்மை அவர் புகழ்ச்சி பிடிக்காதவர்தான் என்பது அவர் சுய அறிமுகத்திலே தெரிகிறது.

Unknown said...

ஒரு நாளில் 3 பதிவுகளை போட்டு திகைப்பில் ஆழ்த்துபவர்,அவருக்கு ஒரு நாளைக்கு 48 மணிநேரம் போல,நிச்சயம் அவ்ர் நிறைய சாதிப்பார்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.