Monday 8 August 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3


பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்று நான் தொடங்கிய இந்த இடுகையை தொடர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் முன்பே சொன்னது போல் இதில் சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிகளுக்குமே வெற்றி.

இந்த வார என்னுடைய கருத்தில் சூப்பர் ஸ்டார் நம்ம சேட்டை தான்.


ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?

இங்குள்ள மொக்கைகளை வாசிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

என்ற சுய அறிமுகத்தில் இருந்தே இவர் எப்பெயர் பெற்ற லொள்ளு பார்ட்டி என்பதை யூகிக்கலாம்.

ஆங்கில வலைபூ என்று “லார்ட்லபக்தாஸ்” கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

கிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது பின் தொடர்பவர்கள், இருநூற்றி எழுபது இடுகைகளில் சாதித்தது பெரிய விஷயம்தான்.

இவருடைய சமீபத்திய இடுகையில் ரஞ்சிதா செய்த தவறு என்ன? என்பதை படித்து பார்த்தால் இவரின் வித்யாச சிந்தனை புரியும் (Lateral thinking). 

இவருடைய இடுகைகளில் ஒளிந்திருக்கும் நையாண்டிக்கு நான் பரம ரசிகன். நீங்களும் படித்துப்பாருங்கள் (“கேப்டனுக்கு ஜே”).

தொடர் நக்கல்கள் “ அன்னாசி பழத்துக்கு ஜே”.

“மன்மதன் அம்புவும் மசானத்தில் முத்தமும்” என்று தலைப்பு கொடுத்து வாசகர்களை ஈர்ப்பதில் தல நீ  எங்கேயோ போயிட்ட.

சேட்டை உமது எழுத்துப் பணிகள் தொடரட்டும்.



காணாமல் போன பதிவர்கள்.

இந்த வார காணாமல் போன பதிவர் ரெட் மகி. (http://magiscorner.blogspot.com/) 2009 ல் பதிவுலகத்திற்கு வந்த கிராமத்து இளைஞன். கவிதைகள் எழுதத் தொடங்கி சில பதிவுகளிலே காணாமல் போய்விட்டார்.  

இவரைப் பற்றி விவரமறிந்தவர்கள் சொல்லவும்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

settaikkaran said...

யாராவது புகழ்ந்து எழுதினால், "ஐயையோ...ரொம்பக் கூச்சமாயிருக்குங்க, ரொம்பப் புகழறீங்க! நான் அதுக்கெல்லாம்,ஹிஹிஹி,தகுதியானவனில்லீங்க,"என்று சொல்கிற பழக்கம் எனக்குக் கிடையாதுங்க! :-))

சேட்டை, நல்லாயிருக்கு!-ன்னு ரெண்டு வார்த்தை சொன்னாப் போதும்; உச்சி குளிர்ந்திரும் எனக்கு. After all, I am a human being looking for some recognition.

நீங்க என்னைப் பத்தி பதிவே போட்டிருக்கீங்க! வயிறு ரொம்பிடுச்சுங்க! நம்பினா நம்புங்க! என் கண்ணுலே தண்ணி கோர்த்திருச்சு! ரொம்ப நன்றி!

கும்மாச்சி said...

settai you deserve this, I am not a big blogger however I like your articles.
ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>இவருடைய சமீபத்திய இடுகையில் ரஞ்சிதா செய்த தவறு என்ன? என்பதை படித்து பார்த்தால் இவரின் வித்யாச சிந்தனை புரியும் (Lateral thinking).

உண்மை தான். அவரது இடுகைகளீல் அவரது பாணீயிலிருந்து முற்றிலும் விலகி எழுதப்[பட்ட மிகச்சிறந்த படைப்பு

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...



சேட்டை, நல்லாயிருக்கு!-ன்னு ரெண்டு வார்த்தை சொன்னாப் போதும்; உச்சி குளிர்ந்திரும் எனக்கு. After all, I am a human being looking for some recognition.

படைப்பாளனும், கலைஞர்களூம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இதில் விதிவிலக்குகள் ரொம்ப கம்மி அண்ணே

Chitra said...

அவருடைய பதிவுகள் , பெரும்பாலானவற்றை வாசித்து இருக்கிறேன். நாட்டு நடப்புகளை, லொள்ளு பார்வையில் பார்க்க வைத்து கலகலக்க வைப்பார். சில சமயம், எதார்த்தங்களை சொல்லி, மனதை பிசைய வைத்து விடுவார். அருமையான பதிவர். அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தி கொள்கிறேன்.

Philosophy Prabhakaran said...

அட... என்னுடைய பேவரிட் பதிவர் சேட்டையை பற்றி எழுதுயிருக்கீங்க...

// இவருடைய இடுகைகளில் ஒளிந்திருக்கும் நையாண்டிக்கு நான் பரம ரசிகன். //

ம்ம்ம்... நீங்க பாக்கியம் ராமசாமி எழுத்துக்களை படித்திருக்கிறீர்களா... அந்த ஸ்டைல் செட்டியின் எழுத்திலும் இருக்கிறது...

கும்மாச்சி said...

பிலோசொபி தமிழ்மணம் இந்தவார நட்சத்திரம் ஆகியதற்கு வாழ்த்துகள்.

Anonymous said...

சேட்டையின் பல பதிவுகள் தொடர்ச்சியான நகைச்சுவை பின்னலுடன் போரடிக்காமல் செல்லும்.படிக்க நிறைவை தரும்.நாம் இது மாதிரி எழுத மாட்டமா என ஏங்க வைக்கும்.புது பதிவர்களுக்கு பல பாடங்கள் அவர் பதிவில் உள்ளன..

Unknown said...

நல்லா சொல்லி இருக்கீங்க மாப்ள!

Jey said...

பாராட்டு பெறுவதற்கு தகுதியான ஆள் சேட்டை. வாழ்த்துக்கள் சேட்டை. நன்றி அண்ணாச்சி.

ம.தி.சுதா said...

சிறிது காலத்தின் மன் தான் இவருடன் நல்ல பரீட்சையம் எற்பட்டது... இவரது கம்பெனிக் கொள்கையில் நிச்சயம் நியாயம் இருக்கிறது....


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.