Thursday 1 March 2012

கலக்கல் காக்டெயில் -62


ஏன் பிறந்தாய் அம்மா ஏன் பிறந்தாயோ?

அம்மா தன் பிறந்த நாளை கண்மணிகள் விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விட்டார்களோ அப்போதே தெரியும் என்ன நடக்கும் என்று. எங்கள் ஏரியாவில் உள்ள காய்கறி விற்பனை செய்யும் பெண்மணிதான் மகளிரணி செயலாளர். அம்மணி ஏரியாவையே அடைத்து பந்தல் மைக் செட் போட்டு தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டம் ஒரு வாரம் தானாம். அப்பா பிழைத்தோம்.

கேரள விஜயம்

இந்த வாரம் கேரளா சென்றதால் காக்டெயில் சப்ளையில் சற்று சுணக்கம். ஆல் இந்திய ஹர்த்தால் என்று 28 ம் தேதி எல்லா தொழிற்சங்கங்களும் அறிவித்திருந்தன. சரியான நேரத்தில் மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. எர்ணாகுளத்தில் ஏதோ கலாட்டா நடந்ததாக சொன்னார்கள். நான் குருவாயூரிலிருந்து திருச்சூர் போகும் வழியில் இரண்டு ஊர்வலங்களை கடந்து சென்றேன். சரி நம்ம கார் இன்றைக்கி அப்பளம் தான் என்று நினைத்தேன், ஒன்றும் நடக்கவில்லை. இன்று ஒரு வழியாக சென்னை சேர்ந்துவிட்டேன், என்ன இருந்தாலும் சேட்டன்கள் சேட்டன்கள் தான்.

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்

விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நல்ல காமெடி. கேள்விகள் அனைத்தும் தத்துபித்து கேள்விகள். அதற்கு உதாரணம் ஈயடிச்சான் காப்பி கேள்வி. இதற்கு சூர்யா கொடுக்கும் பில்ட்அப்புகள் ரசிக்கும் படியாக இல்லை. கம்ப்யூட்டர்ஜிக்கு பதில் இதில் மிஸ்டர் ஜீனியஸ். ஹூம் நடத்துங்க.

ரசித்த கவிதை

சமுதாயம்

மனிதன் மனம் முழுக்க நிரம்பிருக்கு கூவம் ஆறு,
அதை கொஞ்சம்தான் நீயும் எண்ணிப் பாரு,
ஒற்றுமைதான் வேணும்னு சொன்னாரு பட்டினத்தாரு,
இங்கே செவி கொடுத்து கேட்பது யாரு,
சாதிகள்தான் ஒழியணும்னு சொன்னாரு பாரதியாரு,
அதையும் தாண்டி, சாதி பள்ளிக்கூட விண்ணப்பத்தில இருக்குது பாரு,
ஊர் முழுக்க திறந்திருக்கு கள்ளுக்கடை பாரு,
நாளைய இளைஞனும் வச்சிருப்பான் கைல தான் பீரு,
திரைகடல் ஓடி திரவியம் தேடும் தமிழன பாரு,
அவன் குடும்பம்தான் அவனுக்காக ஏங்கி தவிக்கும் நிலமைய பாரு,
பசிக்காக உடம்பை விற்கும் பெண்ணுக்கு வேசினு பேரு,
அவ இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் யாரு,
நகர் முழுக்க புகையை கக்கிக்கிட்டு பறக்குது காரு,
உன் கார் கண்ணாடியை இறக்கித்தான் ஏழைய எட்டிப் பாரு,
தமிழன் கால்கடுக்க காத்திருந்து ஏமாந்துபோனான் காவேரி ஆறு,
கிட்டாமல் போனதையா கிருஷ்ணா நதி நீரு,
நாளை, கைவிட்டு போகுமோ முல்லை பெரியாறு?

.............................முத்துவேல்  

இந்த வார ஜொள்ளு
01/03/2012

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

சி.பி.செந்தில்குமார் said...

காக்டெயில் வாசனையே கிர்ருன்னு தூக்கிடுச்சு

கும்மாச்சி said...

சௌந்தர், சி.பி. காக்டெயில் மிக்சிங்கை உடனே சுவைத்ததற்கு நன்றி.

முத்தரசு said...

ம்

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா அம்மா பிறந்தநாளை கொண்டாடிட்டு இருக்கீங்க.......

தடம் மாறிய யாத்ரீகன் said...

கவிதை ரொம்ப நல்ல இருக்கு!!!

கும்மாச்சி said...

ஆமாம் தல அம்மா பிறந்தநாளுக்கு மண்சோறு துன்னேன்.

Unknown said...

விஜய் டிவியில கேட்குற கேள்விய L.K.G. பையனே டக்குன்னு சொல்லிருவான் சூர்யா செய்யற பில்டப்! சிவக்குமார் பையன சரியா வளர்க்கல போல...!

ஜொள்ளு...யம்மா....செம

sarathy said...

அருமையான சுவை; நல்ல கலக்கல்தான்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.