Sunday 18 March 2012

கலக்கல் காக்டெயில் -64


கழுத்தை திருகி, பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம்

இலங்கைமீது ஐ. நா. கொண்டுவரும் மனித உரிமை மீறல்  பிரச்சினைகளுக்கு நமது உள்துறை அமைச்சர் சிதம்பரம் வற்புறுத்தலின் பேரில் இப்பொழுது இந்தியா இலங்கைக்கு எதிராக ஆதரவு தெரிவிக்கும் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

தக்காளி ஒரு இனத்தை அழிப்பதற்கு எந்த வகையில் எல்லாம்  இலங்கைக்கு உதவி செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு இப்பொழுது ஆதரவு தெரிவிப்பது கழுத்தை திருகி கொன்றுவிட்டு பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம் செய்து ஒட்டு வேட்டைக்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். ஏற்கனவே உத்திரப்ரதேசம் ஊத்திக்கிச்சு, ஏதோ தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்று பிச்சை எடுத்தால்தான் வண்டி ஓடும் நிலைமை.

நாங்கள் தன்மான தமிழர்கள் எதையும் எப்பொழுதும் மப்பில் இருந்துகொண்டு மறப்போம், மன்னிப்போம்.

இப்படி ஒரு நூறு சதம் தேவையா?

நூறாவது சதம் அடிப்பார் என்று எல்லோரும் தொலைக்காட்சி முன் குத்தவைத்து குந்திகினு மாய்ந்து மாய்ந்து பார்த்ததில் அடிச்சாருபா நூறாவது. அவர் அடிக்க சொல்லவே மேட்ச் முடிவு தெரிந்து போய்விட்டது. இந்த மேட்ச் பி.சி.சி.ஐ செட்டப் செய்திருக்கிறார்கள். அவருக்கு நூறு அடிக்க விட்டுக்கொடுத்தால் நாங்க மேட்சை விட்டுக்கொடுப்போம் என்று.

பங்களாதேஷ் பவுலர்கள் ஒருவரும் சச்சின் அவுட்டாக பௌலிங் செய்யவில்லை. பந்தை இடப்புறமும், வலப்புறமும் போட்டு நன்றாகவே ஏதோ சின்ன பாப்பா பெரிய டீமில் மாட்டிக்கொண்டது போல் அடிக்கவிட்டனர். அவர் என்பத்திமூன்று இருக்கும் பொழுது எதேச்சையாக பார்த்தபொழுது எனக்கு முடிவு தெரிந்துவிட்டது.

ஏதோ மும்பைகாரனுங்க இவருதான் அப்படியே இந்தியாவை தூக்கி நிறுத்தற மாதிரி டுபாக்கூர் உடுவானுங்க, போங்கடா நீங்களும் உங்க சச்சினும் போய் உருப்படியா பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்க.
. 
இங்கே நிர்வாணமாய் கிடப்பது தமிழச்சி இல்லையடா

ஈழப்போரின் உச்சகட்டத்தில் படித்த கவிதை இந்த நேரத்தில் நினைவு கூறத் தோன்றுகிறது.

இங்கே நிர்வாணமாய்
கிடப்பது
தமிழச்சி இல்லையடா
உலகம் நடுத்தெருவில்
கிழித்து போட்ட
மனிதாபிமானங்கள்
இங்கே நிர்வாணமாய்
கிடப்பது
தமிழச்சி இல்லையடா
பயங்கர வாதத்தை
ஒழிக்கிறேன் என்று
மனித சுதந்திரத்தை
மரணிக்க செய்தவனின்
மரண பட்டியல்
எங்கே
ஒரு மனிதனுக்கு
தப்பு நடந்தாலும்
தட்டி கேட்கும்
என்று கோட்டை
கட்டி கூச்சல் போடும்
மனிதாபிமாங்களின்
நேயம்
அது தான்
இங்கே நிர்வாணமாய்
கிடக்கிறது
அது எங்கள்
நெருப்பு தமிழச்சி அல்ல
நீதிமான்களே
நீதி தராசின் முன்
எல்லோரும் சமம்
என்று
நீதி தேவதையின் கண்களை
கட்டி வைத்திருக்கிறீர்களே
இப்போது சரியான
நேரம்
கழற்றி விடுங்கள்
அவள் கட்டுக்களை
அவள் பார்த்து சொல்லட்டும்
இங்கே
தெருவில் கிடப்பது
தானா இல்லை தமிழச்சியா என்று
இப்போது வாருங்கள்
சட்ட வித்துவான்களே
மேதாவிகளே
இப்போது வாருங்கள்
இங்கே கிழிந்து கிடக்கிறது
மனிதம் ஒன்று
பொறுக்கி எடுங்கள்
உங்களுக்கு தேவையான
சாட்சிகளை
இந்த சாட்சி போதாதென்றால்
போய் கேளுங்கள்
எமனை
சாட்சிக்கு அவன்
அனுப்புவான்
ஆட்களை
எங்கெல்லாம் தப்பு
நடந்தாலும்
தட்டி கேட்க
நாமிருக்கிறோம்
என்று  இறுமாப்பு கொள்ளும்
தேசங்களே
இங்கே கிழிந்து கிடக்கும்
ஒரு வெள்ளை பூவில்
வடிந்திருக்கும்
ரத்தமெல்லாம்
உங்கள் மொழியில்
மொழிபெயர்த்து சொல்லுங்கள்
இதற்கு என்ன
மொளிபெயர்பென்று
உங்கள் பதிலுக்காய்
காத்து கிடப்பது
தமிழச்சிகள்
மட்டுமல்ல
உங்களின் தாயும் தான்
பதில் சொல்லுங்கள்
செத்த பாம்பை
தீண்டும் சிங்களவனே
நீ மாண்டு போனால்
உன்னை தீண்ட
கூட அருவருக்குமடா
தீ
பொறுத்திருந்து பார்
உனக்கு கொள்ளிவைக்க
போவது
இன்று நீ
தெரு வீதியில்
கிழித்து போட்டிருக்கும்
இந்த ஈழ தமிழச்சியின்
உடல் தான்
எண்ணிகொண்டிரு உன்
இறுதி நாட்களை...


கவிஞர்: ஈழமகள்

இந்த வார ஜொள்ளு






18/03/2012

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

முத்தரசு said...

// தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்று பிச்சை எடுத்தால்தான் வண்டி ஓடும் நிலைமை.//

சரியாக சொன்னிர்கள்

சுயநலம்தான்யா

முத்தரசு said...

//இப்படி ஒரு நூறு சதம் தேவையா?//

நாட்டுக்காக விளையாடனும் ஆனா இவனுங்க??- திருந்தாத ஜென்மங்கள்

முத்தரசு said...

இறுதி நாட்களை... கவுன்ட் டௌன் ஸ்டார்ட்

sarathy said...

நல்லதொரு காக்டெயில் .... ஜமாய்ச்சிட்டீங்க தலைவா ..... வளர்க உங்கள் ஞாபக சக்தி

தமிழ் பையன் said...

இப்படி ஒரு உணர்ச்சி மிக்க கவிதைக்குக் கீழே இப்படி ஒரு ஜொள்ளுப் படமா? ஏதாவது ஒன்றை எடுத்து விடவும்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.