Tuesday 6 March 2012

கலக்கல் காக்டெயில் -63


அடுத்த பிரதமர்?

ஒரு வழியாக ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில்  முலயாம்சிங் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், காங்கிரசின் உதவியுடன் மந்திரிசபை அமைப்பார் என்று நினைத்த காங்கிரசிற்கு மரண அடி. ராகுல் காந்தியின் தகிடுதத்தங்கள் எதுவும் எடுபடவில்லை. மற்ற மாநிலங்களிலும் காங்கிரசும், பி.ஜெ.பி.யும் ஒரு ...ரும் பிடுங்க முடியவில்லை. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நாலாவது அணி உருவாக்கலாமா என்று ஒரு கோஷ்டி யோசித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த பிரதமர் யார்? அட போங்கப்பு யார் வந்தா என்ன? விடியற பொழுது எப்படியும் விடியத்தான் போகிறது.

சென்னை நெரிசல்

அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்காக கிட்டத்தட்ட ஆயிரம் விளக்குப் பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு எல்லா போக்குவரத்தும் ஒயிட்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருக்கிறது. இப்பொழுது ராயப்பேட்டா ஏரியா நிரம்பி வழிகிறது, நல்ல நாட்களிலேயே அந்த பகுதி சென்று வர முழி பிதுங்கிவிடும் இப்பொழுது கேட்கவே வேண்டாம். போக்குவரத்து காவல்துறை இதை இன்னும் நல்ல முறையாக மாற்ற வழி இல்லையா?

ரசித்த கவிதை


பூமியும் தாயும்
வானம் பொழிவதோடு
மட்டும் நின்றுவிடுகிறது
பூமி தானே விதையை
விளைவித்து செடியாகிப்
பூத்துக் குலுங்கும் போது
தாங்கி மகிழ்கிறது
அன்னையப் போல்
----------------- சா. துவாரகைவாசன்




இந்த வார ஜொள்ளு







06/03/2012

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத ஆளு

சி.பி.செந்தில்குமார் said...

அல்போன்சாவை அம்போன்னு விட்டுட்டீங்களே? ஹி ஹி

முத்தரசு said...

// விடியற பொழுது எப்படியும் விடியத்தான் போகிறது//

அதானே..

banti said...

-Good piece of information.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.