Sunday, 15 April 2012

கலக்கல் காக்டெயில் -67


அஷ்டமத்து சனி

பிரிந்தவர்கள் அல்லது பிரிந்தது போல நாடகமாடியவர்கள் மீண்டும் சேர்ந்தது பழைய செய்தி, ஆனால் பிரிந்ததற்கு காரணம் தோழிக்கு அஷ்டமத்தில் சனியாம் கூட இருந்தால் குமுறி குமுறி அடிக்கும் என்றுதான் இந்த நாடகமாம். இதையே சாக்காக வைத்துதான் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி கொள்ளை அடித்தவர்கள் ஒவ்வொருவராக வளைத்துப் பிடித்து உள்ளே போட்டனர். அதுகூட  உரிய கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கை என்று ஒரு பேச்சு. இப்பொழுது புதுக் கூட்டம் சேர்த்து அடிப்பாய்ங்களோ.

ஆனால் இதற்கெல்லாம் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சப்பை கட்டு கட்டும் மெத்தப் படித்தவர் என்ன பதில் வைத்திருப்பாரோ?


மின் கட்டணம்

புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்தவுடன் நேற்றுதான் எங்கள் ஏரியாவில் மீட்டர் ரீடிங் எடுத்து பில் கொடுத்தார்கள். ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. நான்கு மணிநேர மின்வெட்டிலேயே இந்த கட்டணம் என்றால் நாள் முழுவதும் மின்சாரம் இருந்தால் பூவாவுக்கு லாட்டரி தான்.

அரசாங்கம் மின்வெட்டை அதிகமாக்க இதுதான் நேரம்.


தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு அரசாங்க விழாவில் அம்மா புளி வியாபாரி கதை சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றியது தி.மு.க. தலைவர்தான் என்று அரைத்த மாவையே அரைக்க, அவர் சும்மா இருப்பாரா, அவர் அவருடைய பங்குக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே தமிழ் மாதமாக வைத்திருக்கிறார்கள் என்று அம்மா சொல்ல, இவரோ இருபத்தியேழு நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர தமிழ் மாதங்கள் பெயரில்லை என்று நக்கலடிக்கிறார்.

இதில் யார் சொல்வது உண்மை?, யாராவது விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

ரொம்ப குழப்பறாங்க.


சும்மா சிரிப்பதற்கு ஒரு காணொளி

இந்த வார ஜொள்ளுFollow kummachi on Twitter

Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

இவங்களுக்கு இதே வேலைதான்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

முத்தரசு said...

அரசியல் புத்தாண்டை விடுங்க பாஸ் - நீங்க பொறந்ததுல இருந்து எப்ப தமிழ் புத்தாண்டை கொண்டாடினீங்க? அது தான் நமக்கெல்லாம் புத்தாண்டு - இவர்களால் 2011 ல் தமிழ் புத்தாண்டு கொண்டாடவே இல்லை தெரியுமா?அவரு சொன்னாரு தைன்னு அதனால ஏப்ரலில் முடியல - மே அம்மா வந்தாக தை இல்லைன்னாங்க ஆக மொத்தம் 2011 தமிழ் புத்தாண்டே இல்லாம போச்சு.அட போங்கப்பா...வெருப்பாகீது

கும்மாச்சி said...

சரியா சொன்னீங்க, சித்திரையில்தான் நான் கொண்டாடிக்கொண்டிருக்கிறேன்.

Unknown said...

எது தமிழ் புத்தாண்டு...?

கும்மாச்சி said...

ராஜ் நாம் தொன்றுதொட்டு சித்திரையிலேயே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் இவர்கள் எப்படி மாற்றினாலும் நம்மை ஒன்று செய்யப்போவதில்லை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.