Tuesday 10 April 2012

அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே


இரண்டு கழகங்களும் தமிழ்த்தாயை போற்றுகிறோம் என்று தமிழ் புத்தாண்டை அவரவர்கள் விருப்புக்கு மாற்றி ஏட்டிக்கு போட்டி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அய்யா வந்து தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்றால், அம்மா வந்தவுடன் அதெல்லாம் கிடையாது பங்குனி கடைசி தினம்தான் (இந்த வருடம் ஏப்ரல் பதிமூன்றாம் தேதியாம்) என்று குழாயடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடம் ஏப்ரல் பதிமூன்றாம் தேதி தமிழ் புத்தாண்டிற்கு அரசு விழாவாம். மக்களுக்கு அதெல்லாம் கவலை கிடையாது. நீங்க என்றைக்கு வேண்டுமென்றாலும் கொண்டாடிவிட்டுப் போங்க, டாஸ்மாக் "தொறந்திருக்குமில்ல" என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருட தமிழ் புத்தாண்டு அரசு விழாவில் அம்மையாரிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே?, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமாம்.

நடுவர் தீர்ப்பு என்னவென்று யூகிக்கலாம்.

அப்புறம் கம்பன் விருது, அவ்வையார் விருது, திருவள்ளுவர் விருது என்று அம்மாவிற்கு சொம்படிக்கும் கூட்டத்திற்கு பணமுடிப்பு பொற்காசுகள்.

அய்யா தமிழ் மாநாடு நடத்தி அவரது அடிவருடிகளுக்கு நம் துட்டை இறைத்தார். இப்பொழுது அம்மா முறை.

ஹூம் நடத்துங்க. தமிழன் மாற்றி யோசிக்காதவரை உங்கள் ராஜ்யம்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

rajamelaiyur said...

//தமிழன் மாற்றி யோசிக்காதவரை உங்கள் ராஜ்யம்தான்.
//
உண்மைதான்

rajamelaiyur said...

இவனுங்க போட்டிக்கு நாம கொண்ட்டடுற நாட்களை மாத்துரானுங்க

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜா.

Unknown said...

என்னாது மாற்றி யோசிக்கனுமா..போய்யா..அப்புறம் குவாட்டர் கோயிந்தன் வந்தான்னா..இன்னா பன்றது..யோசிப்பா..!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.