Thursday 3 May 2012

கலக்கல் காக்டெயில் -69


புதுக்கோட்டை

இடைதேர்தல் என்றவுடன் ஆளுங்கட்சி தன்னுடைய பலத்தை நிரூபிக்க எல்லா அமைச்சர்கள், அல்லக்கைகள் என்று அந்த ஊரில் டேரா அடித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள். இந்த முறையும் அந்தக் கூத்து ஆரம்பமாகிவிட்டது.

எதிர்க்கட்சிகளோ இந்த முறை வழக்கத்திற்கு மாறாக போட்டியிடவில்லை என்று ஒவ்வொரு கட்சிகளாக அறிவிக்க ஆரம்பித்து விட்டன. இது ஜனநாயகத்துக்கு எதிரொ என்னவோ தெரியாது, ஆனால் எப்படியும் ஜெயிக்கப் போவது ஆளுங்கட்சிதான் என்பதனால் வீண் பணவிரயம் தவிர்க்கப்படும்.

என்ன புதுக்கோட்டை மக்களுக்குத்தான் கொஞ்சம் நஷ்டம், ஓட்டுக்கு பணம் கிடைக்காது, அந்த ஏரியா டாஸ்மாக் வருமானம் கொஞ்சம் குறையும். மக்கள் நல திட்டங்கள் எல்லாம் நிறுத்திட்டாங்களாம்.

மான்புமிகு அமைச்சர்களே எல்லோரும் புதுக்கோட்டையை விட்டு கோட்டைக்கு போய் அம்மாவிற்கு சொம்படித்த நேரம் போக மீதி நேரத்தில் அவங்க அவங்க இலாகா கோப்பைப் பாருங்கள்.

ஆதீனம் என் முடியைப் பாராட்டினார்......................

மதுரை ஆதீனம் நான் பதவிக்காக முடியை துறக்கிறேன் என்றதும் நீ இந்த முடியை வைத்துக்கொண்டுதான் பிரபலமானாய் ஆதலால் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.................நித்யானந்தா.

தக்காளி இவர் பேச்சை கேட்டாலே உலகம் கும்பி எரிகிறது குமுறி வெடிக்கிறது இவர் ..........ரு வச்சா என்ன, எடுத்தா என்ன?
 பயபுள்ள தங்கத்துல என்னமா போட்டிருக்கிறான், இத்தனை நாள் ஆதீனமா இருந்த நமக்கு தெரியலையே


ரசித்த கவிதை

“நடைபாதை பழம் விற்கும் கிழவியிடம்
குருந்தடியின் வலிமை காட்டி
பழம் பறிக்கும் போலிஸ்காரனைத்
தட்டி கேட்க முடியாத
கையாலாகாத்தனம்
கவிதை எழுதினால் அதிகமாகுமென்று
புரிஞ்சு போச்சோ மனசுக்கு”

.......................................இந்திரன்


ரசித்த கீச்சுகள்
நான் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன் - நித்தி # அய்ய்ய்ய் அண்ணே, நான் மல்லிகா டீச்சர் வகுப்பை சேர்ந்தவன்...........ஆல்தோட்ட பூபதி

மடித்து வைக்கும் பர்சில் பணத்தை நீளவாக்கில் வைக்கிறார்கள் ஆண்கள். நீளவாக்கில் இருக்கும் வேலட்டில் பணத்தை மடித்து வைக்கிறார்கள் பெண்கள்.............செ.செந்தில்குமார்   

வீட்டுல்ல வெட்டியா இருக்கும் போது வராத ட்விட் சிந்தனை ஆபிஸ்ல்ல அளவுக்கு மீறி வேலை இருக்கும் போது தான் வந்து தொலையுது.......................தேவ்

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு #புறக்கணிப்பு'ன்னா திராணி இல்லைன்னு அர்த்தமா தமிழ் மூ(பீ)த்த தலைவரே.................சோனியா



இந்த வார ஜொள்ளு






03/05/2012

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படத்தில ஆதினம், தங்கத்தை பார்த்தமாறீ(!) தெரியலைண்ணே...

:-)

முத்தரசு said...

ஜொள்ளு

ஆரு அது? குப்புன்னு ஏறுது

சீனு said...

..........ரு வச்சா என்ன, எடுத்தா என்ன? அந்த டாஷ் சரியான காமெடி பாஸ்

அனைத்தும் அருமை கலக்கல் கும்மாச்சி தான்

கும்மாச்சி said...

பட்டாபட்டி அண்ணே, எங்கேதான் பார்க்கிறாருங்கிறீங்க?

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி

கும்மாச்சி said...

சீனு வருகைக்கு நன்றி.

Unknown said...

பட்டாபட்டி.... said...
படத்தில ஆதினம், தங்கத்தை பார்த்தமாறீ(!) தெரியலைண்ணே...

:-)

>>>>

எனக்கும் அதே டவுட்டுதான்...பய புள்ள எப்பிடிய்யா இத்தனை சமாளிச்சேன்னு A மார்க்கமா நெனக்கிறாரு போல ஹெஹெ!

கும்மாச்சி said...

மாப்ள வருகைக்கு நன்றி.

கற்பதை கற்பிப்போம் said...

nalla pathivukal nanpa
my blog http://www.suncnn.blogspot.com

வெளங்காதவன்™ said...

:-)

krishy said...

நண்பரே,

நல்ல பதிவு ...

முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க

தமிழ் DailyLib

அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

Please mail me krishylib@gmail.com if you have any issues in adding the vote button

Thanks,
Krishy

கும்மாச்சி said...

நன்றி கிரிஷி.

அக்கப்போரு said...

அம்மாவிற்கு சொம்படித்த நேரம் போக மீதி நேரத்தில்

ஆமா இருக்காதே மணி நேரம் தான். இதுல எங்குட்டு ?

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு

கடந்த முறை அதிமுக புறக்கணித்த போது " ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணலாம் " என்று போஸ்டர் அடித்த அல்லக்கைகளை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்

அக்கப்போரு said...

கவிதை நச்

ADAM said...

SUPER

Philosophy Prabhakaran said...

கவிதையை ரசித்தேன்... ஃபிகர் நன்றாக இருந்தாலும் இந்த ஸ்டில் சுமார் தான்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.