Wednesday 16 May 2012

சட்டசபையில் சொம்படிக்கும் அடிவருடிகள்


அ.தி.மு.க. ஓராண்டு சாதனை என்று எல்லா பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் இன்று வந்திருக்கின்றன. மேலும் இன்று சட்டசபையில் பேசிய எல்லா உறுப்பினர்களும் மறக்காமல் நன்றாகவே சொம்படித்தனர். தக்காளி இதில் ஒரு உறுப்பினர் அம்மா பல நூறாண்டு காலம் இது போல ஆட்சி செய்ய வேண்டுமாம், தாங்காதுடா சாமீ.

இதில் “மைனாரிட்டி அரசு” நஷ்டம் ஏற்படுத்தியதை தவறாமல் அம்மா சொல்லும் பொழுது மேசையை ஓங்கித் தட்டிய உறுப்பினர்கள் இன்னும் பத்து நாட்களுக்கு கையைத்தூக்க முடியாது.

சாதனைகள் என்று கூறியது எல்லாம் மக்களை கேட்டால் வேதனை என்றுதான் சொல்லுவார்கள் என்ற உண்மையை மறைத்து ஏதோ கேக்குறவன் கேனையன் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தமிழக மக்களுக்கு வேறே வழியில்லை. ஐந்து வருடம் இதை தாங்கித்தான் ஆகவேண்டும். இந்த ஆட்சி வீண் செலவு செய்தது மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

காவல்துறை இரண்டு கழகங்களுக்கும் ஏவல் துறையாகத் தான் செயல் படுகின்றது என்பது ஊரறிந்த உண்மை. இதில் சட்டம் ஒழுங்கு ஏதோ கட்டுப்பாட்டில் இருப்பதாக காண்பித்துக்கொள்வது நல்ல நகைச்சுவை.
அடுத்தது மணல் கொள்ளை  என்பது இரண்டு கழக ஆட்சிகளும் நல்ல அமோக அதிகாரத்துடன் நடத்தும் ஒரு அராஜகம். இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் முதலமைச்சரிடம் கேட்ட பொழுது தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல.

இந்த ஆட்சியின் நிறைகுறைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இதற்ககெல்லாம் மேலாக சட்டமன்றம் என்பது விவாதத்திற்கான இடம் என்பதை மறந்து ஆளும் கட்சி செயல்படுவது வருந்தவேண்டிய விஷயம்.

கடவுளே தமிழ்நாட்டை இந்த இரண்டு கழகங்களிடம் இருந்து காப்பாற்றவில்லையென்றால் நிறையபேர் நாத்திகர்கள் ஆகிவிடுவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Unknown said...

என்னது விடிஞ்சிடிச்சா...சொல்லவே இல்ல!

கும்மாச்சி said...

ஆமாம் மாப்ள.

தமிழ் மீரான் said...

//சட்டம் ஒழுங்கு ஏதோ கட்டுப்பாட்டில் இருப்பதாக காண்பித்துக்கொள்வது நல்ல நகைச்சுவை//

உண்மை.. உண்மை!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.