Thursday 24 May 2012

கலக்கல் காக்டெயில் 72


ஏழைகள் விடும் கண்ணீர்  

பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து “ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்துவிடும்” என்று அம்மா சாபம் விட்டிருக்கிறார்கள்.  அது சரி, இதுபோல் நடக்குமென்று இருந்தால் இத்துணை நாட்களாக ஏழைகள் விட்ட கண்ணீரில் அம்மா, ஐயா, கொய்யாவெல்லாம் என்றோ அழிந்திருக்க வேண்டும். இந்திய நாட்டில் மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்துவருடம் கண்ணீர்விட்டுவிட்டு பின்பு இன்னொரு கூட்டத்திற்கு ஒட்டு போட்டு விட்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கலாம். விலைவாசி விஷம் போல் ஏறும் பொழுதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. 

ஐ.பி.எல் (Indian Prostitution League)

ஐ.பி.எல் போட்டி என்று ஒரு டுபாகூர் போட்டியை நடத்திக் கொண்டு நம்முடைய பாக்கெட்டில் கைவிட்டு உரிமையோடு ஆட்டையை போட்டுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இப்பொழுது இதில் நடக்கும் முறைகேடுகள், மேட்ச் பிக்சிங், கையை பிடிச்சு இழுத்தியா என்று சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. 

கருப்பு பணம், சூதாட்டம், பாலியல் வன்முறை, போதை விருந்து என அனைத்து சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது ஐபிஎல்.
இந்தப் போட்டிகளையும் தங்களது சொந்த வேலையை விட்டு காசு கொடுத்து ஸ்டேடியத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இவர்கள் போல் ஆட்கள் இருக்கும் வரையில் ஐ.பி. எல் நிர்வாகிகளுக்கு கொண்டாட்டம் தான், இன்னும் நிறைய வெளிநாட்டு ஐட்டங்களை வரவழைத்து ஸ்டேடியத்தில் குலுக்கி குலுக்கி குத்தாட்டம் போட்டு பின் உலகின் மிகப் புராதானமான தொழிலை தொடரலாம்.  .


ரசித்த கவிதை
அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?
கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?
சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?
சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?
ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?
ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?
ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா??
அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்
அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....
---------------------------கவிஞர் வே.பத்மாவதி
இந்தவார லொள்ளு
மவனே எவன்டா அவன் என்னை ஸ்டேடியத்தில் விடமாட்டேன்னது  

இந்தவார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

MARI The Great said...

இவ்வளோ நாலா ஒளிவு மறைவா இருந்தது, சென்னை அணியை Playoff சுற்றுக்கு கொண்டுபோவதர்க்காக அனைத்து அணிகளையும் தோற்கடித்ததில் தெரிந்துபோனது அனைவருக்கும் ..!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.