Monday, 2 July 2012

கலக்கல் காக்டெயில்-77


நித்தியும் ஆர்த்தியும்
ஆர்த்தி ராவ் கர்நாடக போலீசிடம் கொடுத்த புகாரில் ஒரு பிட்டு படத்திற்கான திரைக்கதை வசனங்களுடன் சீன் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். அதற்கு துணை தலைப்புகள் வேறு “ஆனந்தேஷ்வரா, ஆனந்தேஸ்வரி”, “வாரணாசியில் தாசி” என்று கிட்டத்தட்ட சரோஜாதேவி சமாச்சாரங்கள் நிறைந்த ஒரு கிளுகிளு புத்தகம். 

நித்தி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிடதி பக்கம் செல்ல முடியாது. தப்பி தவறி போனால் அவனவன் நொங்கு எடுக்க காத்திருக்கிறான். பரமஹம்ச நித்யானந்தா இனி கொடைக்கானல் பக்கமே பம்ம வேண்டியதுதான்.

விருதுநகர் ஆட்சியர் பாலாஜி
விருதுநகர் ஆட்சியர் “பாலாஜி” காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது இன்றைய செய்தி. இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் “தக்காளி” நீதி நேர்மை என்று எந்த ஆட்சியர் கடைபிடித்தாலும் இது தான் கதி, இதுதாண்டா இன்றைய அரசியல். சரி அவர் செய்த குற்றங்கள் என்ன? 

விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார்.
 புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார்.
அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார்.
 மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆப்படித்தார்.
 ஒழுங்காக வேலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் சத்துணவு கூடம், அங்கன்வாடி பணியாளர்களை நியமிப்பதில் “தகுதி” முறையைக் கடைபிடித்தார். அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார். 

இந்த பணியிடங்களை நியமனம் செய்வதில் எல்லா ஆளும்கட்சி அல்லக்கைகளும் ஒரு வேலைக்கு மூன்று லட்சம் வரை மால் வாங்கியிருக்கிறார்கள். இப்பொழுது கொடுத்தவன் .....ட்டையை நசுக்கிறான். அவ்வளவுதான் ஆத்தாவிடம் சொல்லி அவருக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். 

வெளங்கிடும்.

இசை சித்தர்

இசை சித்தர் சி.எஸ். ஜெயராமன் குரல் ஒரு வித்தியாசமானது. அவரை நிறைய பேர் வெற்றிலை போட்டுக் கொண்டு பாடுவது போல் பாடி நக்கல் செய்வார்கள். அவர்கள் அவரின் இசைத்திறமை பற்றி அறியாதவர்கள். அவரது குரலில் உள்ள பாவம், அவருடைய கமகங்கள் பிர்காகளுக்கு நான் அடிமை. அவர் பாடிய “நெஞ்சு பொறுக்குதில்லையே” அதற்கு சான்று. சமீபத்தில் இணையத்தில் இந்த பாட்டை ரசித்தேன்.  சி.எஸ் அவர்களும், எம்.எல்.வியும் இணைந்து பாடியது. முழுப்பாட்டு கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த இரண்டு நிமிட காணொளி ஒரு பொக்கிஷம். (புரட்சி தலைவர் அட்டகாசம்) .    

இந்த வார ஜொள்ளு 

02/07/2012

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

வெளங்காதவன்™ said...

ஏகபோக வளைவுகள் போல!

#எதுக்கும் இருக்கட்டும்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

மனசாட்சி™ said...

காக்டெயில் செம கலக்கல்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

s suresh said...

அருமையான பதிவு! நல்லவர்களுக்கு காலம் இல்லை! அதனால்தான் கலெக்டர்கள் ஜால்ராக்களாக மாறிவருகிறார்கள்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

கோவி said...

ஏன் இந்த காக்டெயில் இப்படி போதை தருது..

கும்மாச்சி said...

கோவி வருகைக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

இப்பல்லாம் காக்டெயில் முப்பது மில்லி கூட ஊத்த மாட்டேங்குறீங்க...

கும்மாச்சி said...

சரக்கு சப்ளை கம்மி பாஸ், அடுத்த முறை தண்ணி கலக்க வேண்டியதுதான். வருகைக்கு நன்றி பிரபா.

தமிழ்கிழம் said...

அந்த ஆட்சியருக்கு ஆதரவாக நம்மால் ஏதும் செய்ய முடிந்தால் சொல்லுங்கள், காத்திருக்கிறேன்....

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.