Saturday 14 July 2012

கலக்கல் காக்டெயில்-79


உழைப்பாளி அம்மா

தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி “உழைப்பாளி அம்மாவிற்கு ஒரு கவலை ஓய்ந்து கிடக்கும் கருணாநிதிக்கோ பல கவலை” என்று நக்கலடித்திருக்கிறார். அம்மாவை ராவணன் கொடநாட்டில் சந்தித்த பிறகு அய்யா விட்ட அறிக்கை “காண்டில்” தான் மேற்படி அம்மாவின் அல்லக்கைகள் சொறிந்துவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

மன்னார்குடி மாபியா மேல் போட்ட வழக்குகள் எல்லாம் என்ன ஆயிற்று, ராவணன் மேல் உள்ள  வழக்கு அம்பேலா? என்ன நடக்குது இங்கே? என்ற மக்களின் சந்தேகம் நியாயமே.


கலிபோர்னியாவும் சோணகிரி ஆதீனமும்


கலிபோர்னியாவில் நித்திக்கு எதிராக தீர்ப்பு  வந்தால்  மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து பணம் எல்லாம் விநியோகித்து காமெடி பீசான சோணகிரி சாமீ இப்பொழுது நித்தி கொடைக்கானலில் இருந்து திரும்பி வந்தவுடன் பம்ம ஆரம்பித்திருக்கிறார். தக்காளி கொள்ளைகூட்டத்தின் கிடங்காக இருக்கும் மடங்களில் பிணக்கு வரும் பொழுது கோர்ட், வழக்கெல்லாம் சகஜமப்பா.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

“WHO WANTS TO BE MILLIONAIRE” என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாதிப்பில் “அமிதாப்” தொட்டு எல்லா திரை நட்சத்திரங்களும் கல்லா கட்டியபின் விஜய் டிவியில் சூர்யா தொடங்கிய இந்த நிகழ்ச்சி முதலில் டல்லடித்தாலும் பின்னர் கொஞ்சம் பிக் அப் ஆகியது என்னவோ நிஜம்தான்.

ஆனால் கேள்விகளின் தரம் மிகவும் சுமார் ரகமே, தக்காளி அதிலும் எவனும் கோடி வாங்காதது யோசிக்க வேண்டிய விஷயம்.

நாயகன் மார்லன் பிராண்டோ

நேற்று இரவு சன் டிவி இரவுக காட்சியில் நாயகன் திரையிட்டார்கள்.
படத்தில் பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும், கமலின் நடிப்பையும் வெகுவாக ரசித்தேன். கமலஹாசனின் நடிப்பை சில காட்சிகள் காட்பாதர் மார்லன் பிராண்டோ நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.


ரசித்த கவிதை

பூசணிக்காய் மகத்துவம்
மெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;
செய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ!
பொய் வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண் டேன்;உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு கண்டேன்!

---------------பாரதிதாசன்

நகைச்சுவை


கணவன் மனைவியிடம் “செல்லம் இன்றைக்கு என் நண்பனை நம் வீட்டில் விருந்திற்கு அழைத்திருக்கிறேன்” என்றான்.

“இன்றைக்கு ஏன் அழைத்தீர்கள் நான் வீட்டை சுத்தம் செய்யவில்லை, வழக்கம்போல் ஏதும் சமைக்கவில்லை” என்றாள் மனைவி.

“மேலும் அப்படி என்ன இன்று விசேஷம் அவனை விருந்துக்கு அழைக்க” என்றாள்.

அதற்கு கணவன் “அந்த லூசு கல்யாணம் செய்துகொள்ள போகிறானாம் அதான் அழைத்தேன்” என்றான்.

 
இந்த வார ஜொள்ளு 

14/07/2012

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

Thalapolvaruma said...

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முடிவுக்கு வந்து விட்டது இந்த சன் டிவி எப்ப முடிக்க போகிறார்கள்...தமிழ்மனம்2...

வெளங்காதவன்™ said...

//மன்னார்குடி மாபியா மேல் போட்ட வழக்குகள் எல்லாம் என்ன ஆயிற்று, ராவணன் மேல் உள்ள வழக்கு அம்பேலா? என்ன நடக்குது இங்கே? என்ற மக்களின் சந்தேகம் நியாயமே.
////

விடுண்ணே! தொண்டைத் தண்ணி ரொம்ப முக்கியம்... வத்திடப் போவுது...

:-)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

கும்மாச்சி said...
This comment has been removed by the author.
முத்தரசு said...

காக்டெயில் ருசித்தேன்

கும்மாச்சி said...

வெளங்காதவன் வருகைக்கு நன்றி.

வெளங்காதவன்™ said...

பொண்ணுங்க இப்பெல்லாம் இடைல கவனம் வைக்கறதே இல்ல..
ஹம்ம்ம்ம்...

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி

உங்கள் பதிவுகளை பதியுங்கள்

mage said...

jollu engapa kidaikudhu meiyalume oothuthappa, nalla kalam manaivi ellai pakkathule. naduthungapa nalla jollu vida vaingapa

கும்மாச்சி said...

மகி வருகைக்கு நன்றி.

KASBABY said...

kummachi, please give link to all cocktail blogs.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.