Friday 6 July 2012

கலக்கல் காக்டெயில்-78


இருபத்திநான்கு மணிநேர சேவை

கட்டணக் கழிப்பிடமோ, அணை திறப்போ எதுவாக இருந்தாலும் அம்மாவின் ஆணைப்படிதான் நடக்கும். அதே போல இப்பொழுது சரக்கு சப்ளை சேவை இருபத்தி நான்கு மணி நேரமாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு சரக்கிலிருந்து வருமானம் எக்குதப்பாக வருவதனால் மேற்படி சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர்களின் நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு மேலும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடை அடைத்து விடுவார்களோ என்று “கல்ப” வேண்டாம் இனி நிறுத்தி நிதானமாக உள்ளே தள்ளலாம்.

“வாழ்க எம் தாய் தமிழ் நாடு வளர்க சரக்கு சப்ளை”.

அறப்போராட்டம்

அரசின் பழிவாங்கும் போக்கை எதிர்த்து தி.மு.க. நடத்திய அறப்போராட்டம் வெற்றியாக பாவிக்கப்படுகிறது. தி.மு.க தலைமை தனது தொங்கிப்போன தொண்டர்களை நிமிர்த்த இந்த நேரத்தை சாதகமாக்கிகொண்டது உண்மை. அதே நேரத்தில் ஆளுங்கட்சியை சற்று சிந்திக்கவும் வைத்திருக்கிறது. தொண்டர்கள் உண்மையாகவே சிறை செல்ல தயாராக பாய், படுக்கையுடன் வந்தது அவர்களின் போராட்ட உள்ளத்தை காண்பிக்கிறது.

இதையே மக்களுக்காக பால், பேருந்து கட்டண விலையேற்றத்தின் பொழுது செய்திருந்தால் மக்களின் ஆதரவை கொஞ்சம் சம்பாதித்திருக்கலாம்.

கண்டுபிடிக்கப்பட்ட கடவுள் துகள்கள்

கடவுளின் அணுக்கள் என்றழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருப்பது விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங்” வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்து மதத்தில் இது மாதிரி முப்பத்தி மூவாயிரம் கோடி துகள்கள் இருப்பதாக சொல்லுகிறார்களே, ஒன்றை கண்டுபிடிக்கவே இவ்வளவு காலமா, மற்றதெல்லாம் எப்பொழுது கண்டுபிடிப்பார்களோ?.


ரசித்த கவிதை
.
திருச்செந்தூர் ஊர்லே
தேரு நல்ல அலங்காரம்
தேவடியாள் கொண்டையில
பூவு நல்ல அலங்காரம்
காலையிலே கம்பிவேட்டி
மத்தியானம் மல்லுவேட்டி
சாயந்திரம் சரிகைவேட்டி
சந்தியெல்லாம் வைப்பாட்டி
மானத்து சூழ்ச்சியரே
மழைக்கு இரங்கும் புண்ணியரே
வைப்பாட்டி வைக்கப் போயி
வந்ததய்யா பஞ்சம் நாட்டில்

--------------------------------------தமிழர் நாட்டுப்பாடல்கள்  
நகைச்சுவை

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பயங்கர தகராறு. கிட்டதட்ட எட்டு மணிநேரமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
கணவன் வெறுத்து வெளியிலே கிளம்பலாம் என்று காரை ஸ்டார்ட் செய்தான், மனைவியும் வந்து ஏறிக்கொண்டாள்.
ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் ஒரு வயல்வெளியில் ஒரு ஆண் கழுதையும், பெண் கழுதையும் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்தார்கள்.
அதை பார்த்தவுடன் மனைவி “உங்களது சொந்தக்காரர்கள்” என்றாள்.
உடனே கணவன் “ஆமாம் ஆமாம் என் மாமியாரும், மாமனாரும்” என்றான்.

(போன காக்டெயில் சரக்கு சப்ளை ரொம்ப கம்மி முப்பது மில்லி கூட ஊத்தவில்லை என்று “பிலாசபி”  முறையிட்டதால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக ஊற்றப்பட்டுள்ளது) 


இந்த வார ஜொள்ளு 

சைடு டிஷ்
பிலாசபி ஸ்பெஷல்


06/07/2012Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

JR Benedict II said...

நல்ல பகிர்வு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாரி.

Thalapolvaruma said...

இறுதியாய் நகைச்சுவை சூப்பர்...எங்கே இருந்து இப்படி எல்லாம் புடிக்கிரிங்க...

கும்மாச்சி said...

சின்ன மலை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ADAM said...

NALLA IRUKKU

கும்மாச்சி said...

நன்றி ஆடம்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பகிர்வு! ஜோக் சூப்பர்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Anonymous said...

இந்த அம்மா குடிமக்களுக்கு சேவை செய்யணுங்க்றதை தப்பா புரிஞ்சுகிட்டாங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். பார் புகழும் தானைத்தலைவிக்கு ஜெ...சாரி ஜே...

கும்மாச்சி said...

ஆமாம் ரெவ்ரி, தப்பாதான் புரிஞ்சுகிட்டாங்க.

வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.