Tuesday 17 July 2012

கண்ணீரில் பிழைக்க வைத்தான்


இன்று காலை எழுந்தவுடன் செய்தித்தாளில் கண்ட “அமெரிக்க போர் கப்பல் மீன்பிடி படகு மீது துப்பாக்கி சூடு” என்ற செய்தி இன்றைய நாள் முழுவதும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. நானும் கடல் வாசி என்பதால் இந்த மீனவர்களின் பிழைப்பு பற்றி நன்கு தெரியும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மீன்பிடி தொழிலின் முதலாளிகள் உள்நாட்டவரே. அவர்களிடம் சொற்ப கூலிக்கு வேலை செய்பவர்கள் தான் இந்த மீனவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நமது தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியிலிருந்து வந்தவர்களே. சிறுபான்மையினர் ஈரானியர்கள்.

நான் வேலை செய்யும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் இந்த மீன்பிடி படகுகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் அவ்வாறு அவர்கள் தவறாக நுழைந்து விட்டால் பெறும்பாலும் நாங்களே அவர்களை தொடர்புகொண்டு அந்த இடத்தை விட்டு போக சொல்லிவிடுவோம். அவர்கள் தமிழர்கள் என்பதால் எங்களிடம் உள்ள தமிழரையோ இல்லை மலயாளியையோ அனுப்பித்து அவர்களிடம் பேசி உண்மையை தெளியப்படுத்துவோம். ஆனால் அவர்கள் கடலோர காவற்படையிடம் சிக்கிவிட்டால் நிலைமை ரொம்ப மோசம். தற்பொழுது ஜி.பி.ஆர்.எஸ் போன்ற கருவிகள் இருந்தாலும் அவர்கள் வலைவீசுமிடம் மீன்கள் அதிகம் நிறைந்த எங்களது இடம்தான். அவர்களின் பிழைப்பிற்கு அவர்கள் எல்லைதாண்ட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

இன்று காலை செய்தியிலோ அமெரிக்கா கப்பற்படை இவர்களை அருகில்  வரவேண்டாம் என்று சொல்லியும் இந்த அப்பாவி மீனவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளதாக தெரிகிறது. தற்பொழுதுள்ள அரசியல் நிலைமையில் அமெரிக்க போர் கப்பலும் இரானிய தற்கொலை படை என்று நினைத்து  அதிக ரிஸ்க்  எடுக்காமல் சுட்டதில் அப்பாவி “சேகர்” பலியாகியுள்ளார்.
இங்கே ஒரு பலியானது மிகவும் வருத்தம் தருகிறது. அதற்கு வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாயும், அமைச்சர் கிருஷ்ணாவும் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் நம்ம அண்டைநாடான ஸ்ரீலங்கா தினமும் நம்முடைய தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டிருப்பதில் மத்திய அரசு எந்த வித அக்கறையும் காட்டாதது வேதனையாக உள்ளது.  நம்முடைய முதலமைச்சர்களும் கடிதம் எழுதி எழுதி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு இருந்த “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற எழுச்சி எல்லாம் இப்பொழுது அலைக்கற்றையில் அடிபட்டு போயிருக்கிறது.

என்று விடியுமோ? 





.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

முத்தரசு said...

// தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டிருப்பதில் மத்திய அரசு.//

வலிக்குது பாஸ்

வெளங்காதவன்™ said...

//
என்று விடியுமோ? ///

எனக்கென்னமோ இந்தியா, அடிமை வரலாற்றை நோக்கிப் போவதாகவே உணர்கிறேன்....
கிழக்கிந்தியக் கம்பெனிகளின் "பொற்கால" ஆட்சி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!!!

(அண்ணேன்! இந்தக் கமண்ட நல்லா நோட் பண்ணி வச்சுக்க!! வரும் நாட்களில், "வெளங்காதவன் ஒருத்தன் அன்னிக்கே சொன்னாண்டா"னு சொல்ல உதவும்).

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! இப்போதெல்லாம் மீனவர்களை சிங்களவர் மட்டுமல்ல நம்மவர்களும் சேர்ந்தே கொல்கிறார்கள்!

கும்மாச்சி said...

\\
வெளங்காதவன்™ said...

//
என்று விடியுமோ? ///

எனக்கென்னமோ இந்தியா, அடிமை வரலாற்றை நோக்கிப் போவதாகவே உணர்கிறேன்....
கிழக்கிந்தியக் கம்பெனிகளின் "பொற்கால" ஆட்சி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!!!

(அண்ணேன்! இந்தக் கமண்ட நல்லா நோட் பண்ணி வச்சுக்க!! வரும் நாட்களில், "வெளங்காதவன் ஒருத்தன் அன்னிக்கே சொன்னாண்டா"னு சொல்ல உதவும்).
18 July 2012 06:43 //

அண்ணே சரியா சொன்னீங்க.

கும்மாச்சி said...

s suresh said...

\\ உண்மைதான்! இப்போதெல்லாம் மீனவர்களை சிங்களவர் மட்டுமல்ல நம்மவர்களும் சேர்ந்தே கொல்கிறார்கள்!//

ஆமாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தப்படும் விஷயம்... காலம் ஒரு நாள் மாறும்...

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.3)


"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

praba wine shop said...

yenda kummachi ithulayuma copy?

கும்மாச்சி said...

\\praba wine shop said...

yenda kummachi ithulayuma copy?//

What do you mean?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.