Tuesday 11 September 2012

கூடங்குளம் நிலைமை என்ன?

கடந்த இரண்டு நாட்களாக கூடங்குளம்தான் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தியை ஒளிபரப்புவதில் எல்லா தொலைகாட்சி சேனல்களும் தங்களது அரசு சார்ந்த நிலையை தங்களது உண்மை முகத்தை காட்டியிருக்கின்றன. நடுநிலை என்று பறை சாற்றிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையும் தனது அரசு சார்ந்த நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களின் தேவைக்கு ஏற்ப செய்து கொண்டிருக்கிறார்கள்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கைதுக்குப் பிறகு போராட்டம் அடங்கிவிடும் என்று அரசு நினைப்பது தவறு போல் தோன்றுகிறது. இந்த போராட்டத்தின் நோக்கை இடிந்தகரை மக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

தமிழக அரசு இதில் செய்த முதல் தவறு, "நான் உங்களில் ஒருத்தி" என்று அம்மையார் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அவர்களுக்கு கொம்பு சீவிவிட்டடதுதான். அம்மையாருக்கு முதலிலேயே தெரியும் இன்றைய தமிழ்நாட்டு மின்சார தட்டுப்பாட்டை நீக்க கூடங்குளம்தான் ஆபத்பாந்தவன் என்று. இருந்தாலும் மத்திய அரசை எதிர்க்கவேண்டும் என்று சடுதியில் பேசப்பட்ட பேச்சு அது. மேலும் அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கு வேறு தலையை தின்று கொண்டிருக்கிறது.

தமிழீனத் தலைவரைப் பற்றி சொல்லவேண்டாம். அவர் வாயை மூடியிருப்பதே மேல். ஏற்கனவே ஊழல் வழக்குகளில் அவரது குடும்பத்தார் சிக்கிக் கொண்டிருப்பதில் இருந்து விடுபடவேண்மென்றால் ....த்தை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

இதில் வை.கோ எப்படியாவாது ஏதோ ஒரு பிரச்சினையை பிடித்துக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிலைமை. முல்லை பெரியாறு, கூடங்குளம் என்றால் முதலில் கழுத்து நரம்பு புடைக்க பேசி மக்களை உசுப்பி விடுவார். இதில் அடுத்த டுபாக்கூர் தமிழ் குடிதாங்கிதான். .....த்தா இவருக்கு மின்சாரமும் வேண்டும் அதை அதிகரிக்க  அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஏதாவது முட்டுக்கட்டை போடவேண்டும். விமான தளம் விஷயத்தில் இவரடிக்கும் கூத்து நாடறிந்தது. இந்த அழகில் இவர் ஒவ்வொரு தேர்தலிலும் எவர் காலில் விழுந்தாவது காசு பார்ப்பார். மற்ற அல்லக்கை கட்சிகள் பற்றி இங்கு பேசுவது அபத்தம்.

எல்லா பிரச்சினைகளுக்கும் வாலாஜா தெருவில் உண்ணாவிரதம் இருக்கும் திரை பிரபலங்கள் எங்கே போனார்கள்? என்று தெரியவில்லை.

சுப. உதயக்குமார் எதற்கும் இறங்கமாட்டோம் என்று நிலைமை அவரது நேர்மையை சந்தேகிக்க செய்கிறது. இதில் அப்பாவி மக்களின் நிலை பரிதாபகரமானது.

இப்பொழுது விஷயம் உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது.  என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.


Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

settaikkaran said...

//எல்லா பிரச்சினைகளுக்கும் வாலாஜா தெருவில் உண்ணாவிரதம் இருக்கும் திரை பிரபலங்கள் எங்கே போனார்கள்? என்று தெரியவில்லை.//

அவங்க வேறே வந்து குட்டையைக் குழப்பணுமா? வொய் திஸ் கொலவெறி? :-)))

கும்மாச்சி said...

பாஸ் ஏதோ நம்மால் முடிந்தது, கொளுத்திப் போடுவமே.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா, வருகைக்கு நன்றி.

முத்து குமரன் said...

அரசியல்வாதிகளுக்கு கூடங்குளம் மிகப் பெரிய வரம், இதை வைத்தே அடுத்த தேர்தல் வரை ஓட்ட முடியும். கூடங்குளம் பற்றிய எனது கருத்தையும் நேரமிருந்தால் காண வரவும். http://muthuchitharalkal.blogspot.in/2012/09/blog-post_11.html

கும்மாச்சி said...

முத்துகுமரன் சரியாக சொன்னீர்கள், இதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

முத்தரசு said...

இந்த அரசியலை.....பாப்போம்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

விஜய் said...

//அம்மையாருக்கு முதலிலேயே தெரியும் இன்றைய தமிழ்நாட்டு மின்சார தட்டுப்பாட்டை நீக்க கூடங்குளம்தான் ஆபத்பாந்தவன் என்று.//

அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது பாமர மக்களுக்கே தெரியும். உங்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.