Tuesday 30 October 2012

அகில உலக அம்மாவும், கேப்டனும், நீலம் புயலும்.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டை இரண்டு புயல்கள் மையம் கொண்டுள்ளன. யாரோ சொன்னதுபோல "இதுவும் கடந்து போகும்". ஒரு புயல் எப்படியும் கொட்டி தீர்த்துவிட்டு, அடித்து ஆரவாரமாய் போய்விடும். கடலூரா நாகையா, இல்லை நெல்லூரா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அரசு போனமுறை செய்த தவறை இந்த முறை செய்யமாட்டார்கள் என்று எதிர் பார்ப்போம்.

தானே புயல் எப்பொழுது எந்த நொடியில் எந்த இடத்தை கடக்குமென்று அதிசயமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த பொழுதிலும் அரசின் மெத்தனத்தால் இழப்பை சந்தித்தது கடலூர். மின்சாரத்தை சரி செய்யவே கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் ஆனது. இந்த முறை முன்னேற்பாடுகள் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

மற்றொரு புயல் சட்டசபையில் மையம்கொண்டு விமானநிலையத்தில் தீவிரமடைந்தது. தே.மு.தி.க தலைவர் கேப்டனை தாக்கிக்கொண்டிருக்கிறது. அவரது கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கும் கேடுகெட்ட அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டன. இப்பொழுது அவர்மீது கொலைமிரட்டல் தொடங்கி எல்லா வழக்குகளிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேறெங்கும் பார்க்கமுடியாது.

அம்மாவை  எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை கேப்டன் புரிந்து கொண்டிருப்பார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு சாதகமாக மாறும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. எப்படியும் வெள்ளிகிழமை கேப்டன் களி உண்ண நாள் குறித்திருப்பதாக தெரிகிறது.

அம்மாவிற்கு, நீலம் புயலோ, இருளில் மூழ்கியிருக்கும் தமிழகம் பற்றியோ கவலை இல்லை. அவர்களின் முதல் அஜெண்டா.............

கேப்டனை எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து இறக்கி  தன் ஆணவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

அம்மா அகில உலக அகிலாண்டேஸ்வரி தாயே, நடக்கட்டும், அடுத்த இந்திய பிரதமராக வேண்டிய தகுதி உங்களுக்கு நன்றாகவே இருக்கிறது.

வாழ்க தமிழகம்.


Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

settaikkaran said...

//அடுத்த இந்திய பிரதமராக வேண்டிய தகுதி உங்களுக்கு நன்றாகவே இருக்கிறது.//

இதென்ன, மூன்றாவது புயல் எச்சரிக்கை மாதிரி? :-)

கும்மாச்சி said...

இதுவும் கடந்து போகும்.................வருகைக்கு நன்றி சேட்டை.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நிலை மாறும்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அம்மாவின் ஆணவம் உலகம் அறிந்தது! கேப்டனும் சற்று பொறுத்திருக்க வேண்டும் பத்திரிக்கையாளரிடம்!

NKS.ஹாஜா மைதீன் said...

#இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேறெங்கும் பார்க்கமுடியாது.#


ரொம்ப சரி..இதெல்லாம் ஒரு பொழப்பா?அதுவும் மெஜாரிட்டியில் இருக்கும் ஒரு கட்சிக்கு?!

கும்மாச்சி said...

சுரேஷ், ஹாஜா வருகைக்கு நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

கண்டிப்பா இந்த ஆட்சியும் கடந்து போகும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

வவ்வால் said...

கும்மாச்சி,

//அம்மாவை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை கேப்டன் புரிந்து கொண்டிருப்பார். //

வெநாட்டில் இருக்கும் தில்லில் இப்படிலாம் சொல்லுறிங்க,இன்னேரம் உங்க எதிரிகள் இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அவங்களை திட்டியதற்கு ஆதாரமாக காட்டும் போது பாருங்கள் அம்மாவையே இப்படி சொல்லுறார் என்றால் என்னை என்ன சொல்லி இருப்பார்னு போட்டு கொடுப்பாங்கோ :-))

தாயகம் திரும்பூம் போது வலை வீசி பிடிக்கப்பட்டார் "ஆபாசமாக எழுதிய பதிவர்னு" நியூஸ் போடுவாங்க :-))

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.