Monday 12 November 2012

கலக்கல் காக்டெயில் 92

பிராமணாள் கபேயும், டாஸ்மாக்கும்

சமீபத்திய செய்திகளில் கவனிக்க வைத்தவை

ஸ்ரீரங்கம் பிராமணாள் கபே இழுத்து மூடப்பட்டது. அதன் ஓனர் அதை திருவானைக்காவலில் சொந்தக்கட்டிடத்தில் அதே பெயருடன் எப்படியும் திறப்பேன் என்று சொல்லுவது உபசெய்தி.

மற்றுமொரு செய்தி, அரசு தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் விற்பனை நிர்ணயம். எப்படியாவது இருநூற்றைம்பது கோடிக்கு விற்றாக வேண்டுமாம். கடையை ஒரு நாள் மூடுவோம் என்று அறிவித்தால் இருநூற்றைம்பது என்ன ஆயிரம் கோடிக்கு கூட விற்கலாம்.

ரெண்டு கட்டிங் விட்டால் மின்சாரத்தை மறந்து சாலைகளின் நெரிசலின் ஊடே நடுத்தெருவில் வேட்டி அவிழப்படுத்திருக்கலாம்.

டெங்கு  கொசு 

கேஜ்ரிவால் நாளொருமேனியும் பொழுதொரு குண்டுமாக கருப்பு பண பதுக்கல் பேர்வழிகள் என்று சரவெடி கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெருச்சாளிகளோ அவர் ஒரு கொசு என்கின்றனர். ஆமாம் நான் ஒரு டெங்கு கொசு என்கிறார்.

கிட்டத்தட்ட எண்ணூறு பேருக்கு மேல் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனராம். நம்ம ஊரு ஸ்டேட்வங்கியில் கணக்கு தொடங்க, ரேஷன் அட்டை, ஐ.டி.கார்ட் லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் ஆவணங்கள் தரவேண்டும். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு தொலை பேசி அழைப்பு போதுமாம். நான் கூட பத்தாயிரம் ரூபாயை மனைவி கண்ணில் படாமல் வைக்க சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், சுவிஸ் வங்கி அழைப்பு எண்தான் தெரியவில்லை.

தீபாவளி 

வருடா வருடம் வந்து ஷாப்பிங்கில் தொடங்கி, பர்சை பதம் பார்த்து, இனிப்பில் நனைந்து, வெடிகளில் விழுந்து தொலைக்காட்சியில் உறங்கிவிடுகிறது.

கவிதை, கவிதை............ ஏதோ ஒரு ஃப்லோவில் வந்துவிட்டது.

யோசித்துப் பார்த்தால் வருடா வருடம் இதே கதைதான். நம்ம வீட்டு பெருசுங்கதான் இன்னும் ஒரே அட்டவணையில் கொண்டாடிக்கொண்டு தீபாவளி பழைய எண்ணங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

ரசித்த  கவிதை 

அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பதும்  சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு
கல் நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ  வடித்த ஐ ஆர் எட்டின்
சுவைகூட  இல்லை.

.........................வெ. அனந்தநாராயணன்

ஜொள்ளு








12/11/2012





 

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

இராஜராஜேஸ்வரி said...

இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ வடித்த ஐ ஆர் எட்டின்
சுவைகூட இல்லை. //

உண்மைதான் ...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மேடம்.

முத்தரசு said...

வருடா
வருடம்
வந்து
ஷாப்பிங்கில்
தொடங்கி,
பர்சை
பதம்
பார்த்து
இனிப்பில்
நனைந்து
வெடிகளில்
விழுந்து
தொலைக்காட்சியில்
உறங்கிவிடுகிறது.

கவிதை, கவிதை............

முத்தரசு said...

//ரசித்த கவிதை //

கண்கள் குளமாகின - மனசை தொட்ட கவி

கும்மாச்சி said...

முதாரசு வருகைக்கு நன்றி.

வெளங்காதவன்™ said...

//சுவிஸ் வங்கி அழைப்பு எண்தான் தெரியவில்லை.///

http://swiss-bank-accounts.com/e/contact/index.html

கும்மாச்சி said...

அண்ணா நன்றிங்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை நெகிழ வைத்தது வரிகள்...
tm2

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கலோ கலக்கல்! சூப்பர்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் நன்றி.

Anonymous said...

என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

கும்மாச்சி said...

ரெவ்ரி வாழ்த்துகளுக்கு நன்றி.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

கும்மாச்சி said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

BKK said...

யார் அந்த ஆன்ட்டி முதல் படத்தில்

Unknown said...

இந்த போஸ் ஒன்று போதும் தமிழ் சினிமாவிற்க்கு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.