Monday 26 November 2012

சச்சினின் சோக கீதம்

சமீபகாலமாக சொதப்பிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் மாமேதை சச்சினின் சோக கீதம்.

போனால் போகட்டும் மெட்டில் மூன்றுக்கு நாலு தாள ஜதியில் பாடிக்கொல்ல(ள்ள)வும்

தோற்றால் தோற்கட்டும் போடா
இந்தியா தொடர்ச்சியாய் வென்றது ஏதடா?
தோற்றால் தோற்கட்டும் போடா?

பனேசார் போட்டது தெரியும்
பந்து  வந்தது தெரியும்
ஸ்டம்பு போனது தெரியாது
அடுத்து வருபவனும்
அவுட்டாவான் என்று
முன்பே எனக்கு தெரியாது
நமக்கும் முன்னே அம்பயரடா
நாலும் தெரிந்த வில்லனடா
அவுட்டு கொடுக்கும் அறிஞனடா
தோற்றால் தோற்கட்டும் போடா?


ரெகார்டுக்கும் பணத்திற்கும்
வழியினைக் கண்டேன்
இந்தியா வெல்வதற்கு
வழியினைக் கண்டேனா?
கண்டிருந்தால்  இன்று
ஓய்வினை பற்றி நினைப்பேனா
கிரிக்கட் என்பது வியாபாரம்
அதில் விளம்பரம் என்பது வரவாகும்
ரசிகர்கள்  என்பது எரிச்சலாகும்
தோற்றால் தோற்கட்டும் போடா............


தோற்றால்  தோற்கட்டும் போடா
இந்தியா தொடர்ச்சியாய் வென்றது ஏதடா
 தோற்றால்..................  தோற்கட்டும் போடா .....................

ஓ  ஓ ஓ.................ஊ ஊ ஊ




Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

அருணா செல்வம் said...

கிரிக்கட் என்பது வியாபாரம்
அதில் விளம்பரம் என்பது வரவாகும்....

உண்மையை எல்லாம் பாடும் சோக கீதம்... போனால் போகட்டும் போடா....

நன்றாக உள்ளது கும்மாச்சி அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

அட... அவர் கலக்க விட்டாலும் நீங்க கலக்கிட்டீங்க...!
tm2

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

நான் மிகவும் ரசித்தேன் கூடவே பாடியும் பார்த்தேன். நான் சச்சின் குறித்து ஒரு பதிவு எழுதுகிட்டு இருக்கேன், திடீர்ன்னு பார்த்தால் உங்களுடைய சச்சின் பதிவு, அச்சச்சோ! வட போச்சேன்னு இங்கு வந்தால் , ஸ்வீட் கொடுத்துட்டீங்க, உங்க பதிவிற்கும் நான் எழுதுகிற பதிவிற்கும் சம்மந்தமே இல்லை.

கும்மாச்சி said...

ஆகாஷ், தனபாலன், அருணா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

இப்பவாது கிரிக்கெட் வியாபாரம் என்பதை ஒப்பு கொண்டிர்களே அதுவே மிக பெரிய விஷயம்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Admin said...

நல்லாயிருக்கு கும்மாச்சி..ரசிச்சேன்..

கும்மாச்சி said...

மதுமதி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.