Wednesday 9 January 2013

நண்பர்களின் கவனத்திற்கு

நான் சென்னையில் பெரும்பாலும் பேருந்தை உபயோகிப்பதில்லை. கடந்த சில வருடங்களாகவே பேருந்தில் பயணிக்காததால் இப்பொழுது புதியதாக வந்த ரூட் நம்பர்கள் எல்லாம் தெரிவதில்லை. இருந்தாலும் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவலை தமிழாக்கம் செய்து பதிவு செய்கிறேன். கண்டிப்பாக இது சென்னை பேருந்தில் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இனி மின்னஞ்சலின் தமிழாக்கம்

உண்மை சம்பவம் ---------ரஞ்சனி

நான் சென்னை துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறேன். தினமும் பணிமுடித்துவிட்டு சென்னை மாநாகர போக்குவரத்து பேருந்தில் ஜெயின் கல்லூரி நிறுத்தத்தில் ஏறி டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கி தொடர் வண்டி பிடித்து வீடு போய் சேருவேன். கேளம்பாக்கத்திலிருந்து வரும் பேருந்துகள்  (19B, 21H) ஆரம்பகாலத்தில் டைடல்பார்க் நிறுத்தத்தில் நிற்பதில்லை. ஆதலால் நான் T51 பேருந்தைப் பிடித்து டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்வேன். நாளடைவில் 19 B பேருந்துகளும் அங்கு நிற்க ஆரம்பித்தன.

அன்று இரவு 8:30 மணி அளவில் அலுவலகத்தை விட்டு கிளம்பி 9:28 மணி தொடருந்தை டைடல் பார்க் நிறுத்தத்தில் பிடிக்கலாம் என்றிருந்தேன். ஆதலால் ஜெயின் கல்லூரி நிறுத்தத்தில் 19 B பேருந்தில் 8:45 மணியளவில்   ஏறிக்கொண்டேன். நடத்துனரிடம் டைடல் பார்க் நிறுத்தத்திற்கு டிக்கட் கேட்டேன். அவர் இந்த பேருந்து அங்கு நிற்காது வேண்டுமென்றால் சிக்னல் நிறுத்தத்திலோ அல்லது அடுத்த நிறுத்தத்திலோ இறங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் நான் தினமும் இதே வண்டியில்தான் செல்கிறேன் அவர்கள் நிறுத்துகிறார்களே என்று கூறியும் அவர் அதையே சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஏதோ ஒருமுறை பேருந்தில் பயணிக்கும் பொழுது ஒரு புகார் எண்ணை (9884301013)என்னுடைய அலை பேசியில் சேமித்து வைத்திருந்தேன். அந்த எண்ணை அழைத்து நடத்துனர் நிறுத்தத்தில் நிறுத்தமாட்டார் என்று எனது புகாரை சொன்னேன்.

மறுமுனையில் பேசிய அந்த சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி  அலைபேசியை நடத்துனரிடம் கொடுக்க சொன்னார். நடத்துனரோ அதை வாங்கி பேச மறுத்துவிட்டார். அதை அந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் அதற்கு பேருந்து இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறது என்று கேட்டார். நான் கந்தன்சாவடி அருகே இருக்கிறோம் என்றேன். பின்னர் பேருந்தின் பதிவு என்னையும் கேட்டார். பிறகு சரி நான் அவர்களுடன் பேசிக்கொள்கிறேன் என்றார். எனக்கு இவர் எப்படி நடத்துனரிடமோ இல்லை ஒட்டுனரிடமோ பேசுவார் என்று சந்தேகம்.

சற்று நேரத்தில் ஓட்டுனர் அருகே இருந்த Wireless transmitter அலற ஆரம்பித்தது. ஓட்டுனர் உடனே வண்டியை ஓரங்கட்டினார். எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஓட்டுனருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவருக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். அவரிடம் அந்த அதிகாரி ஏன் டைடல் பார்க் நிறுத்தத்தில் நிறுத்தமாட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு ஓட்டுனர் இல்லை நிறுத்துகிறோமே என்றார். பின் ஏன் நடத்துனர் நிறுத்த மாட்டோம் என்று சொன்னார் என்று கேட்டார். ஓட்டுனர் நடத்துனரை விட்டுக்கொடுக்காமல் அவர் இந்த தடத்திற்கு புதியவர் அவருக்கு தெரியாது என்றார். பின்னர் ஓட்டுனர் நடத்துனரிடம் இதை பற்றி கேட்க அவர் பேசாதிருந்தார்.பின்னர் ஓட்டுனர் என்னிடம் நான் டைடல் பார்க்கில் நிறுத்துகிறேன் என்றார்.

பின்னர் சென்னை மாநகர பேருந்து அதிகாரி புகார் கொடுத்த நபரிடம் பேசவேண்டும் என்றார். நான் ஒலிவாங்கியின் அருகே சென்று அவரிடம் பேசினேன். அவர் நடந்தற்கு மாநகர் போக்குவரத்து சார்பில் மன்னிப்பு கேட்டார். பேருந்தில் உள்ள சக பயணிகளுக்கு ஒரே ஆச்சர்யம். என்னை ஒரு மாதிரி பார்த்தனர். சில பயணிகள் யாருக்கு போன் செய்தீர்கள் அந்த எண் என்ன? என்று என்னடம் கேட்டனர். பின்னர் வண்டி டைடல் பார்க் நிறுத்தத்தில் நின்றது, நான் இறங்கிக்கொண்டேன்

பின்னர் நான் மறுபடியும் அந்த அதிகாரியை அழைத்து வண்டி நிறுத்தத்தில் நின்றது உங்கள் உதவிக்கு நன்றி என்று  சொன்னேன்.

எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல சக பயணிகளுக்கும் ஏன் ஓட்டுனர் நடத்துனருக்குமே ஒரு புது அனுபவம்தான். நமது அரசாங்கத்திலும் இது போன்ற நல்ல செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன.

நவீன தொழில் நுட்பத்தை கையாண்டு நல்ல காரியங்கள் செய்கிறார்கள்.

இது போன்ற புகார்களுக்கு அழைக்க வேண்டிய எண்கள் (9884301013,9445030516,9383337639)  


Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

ப.கந்தசாமி said...

பரவாயில்லையே.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கந்தசாமி ஐயா.

Tamil Indian said...

I have seen this mail going rounds, but I am not sure if the information is true.

The internet is full of junk and it is easy to pass on a lie as genuine.

How to check if the information is fake or hoax:
copy paste part of the article in google and search (using quotes for exact search). Websites like Hoaxslayer most of the times identifies hoax spams.

கும்மாச்சி said...

தமிழன் நீங்கள் கூறுவது போலும் இருக்குமோ? சோதித்துவிடலாம்.

Tamil Indian said...

Kummachi,
I was able to locate the english article, but was unable to confirm if it is a hoax from google search.

No authentic source attaches the phone number to any government transport organization.

I would assume this as a hoax, but I may be wrong.

சீனு said...

அருமையான பதிவு கும்மாச்சி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சீனு.

CS. Mohan Kumar said...

Very useful post. Need to share this information with others.

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா..நான் அடிக்கடி சென்னையில் பஸ்ஸில் தான் சுத்துவேன். மிக உபயோகமான பதிவு. நன்றி.

கும்மாச்சி said...

அமுதா கிருஷ்ணன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.