Monday 4 February 2013

டேவிட்-விமர்சனம்

கதை-பிஜோய் நம்பியார், நடாஷா சாகல்
இயக்கம்-பிஜோய் நம்பியார்
ஒளிபதிவு-ரத்தினவேல்
இசை-ஏராளமானோர்
எடிடிங்-ஸ்ரீகர் ப்ரசாத்
நடிப்பு-விக்ரம்,ஜீவா,தபு, லாரா தத்தா, இஷா சர்வாணி, நாசர், ரோகினி ஹட்டங்காடி 
பட்ஜெட்-ஐம்பது கோடி

படம் ஒரே பெயருள்ள இவரைப்பற்றிய கதை. ஒரு டேவிட் ஜீவா கிடார் வாசிப்பவர்.உலகம் சுற்றும் கனவில் இருப்பவர்.அவருடைய அப்பா ஒரு மத போதகர். அவருடைய அப்பாவை ஒரு மதவாத இயக்கம் நடு ரோட்டில் இழுத்து புரட்டி விடுகிறார்கள். அதை நினைத்து ஜீவா பொங்குகிறார். நடுவில் அப்பப்போ லாரா தாத்தாவிடம் அழுகிறார். அந்த அம்மா இதுதான் சாக்கு என்று கட்டிக்கொள்கிறது.

அதே பெயரில் உள்ள மற்றுமொரு டேவிட் கோவாவில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். அவர் தண்ணியில் மீன் பிடிப்பதற்கு பதில் எப்பொழுதும் தண்ணியில் மிதக்கிறார். இவர் காதுகேளாத வாய் பேச முடியாத ரோமாவிடம் ஒரு தலையாக ஜொள்ளுகிறார். அதை மசாஜ் பார்லோர் வைத்திருக்கும் தபுவிடம் சொல்லுகிறார். அந்த அம்மா வண்டி வண்டியாக அட்வைஸ் தருகிறார். ஆனால் ரோமாவை விக்ரமின் உயிர் நண்பர் பீட்டர் கல்யாணம் செய்து கொள்ள போகிறார்.

யார் யாரை கல்யாணம் செய்துகொண்டார்கள், இரண்டு டேவிடுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அசாத்திய பொறுமையும் நேரமும் இருந்தால் 164 நிமிடங்கள் பார்க்கவேண்டும்.

இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யராம். சத்தியமாக "மௌனராகம்" காலத்தில் இருந்திருக்க மாட்டார்.இவ்வளவு மொக்கையாக யாராலும் படம் எடுக்க முடியாது. ரத்தினவேல் ஒளிப்பதிவு படத்தில் ஏதோ சுமாராக இருக்கிறது.

தபுவிற்கு இதில் பஞ்ச் வசனம் வேறு

காதல் என்றால் ஒரே எமோஷன் தானாம், மற்றதெல்லாம் லூஸ் மோஷனாம்.

இதை கேட்ட நமக்கு "காதல் ஸ்லோ மோஷனில் போகும் லூஸ் மோஷன் ஸ்லோ மோஷனில் போகமுடியுமா" என்று கத்த தோன்றுகிறது.

படம் திருட்டு வீடியோவிற்கு கூட லாயக்கு இல்லை.






Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

அருணா செல்வம் said...

அடக்கடவுளே....
ஐம்பது கோடிக்கு எடுத்தப்படத்தை
இப்படி ஐந்து வரியில் (ஐம்பது வரிகூட இல்லை)
சாச்சிட்டீங்களே கும்மாச்சி அண்ணா....
இது நியாயமா....?
இந்த விமர்சனத்தைப் படிச்சிட்டு யாராவது அந்தப் படத்தை பார்பாரா...?

பாவம்....

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Kannan said...

same feeling....

பாரிவேந்தன் said...

டேவிட் பார்ப்பவர்களையெல்லாம் ஆக்கிட்டாங்க இடியட்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.