Tuesday 5 February 2013

கமலுக்கு அன்போடு ரசிகன் எழுதும் கடிதம்

அன்புள்ள உலகநாயகன் கமலுக்கு

ஒரு தமிழ் சினிமா ரசிகன் எழுதும் கடிதம், நடுவுல பத்ம ஸ்ரீ, உலகநாயகன், காதல் இளவரசன் எல்லாம் போட்டுக்கோங்க.

விஸ்வரூபம் எடுத்து வெளியிடுவதற்கு நீங்கள் பட்ட கஷ்டங்களையும் அடித்த ஸ்டன்டுகளையும், சிரிச்சுகிட்டே நீங்க உருக்கமா கொடுத்த பேட்டிகளையும் எல்லா தொலைகாட்சிகளிலும் போட்டு  இலவசமாக உங்கள் படத்திற்கு விளம்பரம் தேடி கொடுத்தார்கள். அதில் அவர்களுக்கும் லாபம்தேன்.

ஒரு தனி மனிதனுக்காக முதலமைச்சர் இறங்கி வந்து பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தியது தமிழக அரசியலில் இதுவே முதல் தடவை, அதுவும் அம்மா தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வந்தது பெரிய விஷயம்தான். இதில் ஏதோ அம்மாவிற்கு உங்கள் சொத்து பறிபோய்விடுமோ என்ற அக்கறை என்று நினைத்தால் தமிழனைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது. மற்ற மாநிலங்களில் பிரச்சினை இல்லாமல் படம் வெளிவந்து விட்டதே தமிழ்நாட்டில் வெளிவரவில்லை என்றால் அம்மாவின் ஆட்சியின் மீதும் அவர் கவனிக்கும் காவல் துறை மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் வந்துவிடுமே என்று ஏதாவது ஒரு மொட்டை ..............ன் அறிவுரை வழங்கி இருக்கலாம். மற்றபடி அவருக்கு உங்கள் படத்தின் மீதோ அல்லது நீங்கள் போட்ட முதலீடு மீதோ எந்த ஒரு அக்கறையும் இருப்பதாக நம்புவதற்கில்லை. மேலும் அறிவாலயத்திலிருந்து ஐயா கொளுத்திப் போட்டதினால் விஷயம்இன்னும் சூடு பிடித்து அம்மாவை கேமரா முன் நிற்க வைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.


ஆனால் நீங்கள் விஸ்வரூபம் படத்தை எடுத்ததின் மூலம் ஒரு பாடம் கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நம்பும் ஆறுகோடி தமிழ் மக்களில் நானும் ஒருவன்.

நீங்கள் எந்த மதத்தினரையாவது  கிண்டல் செய்து,அல்லது விமர்சித்து உங்கள் சமூக அக்கறை, பகுத்தறிவு சித்தாந்தம் இத்யாதி இத்யாதி முதலியவற்றை நிரூபிக்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது இந்து மதம். அதை என்ன வேண்டுமென்றாலும் குத்தி கிழியுங்கள், சும்மா எவனாவது குரல் விட்டு விட்டு குப்புறப் படுத்துக்கொள்வான். உங்கள் படத்திற்கு பிரச்சினை வராது.

எந்த எதிர்ப்புமே வரவேண்டாமென்றால் அவ்வை சண்முகி மாதிரி ஒரு படம் எடுங்க. விஸ்வநாத அய்யர் மாதிரி ஒரு கேரக்டரை உருவாக்கி கையில் க்ளாஸ் கொடுத்து ஸ்திரீ லோலனாக காண்பித்து, நீங்க மடிசார் கட்டி மாரை திறந்து காண்பியுங்க, எவனும் கொடிபிடிக்க மாட்டான். இந்திய இறையாண்மைக்கும் கேடு வராது.

இல்லையென்றால் ராமானுஜரின் கட்டுக்கதையை ஆராய்ந்து இன்னும் உங்கள் கற்பனை வளத்தை காண்பித்து, சிவனின் பெயரால் சமணர்களை கழுவில் ஏற்றிய கொடியவர்களின் கதையை குடைந்து எடுங்க.  எவனும் நாக்கு மேல பல்லு போட்டு பேசி, கொடி பிடிக்க மாட்டான் போராட்டம் நடத்த மாட்டான். ஆட்சியாளரகளுக்கும் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இருக்காது.

கமல் நீங்கள் ஒரு சிறந்த கலைஞராக இருக்கலாம், மக்களிடமும் ஓர் அளவு ஆதரவு பெற்றவராக இருக்கலாம்,  ஆனால் அதை தவறாக பயன் படுத்தாதீர்கள். விஸ்வரூபம் பிரச்சினையினால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள், நடித்த நடிப்புகள், பேட்டிகள் முதலியவற்றினால் சராசரி ரசிகன்  உங்கள் மீது வைத்திருந்த  நம்பகத்தன்மையை இழந்து விட்டீர்கள்

இப்படிக்கு

 ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகன் 

 


Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

”தளிர் சுரேஷ்” said...

சரியாச் சொன்னீங்க! நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

/ஏதாவது ஒரு மொட்டை ..............ன் அறிவுரை வழங்கி இருக்கலாம்/

முழுவதையும் ரசித்தேன். இந்த மொட்டைக் குட்டை மிக ரசித்தேன்.

கும்மாச்சி said...

யோகன் வருகைக்கு நன்றி.

S. Arul Selva Perarasan said...

//உங்கள் சமூக அக்கறை, பகுத்தறிவு சித்தாந்தம் இத்யாதி இத்யாதி முதலியவற்றை நிரூபிக்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது இந்து மதம். அதை என்ன வேண்டுமென்றாலும் குத்தி கிழியுங்கள், சும்மா எவனாவது குரல் விட்டு விட்டு குப்புறப் படுத்துக்கொள்வான். உங்கள் படத்திற்கு பிரச்சினை வராது.//

சரியா சொன்னீங்க. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இப்பவாவது வருதே என்று தோன்றுகிறது.

Anonymous said...

Correct brother....

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Easwar Arumugam said...

I don't know what to say.This post could have been still more balanced.

Robert said...

என்ன விதமான நம்பகத்தன்மை அது நண்பா சராசரி ரசிகர்கள் இழந்தது ? .

ஒரு நல்ல கலைஞன் அவன் திறமை மீது நம்பிக்கை வைத்து எடுத்த படத்தை வைத்து அரசியல் செய்தது யார்?சுலபமாக தீர்க்க வேண்டிய விஷயத்தை ஊதி பெரிதாக்கி ஒரு மலிவான அரசியல் விளையாட்டு விளையாடிது யார் ?சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக சொன்ன பிறகும் தடைக்கு தடை வாங்கி நம்பிக்கையை இழந்தது யார் ?குப்புற விழுந்த பின் மீசையில் மண் ஒட்டாத குறையாய் தன்னிலை விளக்கும் தந்து நடுநிலையாளர்களின் நம்பிக்கையை இழந்தது யார்?

அந்த நம்பிக்கையை கமல் இழந்ததாக வேண்டுமானால் சொல்லலாம். அவர் நடித்த எத்தனை நல்ல படங்களை நாம் தொலைக்காட்சியில் ஏதாவது பண்டிகையின் சிறப்பு திரைப்படமாக நாம் பார்த்து கமலுக்கும் அந்த பட தயாரிப்பாளருக்கும் நல்லது செய்திருப்போம் . அவ்வளவுதான்...

கும்மாச்சி said...

ராபர்ட் நீங்கள் கேட்ட அத்துனை யார்? கேள்விகளுக்கும் விடை நாடு அறிந்ததே. மேலும் அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டும் நன்று அறிந்ததே.

ஆனால் கமலின் படம் சர்ச்சை இல்லாமல் சொன்ன தேதியில் வெளியே வருமா? என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறதா? தியேட்டரில் வருமுன்பே டி.டி.ஹெச்சில் வரும் என்று பணமும் கட்டிய ரசிகர்களின் நம்பிக்கை என்ன ஆனது?

மேலும் இந்துக்களின் சகிப்புத்தன்மையை கோடிக்காட்டவே மேற்சொன்ன பதிவு.

Jayadev Das said...

கமல் இந்து மதத்தினர் கேவலமாக எடுத்ததை யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள் அதையே ஒரு முஸ்லீம் எடுத்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? பதிவு நல்லாயிருக்கு, ஆனா எழுதியவர் கமல் ரசிகன் என்பதை நம்ப முடியவில்லை.

Indian said...

I think the film got too much hype. This is simply an US Propaganda film, nothing more nothing less.

ராஜ் said...

ரஜினி ரசிகனாக எனக்கு கமல் மீது முன்பை விட இப்பொழுது தான் கூடுதல் மரியாதை வந்து உள்ளது.
//முதலியவற்றினால் சராசரி ரசிகன் உங்கள் மீது வைத்திருந்த நம்பகத்தன்மையை இழந்து விட்டீர்கள் //
நீங்க மட்டும் இழந்துவிட்டேன்னு சொல்லுங்க.

Anonymous said...

anaivarum oru puram poga...oruvan mattum veru puram senral..ulgam unnai thirumbi paarkum enil nee seydhadhu puthi sali thanam alla....

thangaludaya intha post mugam than suzhika vaikirathu....

nanri....

YESRAMESH said...

வெறும் படம் பார்த்திருந்தா மூணு பொழுது போயிருக்கும். இப்ப எல்லாருக்கும் மூணு வாரமா செம ஜாலிதான்.

Sri said...

No big muslim organisation opposed really. It is all political game.

Unknown said...

watch abcd 2 movie online

Download ABCD 2 Movie torrent

Download Jupiter ascending torrent

Jurassic World cast and Crew

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.