Saturday 2 February 2013

கடல்-விமர்சனம்

கதை :ஜெயமோகன்
திரைக்கதை : ஜெயமோகன், மணிரத்னம்
வசனம், இயக்கம் : மணிரத்னம்
ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன்
எடிட்டிங் :ஸ்ரீகர் பிரசாத்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
நடிப்பு : கெளதம், துளசி நாயர், அரவிந்த் சாமி, அர்ஜுன், லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன்
பட்ஜெட் : ஐம்பது கோடி

மணிரத்னம் இயக்கம்,ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றவுடன் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம். நம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா?

அரவிந்த் சாமியும், அர்ஜுனும் ஒரே இடத்தில் மதபோதனைக்கு படிக்கிறார்கள்.ஒருத்தர் நேர் கோட்டில் பயணிப்பவர், அப்படி என்றால் மற்றொருவர் கோணலாக போகவேண்டும் இல்லை என்றால் கதை கிடையாது. கோணலை மேலிடத்தில் போட்டுக்கொடுக்க நேருக்கும் கோணலுக்கும் பகை, பழிவாங்கல் இத்தியாதி இத்தியாதி.

கெளதம் அனாதை சிறுவன், இலக்கில்லாமல் திரிந்து கொண்டிருந்தவனை அரவிந்த்சாமி நேர்வழிப் படுத்துகிறார். அருகில் உள்ள கிராமத்தில் உள்ள கன்னிகா ஸ்திரீ மடத்தில் நாயகி துளசி. மனநிலை பாதிக்கப்பட்டவராம். அதற்கான காரணம் பின்னால் தான் சொல்லப்படுகிறது. அது வரை படத்தில் அவர் நர்மலாகத்தான் இருக்கிறார். நாயகனும் நாயகியும் லவ்வுகிறார்கள்.

இனி அரவிந்த் சாமி அர்ஜுன் பகை என்ன ஆனது?, நாயகன் நாயகி என்ன ஆனார்கள்? என்பதை ஒரு முறை படத்தின் இசைக்காக  பார்த்து கொள்ளுங்கள்.

இந்தப் படத்தில் கெளதமின் சிறுவயதினராக வரும் சிறுவன் நன்றாக நடித்திருக்கிறான். சில பாடல்களின் படப்பிடிப்பு அபாராம். "அடியே" படத்தில் பார்க்க நன்றாக உள்ளது.

படத்தில் நல்ல திறைமையான கலைஞர்கள் இருந்தும் மணிரத்னம் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஒரு நல்ல திரைக்கதைக்கு இலக்கணம் கதை யார் கோணத்திலிருந்து சொல்லப்படுகிறது எனபது மிகமுக்கியம். அந்த வகையில் இது யாருடைய கதை என்பதில் பெரிய குழப்பம்.

மணிரத்னத்தின் சொதப்பல் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து தொடர்கிறது.

ஏ. ஆர். ரஹ்மானின்  வித்யாசமான துள்ளல் இசை, ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு இரண்டும் சரியாக பயன்படுத்த வில்லை.

மொத்தத்தில் கடல் ஆர்ப்பரிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு "கடல்" எரியாகி இருக்கிறது.

மணி சார் "BETTER LUCK NEXT TIME"






Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வளவு தானா...? போச்சா...?

UNMAIKAL said...

மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கடல் பொங்கி எழவில்லை போலிருக்கிறதே?! நன்றி

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

Anonymous said...

மணிரத்னத்தின் சொதப்பல் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து தொடர்கிறது. ரொம்ப கரெக்ட்

settaikkaran said...

முதலில் ‘கதை: ஜெயமோகன்’ என்று ஆரம்பித்திருப்பதில் ஏதாவது உள்குத்து இருக்கா? :-)

கும்மாச்சி said...

உள்குத்தா எல்லா குத்தும் இருக்குது, சேட்டை. வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

அலையே இல்லாத கடலா....?
இருந்தாலும் பார்த்து விடுகிறேன்.

பாரிவேந்தன் said...

கடல் கடவுளே காப்பாத்து

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.