Monday 18 February 2013

வேசியாகவே இருந்தாலும்...........சூர்யநெல்லி

டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு செய்திதால்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ முதலில் இடம் பிடிப்பது கற்பழிப்பு சம்பவங்களே.  கற்பழிப்பு என்ற சொல்லைக் கேட்டாலே "எடுரா வண்டியை" என்று எல்லா ஊடகங்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இப்பொழுது கேரளாவை கலக்கிகொண்டிருப்பது சுர்யநெல்லி கற்பழிப்பு வழக்கு.

பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். 1996ல் பதினாறு வயது சிறுமியை நாற்பது நாட்களுக்கு சூர்யநெல்லி என்ற இடத்தில் ஒரு விருந்தினர் மாளிகையில் அடைத்து வைத்து 42 பேர் கற்பழித்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலானோர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். இதில் ராஜ்யசபா துணை சபாநாயகர் பி.ஜே.குரியனும் அடக்கம்.அந்த பதினாறு வயது சிறுமியை முதலில் மிரட்டி தன் இச்சைக்கு பணியவைத்து பின்னர் எல்லோருக்கும் விருந்து வைத்தவர் ஒரு பஸ் கண்டக்டர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் உஷா என்ற பெண்மணி.

இந்த வழக்கு முதலில் கீழ் கோர்ட்டில் வந்த பிறகு 2000 ஆண்டு முப்பத்தைந்து பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில்அந்த கண்டக்டருக்கும் உஷா என்ற பெண்மணிக்கும் பதிமூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்தது, இதில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் தர்மராஜன் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் இந்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டதில் முப்பத்தைந்து பேரை நிரபராதிகள் என்றும் வக்கீல் தர்மராஜந்தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. கற்பழிக்கப்பட்ட பெண் கொடுத்த ஆதாரத்தின் பெயரில் பி.ஜே.குரியன் பெயர் சேர்க்கப்பட்டாலும் கேரளா உயர்நீதி மன்றத்தால் பி.ஜே.குரியன் உரிய சாட்சியங்கள் இல்லாததால் நிரபராதி என்று தீர்மானிக்கப்பட்டார்.

இப்பொழுது இந்த வழக்கு பதினாறு வருடங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில் குரியன் மந்திரியாக இருந்தார். என்னதான் அவர் பாதுகாப்பு பரிவாரங்களுடன் ஊடாடினாலும் சம்பவம் நடந்த அன்று அவர் பாதுகாப்பு காவலர்கள் கண்ணில்  மண்ணை தூவி எஸ் ஆகியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. தற்பொழுது அவர் ராஜ்ய சபாவின் துணை சபாநாயகராக உள்ளார். சமீபத்திய டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு வர்மா கமிட்டி பரிந்துரையின் பேரில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை பரிந்துரை மசோதா லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்த மசோதாவின் மேலான விவாதம் நடைபெறும் பொழுது கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரே அவை துணை தலைவாராக இருப்பது கேலிக்குரியது என்று குரல் எழுந்துள்ளது. 

இதை வைத்துதான் கேரளா அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதில்தான் குரியனுக்கு குடை பிடிக்கும் ஒரு காங்கிரஸ் எம்.பி. கற்பழிக்கப்பட்ட அந்த பதினாறு வயது சிறுமி ஒரு விலைமகள் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பலவந்தப் படுத்தி விலைமகளுடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று அவருக்கு தெரியாது போலும்.

பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
 


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

”தளிர் சுரேஷ்” said...

வெட்கக் கேடு! என்ன செய்வது இந்த ஜன்மங்கள் திருந்தாத ஜென்மங்கள்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

சின்னப்பயல் said...

பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள். ///

Unknown said...

உண்மைதான்! உங்கள் பதிவில் நியாயமிருக்கிறது.
விலை மகளே ஆனாலும் அவள் விருப்பமின்றி உடலுறவு கொள்வது பாலியில் பலாத்காரமே.

விலைமகள் என்ன விலைமகள், மனைவியே ஆயினும் அப்படித்தான்.

கும்மாச்சி said...

கரிகாலன் வருகைக்கு நன்றி.

sarathy said...

பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள். - sema vari Sir. Good luck.

kiruthika and manju said...

we hope that the girl must get the good judgment

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.