Wednesday 20 March 2013

தமிழினத்தலைவருக்கு ஒரு பகிரங்க கடிதம்

ஐயா,

நீங்க தமிழக மீனவர்களை சிங்கள காடையர்கள் வேட்டையாடி ஒவ்வொரு முறை ஒழிக்கும் பொழுதும் நம்ம மண்ணு மோகன்னு சிங்குக்கு கடிதம் கடிதமாக எழுதினீங்க. இப்போ இருக்கிற அம்மாவும் அதைதான் செய்துகிட்டு இருக்காங்க, அது வேற விஷயம். அதே போல எங்களைப் போன்ற பதிவர்களும் அப்பப்போ இந்த மாதிரி கடிதமெல்லாம் எழுதுவோம் ஆனால் உங்களுடைய கடிதத்திற்கும் எங்களது கடிதத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நீங்க எழுதுற கடிதமெல்லாம் நம்ம சிங்கு குண்டி தொடச்சு போட்டுடுவார். அப்புறம் இன்னாது கடிதமா அந்த மாதிரி எதுவுமே வரவில்லை என்பார். ஆனால் எங்கள் கடிதங்களை சக பதிவர்கள் படித்து பின்னூட்டம் ஒட்டலாம் போட்டு ஒரு மதிப்பு கொடுத்துருவோம். சரி விஷயத்திற்கு வருவோம்.

நேற்று நீங்க சடால்னு முடிவெடுத்து மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டீங்க. ஆனால் நீங்க எப்படியும்  இந்த முடிவை எடுப்பீங்க என்று அரசியலே தெரியாத எங்க வீட்டு வேலைக்காரியம்மா கூட சொல்லிட்டாங்க.

நீங்க வெளியே வர ஆயிரம் காரணம் இருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் இலங்கை பிரச்சினைதான் என்பதை நம்ப தமிழ்நாட்டில் எந்த தற்குறியும் தயாராக இல்லை.

நீங்க என்னதான் டெசோ, தமிழ் ஈழம், தன்மானம், மயிரு மட்டு  என்று எதை சொன்னாலும் நீங்க காலையில் இட்லியும் மீன்குழம்பும் அடித்து விட்டு மதியம் மட்டன் பிரியாணி கூப்பிட அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பொழுதே உங்களுடைய நாடகத்தை மக்கள் யூகிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதில் யாருக்கு ஆதாயம் என்றால் "நோவாமல் நோன்பு கும்பிட்ட" அம்மாவிற்குத்தான். இன்றைக்கு நீங்கள் பதவியை துறந்து வெளியே வந்தாலும் இதில் ஏதோ 2ஜி உள்குத்து இருக்கிறது என்று மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்து விட்டனர். போதாத குறைக்கு ரத்தத்தின் ரத்தங்கள் வேறு இன்று நாடு பூரா நீங்கள் சரித்திர புகழ்பெற்ற உண்ணாவிரதம்  இருந்த புகைப்படத்தையும் உங்களது அருமை மகள் ராஜபக்ஷே முன்பு எல்லா பல்லையும் காட்டி அவர் போட்ட ரொட்டித்துண்டுகளை பொறுக்கியதை டிஜிடல் பேனர் போட்டு உங்களது அரை வேட்டியை உறுவி "மந்திரியை" (இந்த மந்திரிக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள பரதேசி பாருங்கள்) வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் என்னதான் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று கணித்திருந்தாலும் ஆதாயம் அம்மாவிற்கே என்பதை நாடு அறியும்.

என் போன்ற சராசரி தமிழ் மகனின் கவலை எல்லாம் அண்ணா வளர்த்த ஒரு இயக்கம் உங்களிடம் சிக்கி சின்னா பின்னம்மாகிவிட்டதே என்ற கவலைதான்.

டிஸ்கி:  அண்ணா சொன்ன கடமை கன்னியம் கட்டுப்பாடு அவரது  கல்லறையிலே புதைக்கப்பட்டது வேதனை.

இதற்கு யார் காரணம் என்று நான் சொல்லதேவையில்லை. கண்ணதாசன் எப்பொழுதோ எழுதிவிட்டார்.

இப்படிக்கு

லூசு தமிழன்



Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Prem S said...

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்கிறது .இருப்பினும்
சில வார்த்தைகள் தவிர்த்திருக்கலாம்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பிரேம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கும்மாச்சி said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி தனபாலன்.

Unknown said...

தமிழினத்தலைவர் என்று அவரை அழைப்பதை தவிர்க்கவும். நன்றி

கும்மாச்சி said...

குருநாதன் இனி அவரை தமிழ் ஈனத்தலைவர் என்றே அழைப்போம்.

பூ விழி said...

அட !!

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர் வணக்கம்.
தங்களது பதிவில் தாங்கள் எழுதியதை விட அதிகமாக எழுத விசயம் உள்ளது.ஆனால் பயமாகவும் இருக்கிறது.தாங்கள் மயிலறகால் கருணாநிதியை வருடிக்கொடுத்து இருக்கீர்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Unknown said...

உங்களை மாதிரி கேடுகெட்டு எழுத எங்கள் மனது இடம் தரவில்லை ஆட்சியில் இருந்தால் துரோகி வெளியில் வந்தால் நாடகம் என்றால் என்னதான் செய்வது வெளியிலிருந்து கிணற்று தவளைகளாய் கத்திக்கொண்டு தன் அரசியல் பிழைப்பை நடத்தி கொண்டிருக்கும் சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் வாலை பிடித்து அரைவேக்காட்டு பதிவு போடும் உங்களுக்கு அறிவு என்பது இருப்பது உண்மை என்றால் அவர் வெளியில் வந்ததை வரவேற்க வேண்டாம் என்றலும் இதுபோல் கொச்சை படுத்தாமல் அணைத்து தமிழ் மக்களும் ஓன்று சேர்ந்து போராடும் இந்த நேரத்தில் எட்டப்பன் போன்று பதிவு போட்டதால் நீ என்ன லாபம் அடைந்தாய்?. அனைத்து மாணவர்களும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்திகொண்டிருப்பது எதற்காக தெரியுமா ? இந்த நேரத்தில் நம்மை நாமே கிண்டலடித்துக்கொண்டும் காலை வாரிவிட்டுகொண்டும் இருந்தால் என்ன நடக்கும் தமிழ் நாட்டிலே தமிழர்கள் பிரிந்து இருக்கிறார்கள் இந்த நேரத்தில் "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழி ஏற்ப இங்கே இருக்கிற கூத்தாடிகள் நமை பிரித்து அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து நம்மை ஏமாற்றிவிடுவார்கள். விடுதலை புலிகள் அழிவிற்கு ஒரு எட்டப்பன் கருணா என்கிற கருணாகரன் தான் காரணம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதலால் தயவு செய்து இனி உங்கள் பதிவுகள் ஈழத்தை வென்றெடுக்க தேவையான பதிவுகளாக போடுங்கள் அதுதான் நமக்கும் நல்லது தமிழ் ஈழத்துக்கும் நல்லது

கும்மாச்சி said...

அன்பு பிரியா உங்களது முழுதாக வெந்த பின்னூட்டம் நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களது தமிழீனத்தலைவர் ஈழத்தமிழர்கள் கொத்துகொத்தாக மடிந்த பொழுது வராத ரோஷம் இப்பொழுது காலம் கேட்டபின்பே வந்திருக்கிறது. ஆட்சிக்காலம் முடியும் நேரத்தில் அவர் வெளியே வருவார் எனபது உங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம், மற்றவர்கள் ஓரளவுக்கு யூகித்து வைத்திருந்ததே.

மொத்தத்தில் உங்களைபோன்ற முழுவேக்காடு அரசியல்வாதியோ, பதிவரோ தெரியாது, ஆனால் உங்களால் கூத்தாடிகளை மாற்றமுடிந்தால் தமிழனுக்கு நல்ல காலமே.

ஆனால் இப்பொழுதிருக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினையை தங்களது சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் எனபது எங்களைப் போன்ற அரைவேக்காடுகளின் கருத்து.





Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.