Tuesday 19 March 2013

பரதேசி-பாலாவின் தடுமாற்றம்

தயாரிப்பாளர்: பாலா
எழுத்து: நாஞ்சில் நாடன்
திரைக்கதை, இயக்கம்: பாலா
மூலக்கதை: ரெட் டீ (பால் ஹாரிஸ் டேனியல்)
நடிப்பு: அதர்வா,  வேதிகா, தன்சிகா
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செழியன்
எடிட்டிங்: கிஷோர்
பட்ஜெட்: ஒன்பதரை கோடி

வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம்  "பரதேசி". கடந்த நான்கு நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையால் இன்றுதான் காணமுடிந்தது.

இந்த விமர்சனம் ஒரு பாமர ரசிகனால் எழுதப்படுகிறது. ஆதாலால் மாண்டேஜ், கிளிஷே, சர்ரியலிசம் போன்ற வார்த்தைகள் இருக்காது. வெறும் பாமர ரசிகனாகவே இந்தப் படத்தை பார்த்தேன். ஏற்கனவே சேது, நான்கடவுள் பார்த்த தாக்கத்தினால் அதிக எதிர் பார்ப்பு இருந்தது.

சாலூர் கிராமம் பஞ்சத்தில் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கிராமத்தில் நுழையும் கேமரா லோ ஆங்கிளில் நகரும் பொழுது நம்மை உண்மையான கிராமத்தின் சந்து பொந்துகளில் நடக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமத்து கல்யாணம் தண்டோரா போடுகிறார் "ஒட்டு பொறுக்கி "அதர்வா". கல்யாணத்தில் நெல் சோறு ஊராரின் எதிர்பார்ப்பு. வெகுநாட்களுக்கு பிறகு நல்ல சாப்பாடு. ஆனால் பெரியப்பா என்று ஒட்டு பொறுக்கியால் அழைக்கப்படுகிற பெரியவர் மண்டையைப் போடுகிறார். அவரது பிணத்தை மறைத்து வைத்து கல்யாணமும் விருந்தும் நடந்தேறுகிறது. அதற்குப்பிறகு பெரியப்பா பற்றிய பேச்சில்லை. கதைக்கு அது அவசியமும் இல்லை. அதர்வாவை காதலிக்கும் லூசுப் பெண்ணாக வேதிகா. பாலாவின் கேரக்டரைசேஷன் எப்பொழுதுமே நன்றாக இருக்கும். வேதிகா விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். அதர்வா வேதிகா காதலில் ஒரு அழுத்தமும் இல்லை.

பஞ்சத்தில் அடிப்பட்டிருக்கும் கிராமத்து ஆட்களை ஆசைக்காட்டி தேயிலை தோட்டத்திற்கு அழைத்து செல்லும் கங்காணி அங்கே அவர்களை அடிமைப்படுத்துகிறார். அங்கே வரும் மருத்துவர் (இல்லை கம்பௌண்டர்), பின்னால் வரும் மருத்துவர், என்று வரும் கேரக்டர்கள் பாலாவின் கைவண்ணம். தேயிலைத்தோட்டத்தில்  வேலையில் சேரும் அதர்வாவின் ரூம் மேட் தன்சிகா. கணவன் தப்பி ஓடிவிட்டான், குழந்தையுடன் அங்கு காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறாள். வருடம் ஒருமுறை சம்பள நாட்களில் காசை கண்ணில் காட்டி கழித்துக்கொண்டு அவர்களை மேலும் பல வருடம் அடிமைப்படுத்த ஒரு வெள்ளைக்கார அடிமை கூட்டம். இந்த அடிமை வாழ்விலிருந்து தப்பி ஓட அதர்வா முயற்சிக்க கால் நரம்பு அறுக்கப்பட்டு மேலும் அடிமையாக்கப்படுகிறார். தேயிலை தோட்ட கூலிகளை விஷ நோய் தாக்க கொத்து கொத்தாக இறக்கின்றனர். பிறகு வெள்ளைக்கார முதலாளிகள் கூடி பேசி ஒரு மருத்துவர்(நிஜ மருத்துவர்) வரவைக்கின்றனர். அவர் மருத்துவத்துடன் மதமாற்றத்தையும் செய்கிறார். இனி கதாநாயகன் தப்பித்தார?  அவரால் கர்ப்பமாக்கப்பட்ட வேதிகா என்ன ஆனார்? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் பாராட்டப்படவேண்டியது

அதர்வாவின் இயல்பான நடிப்பு. நிச்சயமாக இது அவருக்கு சிறந்த படம்.
தன்சிகாவின் முகபாவங்கள், குறிப்பாக ஒட்டுபொருக்கி கூலி வாங்க செல்லும் பொழுது அவர் காட்டும் முகபாவங்கள்.
நாஞ்சில் நாடனின் வசனங்கள்: எதுல கஷ்டம் இல்லை "மூல வியாதிக்காரனுக்கு பேள்றது கூட கஷ்டம்" இவனுக்கு தாயத்து இடுப்புல கட்டக்கூடாது புடுக்குலதான் கட்டனும்.
பாலாவின் கதை சொல்லும் நேர்த்தி.
படத்தில் வரும்  உபரி கதாபாத்திரங்கள் கூனி கிழவி உற்பட நடிக்கும் அபாரமான யதார்த்த நடிப்பு.
படத்தின் கலை இயக்குனர், சாலூர் கிராமத்தை வடிவமைத்தற்கு.

படத்தில் உறுத்தும் விஷயங்கள்

முதலில் இசை:இந்த மாதிரி படங்களுக்கு சிறந்தவர் இளையராஜாவே. பிதாமகனில்  கஞ்சா தோட்டத்தில் கேமரா நுழையும் முன்பே வரும் இசையும், சேதுவில் கதாநாயகி விக்ரமை பார்த்துவிட்டு திரும்பு முன்பு வரும் இசையும்  சிறந்த உதாரணம்.

ஜி. வீ. பிரகாஷ்குமார் க்ளைமாக்சில் தேவையில்லாத ஒப்பாரியை வைத்து காட்சியின் வீர்யத்தை குறைத்துவிட்டார்.

வேதிகா கேரக்டரை சொதப்பியது.

பாலா ஏன்உங்களுக்கு இந்த தடுமாற்றம். நீங்களும் வியாபார திரைப்படத்துக்கும், நல்ல திரைப்படத்துக்கும்  உள்ள  இடைவெளியில் சிக்கி விட்டீர்களோ என்ற கவலை என் போன்ற ரசிகர்களிடம் உள்ளது.

இருந்தாலும் பரதேசி ஒரு நல்ல படமே.
 

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

உலக சினிமா ரசிகன் said...

ஒரு ரசிகனாக அமர்க்களமாக எழுதி உள்ளீர்கள்.
நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அருணா செல்வம் said...

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்பதை உங்களின் விமர்சனம் உணர்த்துகிறது.
அடுத்த வாரம் பார்த்து விடுகிறேன் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Anonymous said...

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

கும்மாச்சி said...

இக்பால் செல்வன் படத்தை கட்டாயம் பாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கன கச்சிதமாக எல்லாவற்றையும் சொல்லவும் முடியாது... செய்யவும் முடியாது...

ராஜா இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

இனி மேலும் அவரை பலர் சிக்க வைக்கக்கூடும்...

நல்லதொரு விமர்சனத்திற்கு நன்றி...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

mage said...

pithamagan, naan kadavul matrum avan-ivan il erundha comedy (konjam) kooda edhil ellai. enna aachu baala sir ungalukku. rasigargalai sirikka vaika theriyalaiyeee.

Philosophy Prabhakaran said...

பெரியப்பாவின் மரணத்தை அம்போ என்று விட்டுவிட்டாரேன்னு எனக்கும் தோன்றியது... அது கதைக்கு தேவையில்லை என்றாலும் ஒரு கிராமத்து மரண கொண்டாட்டத்தை திரையில் காட்டியிருக்கலாம்... தேவையில்லை என்று பார்த்தால் பெரியப்பா கதாபாத்திரமே தேவையில்லை தான்...

அதேபோல தன்ஷிகாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றார் அதர்வா... அந்த காட்சியை அம்போன்னு விட்டுட்டு ஆன்மிக கங்காணியாக மாறிவிடுகிறார் மருத்துவர்...

ஆன்மிக கங்காணி வேடத்தை க்ளைமாக்ஸ் அருகில் வைக்காமல் சாலூர் கிராமத்தில் வைத்து நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம்...

கும்மாச்சி said...

பிரபா உங்கள் கருத்திற்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இன்னும் பார்க்கவிலலை! படம் பார்க்கத்தூண்டுகிறது விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

பூ விழி said...

ஆம் இந்த கதையில் பெரிய விஷயத்தை எடுத்து கையாள்வதில் கொஞ்சம் பிசக்கிதான் விடார் பாலா வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் கிடைப்பின் என் தளத்திற்கு வாருங்கள்

Sri said...

Paradesi Bala azha vichutaye pa un thiramai koodiducha en mana valimai kurainchiducha
theriyalaye

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.