Tuesday 5 March 2013

ஹரிதாஸ்-சினிமா விமர்சனம்

பெரியளவு ஒன்றும் மார்க்கெட்டிங் இல்லாமல், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் ஹரிதாஸ். எல்லா நாளேடுகளும் "கட்டாயம் பார்க்கவேண்டிய படம்" என்று ஒருமனதாக எழுதியிருந்ததால் இன்று எக்ஸ்பிரஸ் அவென்யுவில் படத்தை பார்த்தேன்.

ஒரு ரவுடி கும்பலை ஒழித்துக்கட்ட ஸ்பெஷல் அசைன்மென்டில் இருக்கும் போலிஸ் ஆபிசர் சிவதாஸ் தன்னுடைய ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை (ஹரிதாஸ்), மனைவி பிரசவத்தில் இறந்து போக தன்னுடைய தாயிடம் விட்டுவிட்டு தன் கடமையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தாய் இறந்து போக மகனின் வளர்ப்பு கேள்விக்குறியாகவே தானே அவனை நகரத்தில் கொண்டு வந்து வளர்க்கிறார். மிகவும் பிரயத்தனப்பட்டு பையனை ஒரு அரசு பள்ளியில் சேர்க்கிறார். ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை அரவணைத்து சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை அமுதவல்லி வகுப்பில் பையன் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். ஆடிசம் ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடே  அவர்களது உலகம் வேறே என்று டாக்டர் அறிவுறுத்த பையனிடம் உள்ள வினோத திறைமைய எதேச்சையாக அறிந்து கொள்ள அவனுக்கு தந்தை குருவாக இருந்து பயிற்சி அளிக்கிறார்.

பையனின் திறமை வெளிப்பட்டதா? சிவதாஸ் ரவுடி கும்பலை என்ன செய்தார்?  இனி மற்றவையை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்.

சிவதாசாக கிஷோரும், அமுதவல்லி டீச்சராக ஸ்னேஹாவும் நன்றாக செய்திருக்கின்றனர். கிஷோர் ஏறக்குறைய அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்னேஹா வழக்கம்போல் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.  ஆடிசம் குறைப்பாடுள்ள பையனாக வரும் பிரிதிவி ராஜ் தாஸ் நடிப்பு மெச்சப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி பரோட்டா சூரி, மற்றும் கிஷோரின் நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கின்றனர்.

படத்தில் குறைகளும் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுட்டிக்காட்டி இது போன்ற முயற்சிகளை விமர்சிப்பதில் கடமையுணர்வு குறுக்கிடுகிறது.

படத்தின் பின்னணி இசையில் விஜய் ஆண்டனி விளையாடியிருக்கிறார். கதை வசனம் இயக்கம் ஜி.ஏன்.ஆர். குமாரவேலன். ஒளிப்பதிவு ரத்தினவேல்.

உலகத்தில் பிறக்கும் எண்பத்தெட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஆடிசம் குறைபாடோடு பிறக்கின்றது. அவர்களது திறமை அறிந்து நன்றாக வளர்க்கப்பட்டால் அவர்களும் பெரிய மனிதர்களாகலாம் என்ற மேசெஜோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், படம் பார்ப்பவர்களுக்கு ஆடிசம் பற்றிய மற்றுமொரு பரிமாணம் தெரிய வரும், இதுவே இயக்குனருக்கு பெரிய வெற்றி.. 

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆட்டிசம் குழந்தைகளை உருவாக்குவதே பெற்றோர்கள் தான் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்...

semmalai akash said...

பாடல்கள் எப்படி இருக்கு அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே நண்பா, எனக்கு படத்தில் இருக்கும் திரைக்கதையும் பாடல்களும் சம பங்கு இருந்தால்தான் படம் நல்ல படமாக தெரியும். ஹா ஹா ஹா ஹா !!

அருமையா எழுதிருக்கிங்க நண்பா. வாழ்த்துகள்.

Philosophy Prabhakaran said...

ரொம்ப லேட்டு கும்ஸ்... இன்னும் ரெண்டு நாள் கழிச்சு படம் தியேட்டரில் ஓடினாலே அபூர்வம் தான்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஆகாஷ் படத்தில் பாடல்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

கும்மாச்சி said...

பிராபகரன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.