Saturday 2 March 2013

கலக்கல் காக்டெயில்-104

அலங்கார நிதியறிக்கை 

நமது நிதியமைச்சர் "இந்த" நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய எதற்கு அவ்வளவு பெரிய்யகோப்பை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்தார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. அவர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே அம்மா என்ன சொல்வார்கள், ஐயா என்ன சொல்லுவார், சுஷ்மா ஸ்வராஜ் என்ன பேசுவார், ராஜா என்ன கதைப்பார் என்பதெல்லாம் ஒருவாறாக ஊகிக்க முடிந்தது. ரெண்டு விஷயத்தில் வரியைக் கூட்டினால் யாவரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஒன்று சிகரெட் மற்றொன்று மேல்தட்டு மக்கள் செல்லும் ஓட்டல்களின் சேவை வரி. அதைதான் நமது ராபின்ஹூட் நிதியமைச்சர் செய்திருக்கிறார். இன்னும்  சில ஆடம்பரப் பொருட்களுக்கு வரியைக் கூட்டியிருக்கலாம். மேலும் இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் நமது மக்கட்தொகையில் வெறும் சொற்பமே, கிட்டத்தட்ட எல்லோரையும் வருமான வரி செலுத்த வைத்தால் நாட்டை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம், அதற்கு முன் ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமில்லை அதனால்தான் இந்த நாட்டில் இருப்பவன் கொழிக்கிறான் இல்லாதவன் முழிக்கிறான்.

நல்ல வரவேற்பு 

விடுமுறையில் நாடு திரும்பியவுடன் வீட்டில் முதலில் டிவியும்  ப்ராட்பேண்டும் வேலை செய்கிறதா என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. என்னதான் ஏர்டெல்லுடன் மல்லு கட்டி சரிசெய்துவிட்டு போனாலும் ஒவ்வொரு முறை வரும்போதும் இரண்டும் "ஞே" என்று முழிக்கும். இந்த முறை சற்று அதிகமாகவே பொறுமையை சோதித்து விட்டார்கள். ப்ராட்பேண்ட்  வர நான்கு நாட்களாகிவிட்டது. ஏர்டெல் சர்வீஸ் நம்பரை அழைத்து யாருடனாவது நமது பிரச்சினை என்ன என்று சொல்வதற்குள் டாவு தீர்ந்துவிடுகிறது. நாம் என்னதான் கடிந்து கொண்டாலும் சளைக்காமல் "சார் இன்றைக்குள்ள உங்க பிரச்சினை தீர்ந்துவிடும் சரிங்களா! என்று கொஞ்சுகிறார்கள்.

எல்லோரும் கனெக்ஷன் வாங்கும் வரை துடியாக இருக்கிறார்கள். அப்புறம் வெண்ணைதான்.

அம்மா முன்னேறிட்டாங்க

நேற்று அடையார்  எல்.பி ரோட்டில் ஒரு ஹார்ட்வேர் கடையை தேடிப்போய் திருவான்மியூர் வரை சென்று விட்டேன். பிறகு அங்கிருந்து யூ டர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்று திரும்பினால் ட்ராபிக்கை நிறுத்திவிட்டார்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து காவலரிடம் விசாரித்ததில் அம்மா வராக சார் என்றார். நமக்கே உரிய குசும்பில் என்ன சார் சிருதாவூர்ல கிளம்பிட்டாகளா என்று கேட்டவுடன் இல்லை சார் மருந்தீச்வர் கோயிலாண்ட வந்துட்டாங்க சார் என்றார் முகத்தில் சிரிப்புடன்.  இப்பொழுதெல்லாம் ஒரு மணிநேரம் நிறுத்துவது இல்லை போல் இருக்கிறது. அவர் சொல்லி இரண்டாவது நிமிடம் அம்மா காலாட்படை, பூனை படை, முன்னே செல்ல எங்களை நோக்கி ஒரு கும்பிடு போட்டு கடந்து சென்றார்கள்.

நல்ல முன்னேறிட்டாக......

ரசித்த கவிதை 

 இவளோ,இவனோ
இதுவோ என்று
ஒவ்வொரு புள்ளியிலும்
நின்று தொடர்கிறது
நல்ல நட்புக்கான
தேடல்.......

------------------------ராதா ரங்கராஜ் 


ஜொள்ளு

03/03/2013Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏர்டெல் சர்வீஸ் போல் எதுவும் கிடையாது... மோசமாக...

அருணா செல்வம் said...

அம்மா முன்னேறிட்டாங்க....
இதுவே தொடர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...!!

“பதவி வரும் போது...
பணிவு வரவேண்டும்...
துணிவு வரவேண்டும்...”

பதவி பறிபோய் விடும் என்று கூட
பணிவது போலும் துணிந்து நடிக்கத் தெரிந்தவர்கள்.
நிச்சயம் முன்னேறுவார்கள்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

sarathy said...


நம்ம முழி எப்பவும் பிதுங்கி இருக்குதான்! அதுக்குதானே நம்ம நிதி அமைச்சர்கள்...

உங்களுக்கு கிடைத்த வரவேற்பில் மாறுதல் இல்லை ..... நல்ல செய்திதான்!

அம்மா முன்னேற்றம் ...... திக்கிமுக்கி விட்டேன்!!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.