Thursday 11 September 2014

பாரதியை நினைவுகொள்வோம்

செப்டம்பர் 11ம் தேதி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது புரட்சி கவி பாரதியார்தான்.

எண்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் சுப்ரமணிய பாரதியின் தமிழ் மூச்சு நின்றது, இன்று அவரது நினைவாக இரண்டு கவிதைகளை நினைவு கொள்வோம்.

"பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே"
பாட்டைத் திறப்பது மதியாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே

ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லலே

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.


சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதனையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெல்லாம் அழிந்துபோகும், திரும்பிவாரா.



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

பாரதியாருக்கான பதிவு அருமை நண்பரே...

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

அருமையான பாடல்களுடன் நிறைவுக்கூர்ந்த பதிவு..

அருமை கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

பாட்டுப் புலவன் பாரதி நினைவு
சிறந்த இலக்கியப் பகிர்வு
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

ந்ல்லதொரு நினைவு கூறல்...அதுவும் அவரது பாடல்கள் சொல்லி....

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

பாரதியை நினைவில் கொள்வோம்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.