Monday 15 September 2014

கலக்கல் காக்டெயில்-156

அம்மா கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ

பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. பதினெட்டு வருடங்களாக வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுக்கடிக்கப்பட்டு ஒரு வழியாக எல்லோருடைய வாதங்களும் முடிந்து நீதிபதி குன்ஹா தீர்ப்பை மிக்க பாதுகாப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று ஆளுங்கட்சி வட்டாரம் கூட்டம் மேல் கூட்டம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார்கள். தீர்ப்பிற்காக அம்மா அல்லக்கைகள் பெங்களுருவில் டேரா அடித்திருக்கிறார்கள்.

என்ன நடக்கும்? மிஸ்டர்  விசுவாசம்  தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த தீர்ப்பு நமது அரசியல் கூத்துக்களுக்கும், நீதியின் நம்பகத்தன்மைக்கும் வைத்திருக்கும் பரீட்சை.

அம்மா நிரபராதி என்றால் என்ன அறிக்கைகள் வரும், அல்லது குற்றவாளி என்றால் எங்கு பற்றி எறியும், எதற்கும் தலீவர் இந்தமுறை லுங்கிக்கு உள்ளே அண்ட்ராயர் போட்டுக்கொண்டு தயாராக இருப்பது அவருக்கும் நமக்கும் நல்லது...............மிடில.......ப்பா.

குப்புறப் படுத்த நித்தி

கடந்த இரண்டு வாரங்களாக பத்திரிகைக்காரர்களுக்கு பெங்களுருவில் ஒரே கொண்டாட்டம்தான். ஒரு பக்கம் சொத்துகுவிப்பு வழக்கு, மறுபக்கம் நித்திக்கு ஆண்மை பரிசோதனை. மெத்தப்படித்த ஆர்த்தி அறுபத்திமூன்று முறை கற்பழித்ததாக குற்றம் சாட்டியதால் நித்திக்கு மேற்படி பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நித்தி முதலில் முரண்டு பிடித்து குப்புறப்படுத்துக் கொண்டாலும் பிற்பாடு சோதனைகளுக்கு ஈடு கொடுத்திருக்கிறார். ஒன்பது மணிநேர பரிசோதனையாம், நின்று விளையாடி இருக்கிறார் போல.

இந்த சோதனை நடந்த விதத்தையும், அதன் முடிவுகளையும் வைத்து ஊடகங்கள் கல்லா கட்டிகொண்டிருக்கின்றன.

ஆக மொத்தம் நமக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை.

ரசித்த கவிதை

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...



அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்
தெள்ளத் தெளிவாய்ப் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்
கனவில் கூட அமைதி கொள்வோம் !    

நன்றி: அம்பாளடியாள்.

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Unknown said...

நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://vivadhakalai.blogspot.com/

அருணா செல்வம் said...

தீர்ப்புகள் திருடப்படும்..... சே சே....தீர்ப்புகள் திருத்தப்படலாம்....

என்னவோ போங்கள்.... எல்லாமே குழப்பம் தான்.

தோழி அம்பாளடியாளின் பாடல் அருமை கும்மாச்சி அண்ணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.