Sunday 29 April 2018

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

இந்த முறை தமிழ் நாடு விஜயம் மூன்று நாட்கள் மட்டுமே. ஆறு மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வருவதால் டேமஜரிடம் பத்து நாட்கள் விடுமுறை வேணும், ஊரில் வேலை இருக்கிறது என்றால், என்னது பத்து நாளா போயா போயி ஆணி பிடுங்கு என்று சிடுசிடுக்க, இல்லை ஐயா எல்லா ஆணியும் பிடுங்கிட்டேன் என்றதற்கு, பரவாயில்லை புதுசா ஆணிய அடிச்சு பிடுங்கு என்று கடுப்படித்துவிட்டார்.

பின்பு ஒரு வழியாக வார விடுப்புடன் ஒரு நாள் என்று ஜல்லியடித்து மூன்று நாட்களுக்கு சென்னை வந்து பத்து நாட்கள் வேலையை முடித்துவிடலாம் என்றால் எல்லாம் வேலையையும் முடிக்க முடியவில்லை. ஆனால் எந்த வேலைக்காக முக்கியமாக வந்தேனோ அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. அதில் பிரச்சினை என்ன வென்றால் சென்னை வந்தவுடன் திருக்கோயிலூர் பயணம். விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை எல்லாம் வெயில் தகிக்கிறது. நடு இரவில் முப்பத்திரண்டு டிகரியா? அப்பா முடியல. பாலைவன நாட்டிலேயே பகலில் இருபத்தைந்து டிக்ரீ தான் வெட்பம்.

அது சரி இருக்கிற மரங்கள் எல்லாவற்றையும் வெட்டியாகிவிட்டது. போகிற வழியில் பாலாறு, பெண்ணையாறு எல்லாம் வறண்டு கிடக்கிறதை பார்க்கும் பொழுது நாம் இயற்கையை எப்படி சிதைத்துகொண்டிருக்கிறோம் என்பது உறுத்துகிறது.

சமீபத்தில் திருச்சியின் உய்யகொண்டான் வாய்க்கால் மற்றுமொரு கூவமாக மாறிக்கொண்டிருப்பதை இணையத்தில் படிக்க நேர்ந்தது. மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.

பாட்டில்தான் " என்ன வளம் இந்த திருநாட்டில்" என்று பாடிக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த தலைமுறைக்கு நாம் துரோகம் செய்துகொண்டிருக்கிறோம். இது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

இது அடுத்த சந்ததியை பாதிக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

சிந்திக்க வேண்டிய விஷயம் - உண்மை.

ராஜி said...

நாட்டில் எல்லா வளமும் இருக்கு. ஆனா, மனுஷங்க மனசுலதான் இடமில்ல

Thulasidharan V Thillaiakathu said...

கடைசியில் சொன்னீங்க பாருங்க அடுத்த தலைமுறைக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அதுதான்....பஞ்ச்...

துளசிதரன், கீதா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.