Sunday 10 June 2018

காலா-----என் பார்வையில்

ந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் "காலா" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் "குபீர்" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் "அனானிகள்" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று  துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும்.

இனி காலா..........

முதலில் பா. ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு, கதைக்களம் ஒரே வரி "எனது நிலம் எனது உரிமை" என்பதை  வைத்து அதை நேர்த்தியாக கதை சொன்ன விதம். மேலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை அவரது பாட்ஷா, படையப்பா சிறையிலிருந்து மீட்டு கபாலியிலும், காலாவிலும் அவரது "முள்ளும் மலரும்" "ஆறிலிருந்து அறுபதுவரை" போன்ற பலபரிமான நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு மற்றுமொரு ஒரு சபாஷ். திரைக்கதைக்கு உதவியாக "ஆதவன் தீட்சண்யா", வசனம் மெருகேற்றலில் "மகிழ்நன்". நல்ல கூட்டணி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கருத்துக்களையும், தற்கால அரசியல் அவலங்களையும்  பிரச்சார நெடி இல்லாமல் உரைப்பதில்  ரஞ்சித் சாதாரண கதாசிரியர்களிடமிருந்து விலகி நிற்கிறார்.

காலாவில் ரஜினிக்கு வித்தியாசமான அறிமுகம் . எஸ்.பி.பி குரலுடன் "ஒருவன் ஒருவன் முதலாளி, ஆட்டோக்காரன்" என்று வழக்கமான என்ட்ரி தவிர்த்து "காலா ரெண்டு ரன் தான் வேணும், நீ சும்மா தட்டிட்டு வா, ரெண்டு ரன் ஓடிடலாம்" என்ற சிறுவனின் அடவைசை கேட்டு கேமரா பார்த்து "இப்ப பாரு எங்க ஆட்டத்த" என்று சவால் விட்டு ஏதோ என்று சிக்ஸ் அடிக்கப்போகிறார் என்று நினைத்தால் கிளீன் போல்ட் ஆகிறார். அதற்குப் பிறகு அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பில்  சிக்ஸ் அடிக்கிறார். ஜீப்பில் உட்கார்ந்து வரும் தோரணையிலேயே "எமராஜ்" காலனை கண்முன் நிறுத்துகிறார். ஆமா குமாரு........யாரு இவரு.........என்று மந்திரியை நக்கலடிக்கும் விண்டேஜ் ரஜினி, நானா படேகரிடம் "நான் இன்னும் உன்ன கெளம்பச் சொல்லலையே" என்று கெத்து காட்டுவதும், என்ன "உன்னால கொல்ல முடியாது வேணுமென்றால் முதுகுல குத்திக்கோ" என்று நக்கலடிப்பதும் ரஜினி அட் ஹிஸ் பெஸ்ட். ஸ்டைலு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று எந்தப் பிச்சிலும் செஞ்சுரி அடிக்கும் அதிரடி நாயகன். கடந்த பத்து வருஷமாகவே இவர் திரைப்பட வாழ்க்கை முடிந்தது என்று கூறிக்கொண்டு குப்பை கொட்டுபவர்களுக்கு வழக்கம் போல அவர்கள் வயிற்றில் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

திலீப் சுப்பராயனின் அந்த மழை சண்டை காட்சி சூப்பர்.

சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சுமார் ரகம்தான், ஆனால் பி.ஜி.எம் வழக்கம் போல மிரட்டல்.

படத்தின் ஆர்ட் டைரெக்டர் டி. ராமலிங்கத்திற்கு ஒரு தேசிய விருது பார்சல், தாராவியை அவளவு தத்ரூபம்மாக அமைத்ததற்கு, அதுவும் அந்த டாப் ஆங்கிளில் தாராவி அமர்க்களம்.


வழக்கமான ரஜினி படமாக இருந்தால், அவரைத்தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவ முக்கியத்துவம் இருக்காது, ஒரு சில படங்களை தவிர. ஆனால் காலாவில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். ரஜினியின் மனைவி, முன்னாள் காதலி, மற்றும் பெண் போராளி என்ற மூன்றும் வலிமை மிக்கவை.

ஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பு, எனக்கும் நெல்லைக்கு டிக்கட் போடுங்க "பெருமாள பார்த்து பேசிட்டு வரணும்" என்று சினுங்குவதிலும் சரி, கணவனை எதிர்த்துக் கொண்டு வெளியே செல்லும் மகனிடம் அடே ராஜா நீ எங்கபோவ என்று அவருக்கு ஆதரவாக பேசியே சரி போடா என்பதில் காலா
சேட்டும் நானே என்று உணர்த்துவதாகட்டும் அருமை.

காலாவின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யூமா குரேஷி காதல் காட்சிகளில் கரிகாலன் என்று நெகிழ்வதிலும், தாராவியை உயர்த்துகிறேன் என்று மக்களிடம் பேசி கார்பரேட் சூழ்ச்சியை அறிந்து மாறுவதிலும் மின்னுகிறார்.

அடுத்தது "அஞ்சலி பட்டீல்" தாராவியின் பெண் போராளி அறிமுக சீனிலேய அள்ளுகிறார்.

சமுத்திரக்கனி காலாவின் நண்பராக வருகிறார். சதா போதையில் தள்ளாடியபடியே தள்ளாடாத பங்களிப்பு. படம் முழுவதும் காமெடி ஒன் லைனில் சிரிக்க வைக்கிறார்.

இவர்களை தவிர திலீபன், மணிகண்டன், சாயாஜிஷிண்டே, அருந்ததி, சம்பத் என்று ஒரு பெரிய கூட்டமே சொன்ன வேலையை செய்திருக்கிறது.

ஹரிதாதாவாக வரும் நானா படேகர் ரஜினிக்கு சரியான வில்லன், வெறும் அந்த கண்ணாடி மூலம் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். தாது "He is a good man don't kill him "என்று சொல்லும் பேத்தியிடம் சிரிக்கும் புன்சிரிப்பில் நானா நானாதான்.

படத்தில் நெகடிவ்............அந்த எரிச்சல் மூட்டும் ராப் பாடகர்கள், கதையை முடிக்க குழம்பியிருப்பது, இன்னும் வலுவாக காட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இயக்குனரின் சறுக்கல்.

காலா....................ரஞ்சித்தும் ரஜினியும் செய்த சரவெடி






Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

ஆதி said...

அருமை

கும்மாச்சி said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஆதி.

சிகரம் பாரதி said...

நான் இன்னும் காலா பார்க்கவில்லை. விமர்சனம் அருமை.

நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

வருண் said...

படம் நல்லா வந்திருக்குங்க! clint eastwood போல் ஏன் தமிழ் நடிகர்கள் வயதான பிறகு மிளீர முடியவில்லை என்றூ நான் நினைத்ததுண்டு.

ஏன் முடியாது என்பதுபோல் ரஜினியை வைத்து காலா எடுத்துள்ளார். வெற்றீயும் பெற்றூள்ளார்!

எனக்கு படத்தில் குற எதுவும் தெரியலை.

ரஜினி தன் மனைவி தன்னை நம்பி வந்தவள் அவ மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்றூ முன்னால் காதலியிடம் சொல்லுவது பெண்கள வெகுவாக கவரும்.

படம் எந்த ஒரு நிமிடமும் போர் அடிக்கவில்லை!

Kaala is a classic. It will live for ever.

சிவாஜிக்கு ஒரு முதல் மரியாதை

ரஜினிக்கு ஒரு காலா!



sarathy said...

படம் முழுக்க அனுபவித்துப் பார்க்கும்படியா, அலுப்பு தட்டாமல் இருக்க எல்லோரையும்கூடவே அரவணைத்து சென்ற யாவரையும் பாராட்டவும் வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

இன்னமும் பார்க்கவில்லை. நல்ல விமர்சனம்.

Anonymous said...

I have learn some good stuff here. Certainly worth bookmarking for revisiting.

I surprise how much attempt you place to make this kind of great informative site.

Unknown said...

After

Srikanth said...

Padam mokkai. Rajini yin vegam kuraindhu vittadhu. vayadhu aagi vittadhu nandraga therigirathu

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.