Tuesday 12 June 2018

"பெத்த பாஸு"லுவும், "புஸ்வரூபமும்"

பெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் "உலக்கை" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார்.

போனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து "ஒட்டு" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ்,  மருத்துவ முத்தம் என்றும், "ரோமரிஷி" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, "வாய்புரி" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா "எஸ்" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள்.

இந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு "புஸ்வரூபம் 2"  ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் "தேச துரோகி"  என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி "போராட்டம்" "நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

பெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே  "நசரத்பேட்டில்" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், "பன்ச்" புஸ்வரூபம்  எடுத்து  வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே!!!!!

நடக்கட்டும்.


Follow kummachi on Twitter

Post Comment

23 comments:

Anonymous said...

உலக்கைக்கு பதிலாக கிழட்டு ரஜினியை போட்டால் சூப்பராக இருக்கும்

கும்மாச்சி said...

வந்துட்டார்யா அட்ரஸ் தெரியாத அனானி.

Unknown said...

Avuru anonymous illa sunanymous

கும்மாச்சி said...

ஹ..ஹ்..ஹா 😊

நம்பிக்கை ராஜ் said...

கும்மாச்சிதான் உன்னோட அட்ரஸ் ஆ ?

நம்பிக்கை ராஜ் said...

ஆமா கிழட்டு கூ ரஜினி தூத்துக்குடியில் உளறி செம செருப்படி வாங்கினான் ..
ரஞ்சித் மட்டும் இல்லை காலா ஓலா ஆகி இருக்கும்

கும்மாச்சி said...

ஆமா உலக்கை ரொம்ப இளைஞர். நம்பிக்கை ராஜ் அதென்ன கிழட்டு கூ............உலக்கை என்ன இளைஞர் சூ..வா..

கும்மாச்சி said...

கடைசியில அனானிக்கு தனது அடையாளம் தெரிந்துவிட்டது போல..........

நம்பிக்கை ராஜ் said...

உலக்கையும் கிழட்டு கூ தான்
ஆனால் கொஞ்ச வருஷம் தாக்கு பிடிக்கும்
ஆனால் கிழட்டு காந்த் .... அடுத்த வருஷம் தாக்கு பிடிக்குமா ?

கும்மாச்சி said...

யாரு யாரு எத்தனை வருஷம் தாக்குப்பிடிப்பார்கள் என்று எனக்கு தெரியாது, வாலிப வயோதிக அன்பர்களுக்கு நாடி பிடித்து பார்க்கும் உமக்குத்தான் தெரியும்.

கும்மாச்சி said...

நம்பிக்கை ராஜ் "கொண்டைய மறைங்க" அப்பட்டமா நீங்க எங்க இருக்கிங்கன்னு EPIRB சொல்லுது.

நம்பிக்கை ராஜ் said...

நான் எங்கேயாவது இருந்திட்டு போகின்றேன்
அதுக்கும் கொண்டைக்கும் என்ன தொடர்பு ?

நான் இந்தியாவில் இல்லை

நம்பிக்கை ராஜ் said...

வாலிப வயோதிக
.
குஜினி வயோதிப அன்பர் தான்

கும்மாச்சி said...

நம்பிக்கை ராஜ் நீங்க இந்தியாவில் இல்லை எனபது எங்களுக்கு தெரியும்...சிக்னல் அப்பப்போதான் கிடைக்குது போல.

நம்பிக்கை ராஜ் said...

எப்போவோ கிடைச்சிட்டு போகுது
அதுக்கும் என் கமெண்ட் க்கும் என்ன தொடர்பு ?
இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் கருத்து சொல்ல கூடாதா ?

நம்பிக்கை ராஜ் said...

நீங்க கூட ME தான் இருக்கீங்க

கும்மாச்சி said...

கருத்து சொல்லுங்க நம்பிக்கை, வரவேற்கிறோம், அதனால்தான் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

கும்மாச்சி said...

எங்கேயோ இருந்திட்டுப் போறேன், இனிமே நம்பிக்கை ராஜ் என்ற பேர்லதான் வருவீர்களா? இல்லை அமிர்த ராஜ், ஆனந்த் ராஜ், அசோக் ராஜ் வேறு ஏதாவது புனை பெயர்களில் வருவீர்களா?

நம்பிக்கை ராஜ் said...

திரும்ப வருவேன் என்னும் நம்பிக்கை இல்லை
நேரம் கிடைத்தால் மட்டுமே

வருண் said...

என்னங்க விசுவரூபம்-2 பத்தி பேசாமல், ரசினி பத்தி விமர்சனமா இருக்கு? அனானி/நம்பிக்கை ராஜ்/தமிழர் வரலாறூ னு சொல்லி வந்த பின்னூட்டமெல்லாம் என் ஸ்பாம் பாக்ஸ்ல இருக்கு பத்திரமா.

பிக் பாஸ் நான் பார்க்கிறது இல்லை

வி-2, 5 வருடத்துக்கு அப்புறம் வெளீவருது. ஆஸ்கர் ரவியை இந்த வசூல் காப்பாத்தட்டும். ;)

ஸ்ரீராம். said...

பிக் பாஸ் லாம் ஏமாற்றுவேலை. போர். மக்களைப் பைத்தியமாய் அடிக்க நிறைய வழிகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

ஆதி said...

நாகரிகமாக கருத்திடுவது அனைவருக்கும் நல்லது

கும்மாச்சி said...

இந்தப் பதிவுல என்ன அநாகரிகம்.?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.