Wednesday 3 February 2010

கடமைக்கு அவன், இவன், எவன்..........................


கண்மணிகளே உடன் பிறப்புகளே ரத்தத்தின் ரத்தங்களே மேலும் என்னை வாழ வைத்து என் பெரிய, சிறிய, நீள, மற்றும் அகல முதலிய எல்லாக் குடும்பங்களையும் வாழ வைக்கும் தொண்டரடிப் பொடிகளே, வீழ்வது தமிழாக இருப்பினும் வாழ்வது என் குடும்பம் ஆக இருக்கும் என மன்னா, சிறியார் பாசறையிலே புழன்ற நான் உங்களிடம் சூளுரைக்கிறேன்.

ஈழ மக்களின் துயர் போக்க மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தியேழு மடல்கள் வரைந்து அவர்கள் கதையை இனிதே முடித்தேன். மேலும் அவர்கள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் இருந்த பொழுது காலையில் பன்னிரண்டு இட்லி வடைகரியுடன் உண்டு, மதிய உணவு வரை உண்ணாவிரதம் இருந்து நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு அருந்தொண்டாற்றினேன். இதை உணராத பேடிகள் கயமை பேசி என் மீது காரி உமிழ்ந்து வெஞ்சினம் தீர்க்கிறது.


நமது விவசாயிகள் பாசனத்திற்கு காவிரி நீர் இல்லாமல் எலிக்கறி உண்ட பொழுது, எட்டாயிரத்து நானூற்றி எட்டு மடல்கள் என் ரத்தத்திலே தோய்த்து எழுதி, பின்பு தலைநகராம் டில்லிக்கு கோமகன் கொழுகிரியும், வீரப் பெண் மொழிமனியும், பின் வருமா, மாலு, கூஜா போன்ற கழக கண்மணிகளையும் உடன் அனுப்பி பிரதமரிடம் காவிரி நீர் இல்லா விடினும் ஒரு பெருச்சாளி கறிக்காவது வழி செய்து கொடுங்கள் என்று மன்றாடி ஒரு லட்சத்தி அறுபதாயிரம் விவசாயிகளுக்கு நான்கு லட்சத்தி எண்பதாயிரம் பெருச்சாளிகளை பிடித்துக் கொடுத்து அவர் தம் கண்ணீர் பெருக வழிவகை செய்தேன்.


எதிர் கட்சிகள் நான் இந்த அருந்தொண்டாற்றியதை பாராமல் ஒடனாட்டிலே ஒண்டிகுடித்தனம் செய்து ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதை இத்தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப மறுக்கிறது.


தமிழனுக்கு ஒரு தீங்கு வரும் என்றால் என் குடும்பம் கொதித்தெழுந்து கும்மியடித்து டெல்லி புறப்படும். அங்கு உதி”ரம்” குடித்து கும்மாளமிட்டு தமிழர் துயர் தீர்க்க பாடுபடும்.


இதையெல்லாம் புரியாமல் பேசும் புல்லுருவிகள் கலை நிகழ்ச்சி காண்பதில் குற்றம் சொல்கின்றன. இந்த தள்ளாத வயதிலும் எனது கலையுலகக் கண்மணிகள் விழா எடுக்கும் வேளையிலே என் கடமையாற்ற ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து இதோ உங்கள் முன் நிற்கிறேன், மன்னிக்கவும் அமர்ந்திருக்கிறேன்.


கலையுலகம் இப்பொழுது நம்மிடையே குத்தாட்டம், வெத்தாட்டம் என்று தங்கள் திறமைகளை மறைக்காமல் நம்மிடையே காட்டி, ஆடை அகற்றியவள் அருந்தமிழள் என்று புது மொழி கூறி என்னை கௌரவிக்க இருக்கிறார்கள். கண்மணிகளே மன்னா, சிறியார் வழியே வந்த நாம் கலைக்கு அருந்தொண்டாற்றுவோம்.


போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் என்னை இந்த கடமை உணர்ச்சி ஆற்றுவதை தடுக்க இயலாது என்று கூறி, வருகின்ற முதலமைச்சர் மாநாட்டிலே எனக்கு பதில் அருமைத் தம்பி துணை அமைச்சர் கலந்து கொண்டு உங்கள் துயர் தீர்க்க என் கடமை ஆற்றுவார்,

வீழ்க தமிழ், வாழ்க என் குடும்பம்.

(தட்றான் பாருங்க வெறும் பயலுக)

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

vasu balaji said...

:)). இது டாப்பு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முரசொலியில வேலை நிச்சயம்..
ஆனா சார்.. இப்ப இல்லீங்க.. வெய்டு.....

கும்மாச்சி said...

வாங்கண்ணே பட்டா பட்டி, ப.மு.க. வேலை முன்பு மற்றதெல்லாம் ஜூஜூபி.

சக்தி said...

Awsome !!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்க சார்.. ப்யூஸ் புடிங்கி உட்டுடானுக இந்த
இரட்டை குழல் துப்பாக்கிக...

( அய்யா.. நான் 'எங்கள் அருமை அண்ணன் அஞ்சா நெஞ்சனையோ',
பழைய ரஷ்ய அதிபர் 'ஸ்டாலினையோ'... குறிப்பிடவில்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள
கடமைப்பட்டுள்ளேன்...

எனது கருத்து தவறாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் , ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
உங்கள் புஜம் துடித்தால்....
தற்போதைய ப.மு.க தலைவர் 'ரெட்டை வால்'ஸ் மற்றும்
ராணுவத்தளவிதி 'வெளியூரான்' அணுகவும்..)

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா முடியல இந்த நையண்டியை படிச்சு சிரிக்காம இருக்க

settaikkaran said...

அப்படிப்போடுங்கண்ணே!
சிரிப்பாலே சில பேரை அம்பேலாக்க முடிஞ்சிருந்தா, இன்னேரம் தமிழ்நாடு உருப்பட்டிருக்கும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.