Sunday 21 February 2010

குடி கொடுத்த(கெடுத்த) கோமான்


இன்னாடா கவாலி இந்தா லேட்டா வர.

ஏன் இன்னா மேட்டரு, கடிய இஸ்து பூட்டிட்டானுன்களா பாடுங்க

அது ஒன்னியும் இல்ல மச்சி, எம்மா நேரந்தான் சர்க்கடிக்காம குத்த வச்சு குந்திக்கினுகீது.

சரி சரி, விரசா போய், க்வாட்டரு வாங்கிக்கின்னு வந்துடு, தோ முநியம்மக்கிட்ட ரெண்டு முட்ட தோசை சொல்லிடுறேன்.

ஏண்டா கவாலி, அது இன்னிடா வியா எடுத்தானுங்கோ, அப்பாலே அடிச்சிக்கரானுங்கோ, ஒன்னியும் பிரிலபா.

ஹஹான்பா இப்போ எங்கியப் பாரு, தல, தளபதி, ஜாக்காறு, தலிவருன்னு ஒரே அலம்பல் உட்ரானுங்கோ.

இவனுங்களுக்கு வேறு பொயப்பில்லபா இன்னா செயவானுங்கோ, அதான் பிகுருங்கள வச்சிக்கினு பிலிம்
காட்ரானுங்கோ. அப்பாலே அச்சிகிரானுங்கோ.

அத்தே விடு, கையிலே இன்னாபா சீட்டு வச்சிக்கினுகிரே,

நம்ம டாஸ்மாக் தொகீது பாரு இந்ததேதியில்லாம் மூடி நமக்கு ஆப்பு வக்கிரானுங்கோ கவாலி.

ஜனவரி 26, 30
மார்ச் 22
மே 1
ஜூலை 14
ஆகஸ்ட் 15
செப்டம்பர் 3,14
அக்டோபர் 2,8
நவம்பர் 9

இந்த சீட்ட ஏம்பா எம் முவத்தாண்ட காட்டி மேர்சல் செய்றே.

அது இல்ல கவாலி நம்மகண்டி தலிவருக்கு ஒரு வியா எடுத்து “குடி கொடுத்த கோமான்” ன்னு ஒரு பட்டம் கொடுத்தொம்னு வச்சிக்கோ அல்லா நாளும் கடிய தொரப்பாருபா.

அடபோபா நம்மகிட்டே டான்ஸ் ஆடுறே பிகுருங்க இல்லிய, அதுக்கு எங்கப் போவுதாம்.

இன்னா சொல்லிகினே நீ, நம்ம காசிமோடு கனகாவ வுட்டு கூத்து கட்டினா போவுது, “சும்மா சித்தாள கூட்டிகிட்டு செவுரோரம் சாச்சிக்கிட்டுன்னு” கனகா அப்படி ஆடிக்கிச்சின்னு வச்சிக்கோ அல்லாசனமும் அப்படியே சரக்கு உடாமே மப்பாவும். தலிவரு அப்படியே ஆடாம குந்திக்கின்னு சிரிச்சிகினு இருப்பாரு, அப்பாலே கடிய அல்லாநாளும் தொரப்பாரு.

அதுகண்டியில்ல அல்லாருக்கும் டிவி குடுக்கிராறு,நிலம் குடுக்கிராறு மவராசான், நமக்கு இலவசமா தெனிக்கும் ஒரு க்வார்டரோ,ஹாபோ குடுப்பாருபா.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

settaikkaran said...

அண்ணாத்தே, கவுஜ சொல்றதுக்கு ஆளு ரெடி! வெளா எப்போ?

கும்மாச்சி said...

வியா எடுத்துருவோம் தல, சேட்டை நீங்கதான் தொகுப்பாளர்.

அண்ணாமலையான் said...

நமக்கு ஒரு அழைப்பு அனுப்புங்க டான்ஸ் பாக்க வரேன்

கும்மாச்சி said...

அண்ணாமலையான் கட்டாயம் வந்துடுங்க, அப்படியே கவிதை படிக்க தயாரா வாங்க .அப்புறம் தல மாதிரி வற்புறுத்தினாங்கன்னு எல்லாம் போட்டுக் குடுத்திடாதிங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. கனகா கூட நான் ஆடறேன் சார்..
ஹி..ஹி..

ஆனா , தலைவரப் பாராட்ட மாட்டேன்..
ஓ.கே சொல்லுங்க.. அடுத்த ப்ளைட் புக் பண்றேன்..
ஹி..ஹி

கும்மாச்சி said...

அதெப்படி தலீவர புகழ மாட்டீங்களா, சரி விடுங்க, கனகாக்கு நூறு அடி பின்னாலே தான் ஆடனும், முன்னாடி விடமாட்டேன். அப்பாலே ஆறு அவுரு முன்னாடியே வந்துடு தர்தா, அப்பாலே செல்ல போட்டு ஒடச்சு பேஜார் பண்ணாதே.

Chitra said...

அது இல்ல கவாலி நம்மகண்டி தலிவருக்கு ஒரு வியா எடுத்து “குடி கொடுத்த கோமான்” ன்னு ஒரு பட்டம் கொடுத்தொம்னு வச்சிக்கோ அல்லா நாளும் கடிய தொரப்பாருபா.


........ சூப்பர் ஐடியா கொடுத்து இருக்கீங்க. செஞ்சாலும் செஞ்சுருவாங்க.

மங்குனி அமைச்சர் said...

//அதுகண்டியில்ல அல்லாருக்கும் டிவி குடுக்கிராறு,நிலம் குடுக்கிராறு மவராசான், நமக்கு இலவசமா தெனிக்கும் ஒரு க்வார்டரோ,ஹாபோ குடுப்பாருபா//

நல்லாதான் இருக்கும். அப்படியே கிளாஸ், வாட்டரு, சைடிஷ்சு, பீடி எல்லாத்துக்கும் ஒரு தபா கோரிகக வைசுடுப்பா

Thenammai Lakshmanan said...

நல்ல புது விதமா இருக்கு கும்மாச்சி உங்க ஸ்டைல் இதுல கலக்குறீங்க

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.