Monday, 3 May 2010

மேல்சபையினால் யாருக்கு லாபம்?


கேள்விக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல.

விரல் சூப்பும் சின்ன பாப்பாவிற்கு கூட தெரியும்!

தமிழக அரசு கடந்த வாரம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது. அனுமதி அய்யா “ஆயாவிடம்” சொன்னால் கிடைத்துவிடும். இதனால் செலவு அதிகமாகாதா என்ற கேள்விக்கு வெறும் “பதினைந்து லட்சம்” தான் ஆகும் என்கிறார். எது ஒரு உறுப்பினருக்கு ஒரு மாதத்திற்கா? ஐயோ கண்ணை கட்டிகிறதேடா சாமி.

உறுப்பினர் சம்பளம், தங்கும் விடுதி செலவு, கார், பாதுகாப்பு, அலவன்ஸ் லொட்டு லொசுக்கு என்று இன்னும் அதிகமே ஆகும்.

மேலும் மேலவையின் அவசியமென்ன? என்ன முடிவு கீழவையில் எடுக்க முடியாமல் மேலவையில் எடுத்து கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் ஐயா இதயத்தில் இடம் கொடுத்த எல்லோரையும் மேலவையில் இறக்கி வைக்கப் போகிறார். இதயத்தில் பளு தாங்கவில்லை போலும்.

அதற்குள் குஷ்புவிற்கு இடம், குன்னாத்தவிற்கு இடம் என்று பேச்சு அடிபடுகிறது. கஷ்டம்டா சாமி. அது சரி இவ்வளவு விழா எடுத்து எத்தனை விருது கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது போட்டால் தானே நாளைக்கு தேர்தலில் ஒட்டு பொறுக்க வருவார்கள். கூடவே சொம்படிக்கிற கும்பலுக்கும் கொடுங்கப்பா.

ஏற்கனவே இலவசம் என்ற பெயரில் பொது மக்கள் பையில் ஆட்டையைப் போட்டாகிவிட்டது. இப்பொழுது அவனிடமிருக்கும் மிச்சமீதிக்கும் வெச்சுட்டாங்க ஆப்பு.
மக்கள் எப்பொழுது விழித்துக்கொள்வார்கள்.

அது சரி “சரக்கும் சால்னாவும்” கிடைச்சா மேல்சபை, கீழ்சபை, நடுசபை, எது வந்தா நமக்கென்ன?, டாஸ்மாக் திறந்து சரக்கு கிடைத்தால் போதும்.

மின்சார பற்றாகுறை
தண்ணீர் பற்றாக்குறை
அரிசி தட்டுப் பாடு
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

ஆனால் டாஸ்மாக்கில் சரக்குக்கு தட்டுப்பாடே கிடையாது.

வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Chitra said...

மின்சார பற்றாகுறை
தண்ணீர் பற்றாக்குறை
அரிசி தட்டுப் பாடு
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

ஆனால் டாஸ்மாக்கில் சரக்குக்கு தட்டுப்பாடே கிடையாது.

வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.........குறை ஒன்றும் இல்லையே - டாஸ்மாக் நிரம்பி வழியும் போதினிலே.....

சேட்டைக்காரன் said...

மேல்சபையிலே நிறைய நடிகைகள் வந்திட்டா அது Femaleசபையாயிடாது? :-)

கும்மாச்சி said...

ஆம் குறை ஒன்றும் இல்லைதான்!!!!!

வருகைக்கு நன்றி சித்ரா

கும்மாச்சி said...

சேட்டை வருகைக்கு நன்றி.

பட்டாபட்டி.. said...

என்னது குஷ்புவா?...

ஆகா..சங்கை எடுத்து ஊத ஆரம்மிக்கவேண்டியதுதான்...

ஹேமா said...

வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.

கும்மாச்சி வேற சொல்லத் தெரில !

அஹோரி said...

கீழ் சபை - கப்ளிங் மண்டையன் சொத்து
மேல் சபை - போண்டா கிரி சொத்து

vignaani said...

சட்ட அவையிலேயே ஏதோ பாராட்டு கூட்டம் போலத் தான் நடவடிக்கைகள் உள்ளன; அவைக்கு உள்ள மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை. மானாட மயிலாட நடப்பதில்லை தான்.
மேலவையில் கலைக்கும் கலைஞர்களுக்கும் முதன்மை அளித்து, சின்னத்திரைக்கும் சரியான பங்கு அளித்தால், மானாட மயிலாட அவையிலேயே நடத்தலாம்.
லோக் சபா, ராஜ்ய சபா போல தமிழக அவைகளுக்கும் சானல் ஒன்று வேண்டும்.
இலவச தொலைக் காட்சி பெட்டியில் மக்களும் பார்த்து மகிழ்வார்கள்

VAAL PAIYYAN said...

SUPERB ARTICLE
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
junior vaalpaiyyan

கும்மாச்சி said...

ஹேமா வருகைக்கு நன்றி

வால்பையன் உங்கள் ப்லோகிற்கு வருகை தருகிறேன்.

பட்டா பட்டி, குஷ்பூ கூட யாரு வருவாங்கன்னு நீங்க ஒரு பதிவு போடலாம்.
உங்கள் இடுகையில் “ரோசமுள்ள பன்னி” கிராமத்தில் நுழையாது, உங்களுடைய பிரத்தியேக டச்.

விஞ்ஞானி உங்களுடைய கருத்து நிதர்சனம்

அஹோரி ரொம்ப சரி ரெண்டு சபையும் பங்கு பிரித்தாகிவிட்டது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.