Sunday 18 July 2010

கலக்கல் காக்டெயில்-2

ஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே


இந்த வருடம் பருவமழையில் இருபது விழுக்காடு குறையும் என்று வானிலை நிபுனர்கள் கூறுகிறார்கள். அது கூட பெய்தால் ஏதோ பிழைத்தோம்.

விளைச்சல் கம்மி என்றால் விலைவாசி எங்கு போய் நிக்குமோ தெரியவில்லை.

போதாதற்கு நாட்டில் மாவோயிஸ்டுகள் வேறு குடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீரில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் போகாமல் ராணுவம் அழைக்கப்பட்டு அதைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அல்லக்கை மந்திரி எல்லாம் இந்தியாவையும், மந்திரிகளையும் நக்கலடித்து டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம கீழ இருக்கிற குஞ்சு நாடெல்லாம் நம்ம போடற பிச்சையில் வாழ்ந்துக் கொண்டு நம்ம மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை ஆள்கிற “கிழபோட்ல்டுகள்” என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஸ் அப்படா கண்ணைக்கட்டுதே.



ரசித்த கவிதை



வெயிலில்


விளையாடிக்கொண்டிருக்கிறாயா?


வெகுளித்தனமாகச்


சிரித்துக்கொண்டிருக்கிறாயா?


இளையராஜாவின்


இசையில் இணைந்திருக்கிறாயா?


இளந்தூறல்


மழையின் நனைகின்றாயா?


களையெடுக்க


களத்துமேட்டுக்குச் செல்கின்றாயா?


மேற்படிப்புக்காக


மெட்ராசுக்குச் செல்கிறாயா?


பதினாறு புள்ளிக் கோலத்தை


வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயா?


பக்கத்துவீட்டு அக்காவிடம்


கதைபேசிக் கொண்டிருக்கிறாயா?


என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


உனக்காக ஒருத்தி பிறந்திருப்பாளென்று


சொன்னாள் அம்மா


என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்


நீ………..



ரசித்த நகைச்சுவை



சர்தார்ஜி ஒருவர் டில்லியிலிருந்து அமிர்தசரஸ் காரில் ஒரே நாளில் சென்றாராம்.

திரும்பி டில்லி வருவதற்கு பத்து நாட்கள் ஆகியதாம்.

டில்லி திரும்பியவுடன் நண்பர் ஒருவர் கேட்டாராம், ஏம்பா போகும்பொழுது ஒரு நாளில் சென்றுவிட்டாய், திரும்பி வருவதற்கு பத்து நாட்கள் ஆகிவிட்டது?.


அதற்கு சர்தார்ஜி என் காரில் முன்னே செல்வதற்கு ஐந்து கியர்கள் உள்ளன, பின்னல் செல்வதற்கு ஒரு கியர் தான் இருக்கிறது என்றாராம்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Jey said...

//விளைச்சல் கம்மி என்றால் விலைவாசி எங்கு போய் நிக்குமோ தெரியவில்லை.//

நின்னா கால் வலிக்குதுன்னு அல்ரெடி வானத்துல பறந்துகிட்டுதான் இருக்காம்.

//போதாதற்கு நாட்டில் மாவோயிஸ்டுகள் வேறு குடைந்துக் கொண்டிருக்கிறார்கள்//

ஆமாங்க பஞ்சாயத்தக் கூட்டி ஏதும் பைசல் பண்ணமுடியுமானு கொஞ்சம் பாருங்க, புன்ணியமா போகும்..
//காஷ்மீரில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் போகாமல் ராணுவம் அழைக்கப்பட்டு அதைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.//
இந்த கொசுத்தொல்லை எப்பதான் தீருமோ தெரியலைங்க..
///பாகிஸ்தான் அல்லக்கை மந்திரி எல்லாம் இந்தியாவையும், மந்திரிகளையும் நக்கலடித்து டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்./

பாவம் , வேஅர் என்னதான் பண்ணுவாங்க, அவிய்ங்களுக்கும் பொழுது போகனுமில்ல...

///நம்ம கீழ இருக்கிற குஞ்சு நாடெல்லாம் நம்ம போடற பிச்சையில் வாழ்ந்துக் கொண்டு நம்ம மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.///

குஞ்ச( ஆபாசமாயிருச்சுங்களா!!) கட் பண்ணினா சரியாப்போகும், எனோ பண்ணாம விட்டிட்டிருகாங்கா... என்ன காரணமா இருக்கும்ம்...

//நாட்டை ஆள்கிற “கிழபோட்ல்டுகள்” என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை.///

பிஸியா லெட்டர் எழுதிடிருகாக, தேவையில்லாம, என்ன் வம்புக்கு இழுக்குரீங்க...

Jey said...

ஹஹஹா ஜோக் சூபர் ரசித்தேன்:)

Jey said...

//களையெடுக்க


களத்துமேட்டுக்குச் செல்கின்றாயா?///

நமக்கு கவுஜ அவ்வளவா புரியாதுங்க , இருந்தாலும், இந்த வரிகள்ல கருத்டுபிழை இருக்குராமாதிரி தெரியுதுங்க.
களத்துமேட்ல களையெடுக்க மாட்டாங்க, அருவடை செஞ்சதை சுத்தப்படுத்தி எடுக்கதான் களத்துமேட்டை பயன்படுதுவாங்க...
மத்தபடி உங்க பதிவு சூப்பருங்க..:)

பித்தன் said...

ஜோக்கு ரொம்ப பழசு.......

பித்தன் said...

ஆமா காக்டைல்ன்னு சொல்லிட்டு மூனே மூணு வரைட்டி ஊத்துனா எப்பாடி....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.